Published:Updated:

`அதிவேக காட்டுத் தீ; பெரும் அழிவை சந்தித்த சரணாலயம்! - தவிக்கும் ஆஸ்திரேலியா

குவின்ஸ்லேண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இரவை வேறு இடத்தில் செலவழித்தனர். 150 வீடுகளுக்கும் மேலான வீடுகள் சேதம் அடைந்துவிட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

காட்டுத் தீ
காட்டுத் தீ ( PC: AFP )

ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீயால், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லேண்டில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் `காட்டுத் தீ' ஏற்பட்டுள்ளது. பிரதமர், ஸ்காட் மோரிஸ்ஸன், `1,300 தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக மிலிட்டரி அழைக்கப்படும்’ என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி அந்த மாநில மக்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டுள்ளனர். அதிகாரிகள், தீவிர வானிலை நிலைமைகளினால் மேற்கொண்டு தீ சிட்னி வரை பரவக்கூடும் என்று கூறியுள்ளனர்.

குவின்ஸ்லேண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இரவை வேறு இடத்தில் செலவழித்தனர். 150 வீடுகளுக்கும் மேலான வீடுகள் சேதம் அடைந்துவிட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
`அதிவேக காட்டுத் தீ; பெரும் அழிவை சந்தித்த சரணாலயம்! - தவிக்கும் ஆஸ்திரேலியா
PC: AFP

இரவு குளிராக இருந்தாலும், அதிக வெப்பநிலையும் குறைந்த காற்றின் ஈரப்பதமும் பலமான காற்றும் மேலும் தீ உருவாவதற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தீ அதிகமாகப் பரவி மக்களின் வீடுகளையும் சேதப்படுத்தும் என்பதால், அதற்கும் ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மேலும், இந்தத் தீயால் பாதிக்கப்பட்டது மனித இனம் மட்டுமல்ல, 2,000 ஹெக்டர் அளவுக்கு இருந்த கோலா சரணாலயம் (koala sanctuary) பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான விலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கு முன்பாக நியூ சௌத் வேல்ஸில் நீடித்த வறட்சியை, அதன்பின் பெய்த கனமழை கொஞ்சம் தீர்த்து வைத்தது. ஆனால், இந்தக் `காட்டுத் தீ' சம்பவங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று மக்களும் அதிகாரிகளும் அஞ்சுகின்றனர். கடுமையான மழை பெய்தால்தான் இந்த நிலை சரியாகும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தக் `காட்டுத் தீ' மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பரவியாதவும் கூறப்படுகிறது.

இந்தத் தொடர்ச்சியான `காட்டுத் தீ' சம்பவங்கள் இன்னும் நீள்வதற்குக் காரணம், பருவநிலை மாற்றம். ஆஸ்திரேலியாவில் பருவநிலை மாறியதால் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கரிம வாயு வெளியிடுவதன் அளவைக் குறைப்பது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐ.நா செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகளும் இதை ஓர் எச்சரிக்கையாகக் கொண்டு பருவ நிலை மாற்றம் குறித்துத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது!