Published:Updated:

இந்தியாவில் அழிக்கப்படும் காடுகள்... அதிர வைக்கும் எண்ணிக்கை! #VikatanInfographics

காடுகள் அழிவதில்லை. மாறாக, மனிதர்களால் அழிக்கப்படுகின்றன.

இந்தியாவில் அழிக்கப்படும் காடுகள்
இந்தியாவில் அழிக்கப்படும் காடுகள்

இந்தப் பூமியில் மனித இனம் மட்டும் இல்லாமல், விலங்குகளும் பறவைகளும் மட்டுமே இருந்திருந்தால் இதுவரை எத்தனை காடுகள் காப்பாற்றப்பட்டிருக்கும். லட்சக்கணக்கான அரியவகை உயிரினங்கள் அழியாமல் இருந்திருக்கும்.

விலங்குகள்
விலங்குகள்
Piqsels

உலகில் தற்போது புவியின் வெப்பநிலை உயர்ந்ததற்குக் காரணம் காடுகள் அதிகமாக அழிக்கப்பட்டதுதான். உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் காடுகள் அழிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 5 ஆண்டுக்காலத்தில் காடுகள், வன உயிர்கள், கடற்கரைகள் மிகப்பெரிய சூழலியல் பாதிப்புக்குள்ளாகின. மக்களின் அனுமதியின்றி, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் காடுகள் தாராளமாக அளிக்கப்பட்டன. ஒருபுறம் காலநிலை மாற்றத்தால் காடுகள் அழிந்து வருகின்றன. மறுபுறம் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களால் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் இயற்கை வழங்கிய கொடை. வன உயிரினங்களுக்கானது. மனிதர்கள் அத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு வாழாது, இயற்கையை அழிப்பதில் மும்முரமாக இருப்பதே பெரும் பிரச்னை.

அழிக்கப்படும் காடுகள்
அழிக்கப்படும் காடுகள்
Piqsels
20 ஆண்டுகளில் 50 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!- ஆய்வறிக்கையில் அதிர்ச்சி

இந்தியாவில், வன பாதுகாப்பு சட்டத்தின் (FCA) கீழ் ஒப்புதல் பெறப்பட்டு, பல்வேறு நிறுவனங்களால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-ம் ஆண்டில் மட்டும் 30,36,642 லட்சம் மரங்கள் பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்பட்டுள்ளன. இதில் மனிதர்களின் ஊடுருவலுக்காகக் காட்டு நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டில் சுமார் 278 சதுர கிலோமீட்டர் அளவுக்கு நிலம் அழிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூலை வரையில் 92 சதுர கிலோமீட்டர் அளவுக்கு நிலம் அழிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அழிக்கப்படும் காடுகள்
இந்தியாவில் அழிக்கப்படும் காடுகள்
Vikatan Infographics

தமிழகத்தில் FCA ஒப்புதல்களின் கீழ் 2018-19-ம் ஆண்டில் 819 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான காட்டு மரங்கள் பல்வேறு திட்டங்களுக்காக அழிக்கப்பட்டது வேதனைக்குரியது.

அழிக்கப்படும் காடுகள்
அழிக்கப்படும் காடுகள்
Piqsels

2019-ல் மனித ஊடுருவலுக்காகக் காட்டு நிலங்களை அதிகம் அழித்த டாப் 5 மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1,446.46 ஹெக்டேர் அளவுக்குக் காட்டு நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (1180.6 ஹெக்டேர்), ஒடிசா (1009.858 ஹெக்டேர்), சட்டிஸ்கர் (972.11 ஹெக்டேர்), மகாராஷ்டிரா (776.3 ஹெக்டேர்) ஆகிய மாநிலங்கள் அதிகமாகக் காட்டு நிலங்களை அழித்துள்ளன.

