Published:Updated:

150 மைல் தூரம்... காணாமல் போன பனிப்பாறைகள்..!- அலாஸ்காவில் உச்சம் தொட்ட வெப்பம்

உலக நாடுகளில் உள்ள பனிப்பாறைகள் கிடுகிடுவெனக் கரைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 Alaska Glacier
Alaska Glacier ( Truthout )

உலக நாடுகள் அனைத்துக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள ஒரே விஷயம், புவி வெப்பமயமாதல். மனிதனின் செயல்பாடுகளால் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு, வெப்ப மயமாதல் அதிகரித்துள்ளது. இதைக் குறைக்கவே பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, பல நாடுகள் அதைப் பின்பற்றி வருகின்றன. மேலும், உலகில் உள்ள பல காலநிலை ஆர்வலர்களும் வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டும் எனக் குரல்கொடுத்துவருகின்றனர்.

Global Warming
Global Warming

இவர்களின் வரிசையில் சிறுவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமியும் புவி வெப்பமயமாதலுக்கு எதிராக அனைத்து தலைவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், வெப்பமயமாதல் காரணமாக உலக அளவில் கடல் நீர்மட்டம் 2 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நிலை நீடித்தால், 2100-ம் ஆண்டில் கடல் நீர்மட்டம் தற்போதைவிட 4 மடங்கு அதிகரித்து, மக்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

ஐஸ்லாந்தில் உள்ள ஒக்ஜோகுல் (Okjokull) என்ற பகுதியில் உள்ள பனிப்பாறைகள் மிகவும் வேகமாகக் கரைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இதேநிலை உலகம் முழுவதும் உள்ளதாகவும் நாம் பனிப்பாறைகளின் இறுதி நாள்களை எண்ணிக்கொண்டுள்ளோம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1880-ம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்டு வரும் வெப்ப அளவில், இந்த வருடம் ஜூலை மாதம்தான், முன் எப்போதும் இல்லாத அளவு அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

Glacier
Glacier

அதிக வெப்பம் நிறைந்த ஜூலை மாதங்களில், பத்தில் ஒன்பது மாதங்கள் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இருந்துள்ளன. இந்த 20-ம் நூற்றாண்டில் மட்டும் ஜூலை மாதங்களில் 43 முறை அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் மிகவும் வேகமாக உருகுவதைப் பார்த்து ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் உள்ளனர்.

எரியும் பிரேசில், உருகும் கிரீன்லாந்து... காலநிலை மாற்றம் கொடுத்திருக்கும் ரெட் அலர்ட்!

இதே நிலை 2070-ம் ஆண்டு வரை அங்கு நீடித்தால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பனிக்கட்டிகள் உருகுவது அதிகரிக்கும். கிரீன்லாந்தில், கடந்த மாதம் ஒரே நாளில் 12.5 பில்லியன் அளவிலான பனிப்பாறைகள் உருகி உச்சம் தொட்டுள்ளது. ஒருவேளை கிரீன்லாந்தில் இருக்கும் பனிப்பாறைகள் அனைத்தும் உருகினால், உலக அளவில் கடல் நீர் மட்டம் 20 அடி அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Glacier
Glacier

இதற்கிடையில், அலாஸ்காவில் உள்ள பனிக்கட்டிகள் முற்றிலும் உருகி, வெறும் பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. அப்படிப் பார்த்தால், முன்னர் பனிப்பாறைகள் நிறைந்துகிடந்த இடங்களில், 150 மைல் தூரத்துக்கு தற்போது பனிப்பாறைகளையே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய வானிலை சேவை மையம் அறிவித்துள்ளது. இந்த வருடம், அலாஸ்காவின் வடக்கு மாகாணத்தின் வெப்பத்தின் அளவு உச்சத்தைத் தொட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அலாஸ்காவில் பனிப்பாறைகள் முற்றிலும் கரைந்தது, இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2017-ம் ஆண்டும் இதேபோன்று நிகழ்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.