இந்தியாவில் சாலைகள் அமைக்கவும், ரயில் பாதைகள் அமைக்கவும், குழாய்கள் அமைக்கவும், மின்சார இணைப்புகளுக்காகவும் அதிகபட்சமாக 53.66 சதவிகித காடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அதிகபட்சமாகக் குஜராத்தில் சாலைகள் அமைப்பதற்காக 2019-ம் ஆண்டில் 753.08 ஹெக்டேர் அளவுக்குக் காடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுரங்கம் அமைப்பதற்காக 27.4 சதவிகித காடுகள், அதாவது 2,526.09 ஹெக்டேர் அளவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதில், நிலக்கரி அல்லாத சுரங்கப் பாதைகள் அமைப்பதற்காக 62 சதவிகித காடுகளும், நிலக்கரி சுரங்கத்துக்காக 38 சதவிகித காடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

காடுகள் அழிப்பு
காடுகள் அழிப்பு
Piqsels
சாலைகள், ரயில் பாதைகள் அமைக்கவும், குழாய்கள் அமைக்கவும், மின்சார இணைப்புகளுக்காகவும் இந்தியாவில் 53.66 சதவிகித காடுகள் அழிக்கப்படுகின்றன.
Analysis of Forest Diversion in India, 2019

நீர்ப்பாசனத் திட்டத்துக்காக 14.3 சதவிகித காடுகளும், நீர்மின் நிலையத்துக்காக 0.84 சதவிகிதமும், கனிமத் தாதுகள் எடுக்க 0.24 சதவிகித காடுகளும், அனல்மின் நிலையத்துக்காக 0.64 சதவிகிதமும், மற்ற பயன்பாடுகளுக்காக 2.92 சதவிகித காடுகளும் கடந்த ஆறு மாதத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக Analysis of Forest Diversion in India, 2019 அறிக்கை தெரிவிக்கிறது.

காடுகள் அழிப்பு
காடுகள் அழிப்பு
Piqsels

2014 முதல் 2018 வரையில் சாலைகள், நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், குவாரிகள், நீர் மின்சக்தி நிலையங்கள், ரயில்வே, தொலைத்தொடர்பு கம்பிகள், கேபிள்கள், குழாய்கள், கட்டடங்கள், தொழிற்சாலைகள், பயன்பாட்டுக்கான கட்டடங்கள், எண்ணெய் எடுப்பதற்கான ஆய்வு எனப் பல்வேறு துறைகளுக்கென 794 திட்டங்கள் மூலம் காடுகளை அழிக்கத் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில் 519 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

காடுகள் அழிப்பு
காடுகள் அழிப்பு
Piqsels

காட்டுக்குள் இருக்கும் மரங்களை வெட்டுவது, வன உயிரினங்களின் தாகம் தீர்க்க ஆங்காங்கே குழிகளை வெட்டுவது, வனத்துக்குள் வாகனங்கள் சுலபமாகச் சென்று வர ஜல்லிக் கற்களால் சாலை அமைப்பது, சுவர்கள் எழுப்புவது, வனத்தைச் சுற்றி முள் வேலி அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால், காட்டில் வாழும் உயிரினங்களுக்கு பல்வேறு இடையூறுகளும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக இருக்கின்றன. மேலும், மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் உருவாக உதவுகின்றன. இதுமட்டுமன்றி பல்வேறு வகையில் மனிதர்களுக்கும் உதவுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 50 மில்லியன் ஹெக்டேர் காடுகளை அழித்து நிலப்பகுதியாக மாற்றியிருக்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அழிக்கப்படும் காடுகள்
அழிக்கப்படும் காடுகள்
Piqsels
வறட்சி, வெள்ளம், புயல்... பருவநிலை மாற்றம் மட்டும்தானா விவசாய வீழ்ச்சிக்குக் காரணம்?  ஓர் அலசல்!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் அவசர கட்டத்தை அடைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு வருவது வேதனையான விஷயம்.

காடுகள் அழிவதில்லை. மாறாக, மனிதர்களால் அழிக்கப்படுகின்றன.