‘‘அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிட சிறந்த ஒன்றை உருவாக்க முடியும் என மனித இனம் நம்புவது மாயை. அறிவியல் புரிந்துவைத்துள்ள இயற்கை என்பது, முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக்கூட்டுடன் உலவும் பிசாசு” என்கிறார் என்கிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயப் பிதாமகன் மசானபு ஃபுகோகா. அவரது இந்தக் கருத்தின்மீது பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் மாற்றுக்கருத்துகளுமே இருக்கின்றனதான். ஆனாலும், இந்த உலகின் ஆகப்பெரும் சக்தி இயற்கை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கோள்களை குறுக்கும் நெடுக்கும் அளந்த அறிவியல், கொரோனாவுக்கு முன் திகைத்து நிற்கிறது.

‘உலகின் வல்லரசு நீயா, நானா?’ எனப் போட்டிபோட்டுக்கொண்டிருந்த அரசுகள், உயிர் பயத்தில் உறைந்து கிடக்கின்றன. உலக நாடுகளை, தன் கண்ணசைவில் இயக்கிக்கொண்டிருந்த மேலாதிக்க அமெரிக்கா, அலறிக்கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை காலனி ஆதிக்க நாடுகளாக வைத்திருந்த இங்கிலாந்தின் இளவரசர், நோய்த்தொற்று காரணமாக படுக்கையில் இருக்கிறார்.

உலகின் ஆகப்பெரும் செல்வந்தர்களும் அதிகாரவர்க்கத்தினரும் அடுத்த நொடி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் விழி பிதுங்கி நிற்கிறார்கள். செல்வமும் அதிகாரமும் அவர்களுக்கு உதவ முடியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றன. அந்நிய படையெடுப்பின் போதுதான், நாடுகள் எல்லையை மூடி பாதுகாக்கும். தற்போது உலக நாடுகள் மட்டுமல்ல, மாநிலங்களும் எல்லைகளை அடைத்துக் கொண்டிருக்கின்றன.

கொரோனா என்கிற சின்னஞ்சிறிய நுண்கிருமி, உலகுக்கு உயிர் பயத்தைக் காட்டியிருக்கிறது. மனிதர்களைத் தவிர மற்ற எந்த உயிரினங்களுக்கும் இந்த அச்சமில்லை. இயற்கையின் மீதான, உலக இயக்கத்தின் இயல்பின் மீதான மனிதர்களின் ஆதிக்கம் அதிகமாகும்போதும், வணிகம் வாழ்க்கைமயமாகும்போதும், மனிதனின் தலையில் கொட்டுவைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது இயற்கை. ஆனாலும் திருந்துவதாக இல்லை மனித இனம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் பொறுமையிழந்த இயற்கை, சவுக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதாகவே நாம் கருத வேண்டியிருக்கிறது.

தீமையிலும் ஒரு நன்மை என்பார்களே... அதுபோல், தற்சார்பு வாழ்க்கையின் அவசியத்தை இந்த நெருக்கடி உணர்த்தியுள்ளது.தற்சார்பு என்பது தமிழர்களின் வாழ்க்கை முறை. அது, குகைகளைவிட்டு வெளியில் வாழத்தலைப்பட்ட ஆதிமனிதனின் வாழ்க்கை முறையும்கூட. ஒவ்வொரு பகுதிக்கும் அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்வது, சூழலுக்கு உகந்த தங்கள் தேவைகளை கிராமத்திலேயே பூர்த்திசெய்து நமது வாழ்க்கை. சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களை வைத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!

ஆனால், இன்றைக்கு அப்படி வாழ்கிறோமா? இல்லை... பிழைக்கிறோம். ‘வாழ்வது வேறு... பிழைப்பது வேறு! நம்மில் பலர் பிழைக்கிறோம். ஆனால் வாழ்கிறோமா? இதயம் விரிந்து, அறிவும் வளர்ந்தால்தான் உலகம் தழைக்கும். இதயம் சுருங்கி, அறிவு மட்டும் பெருகினால் உலகம் தவிக்கும்’ என்கிறார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். தற்போது உலகம் தவிப்பதற்கான காரணம் புரிகிறதா?

‘அடி காட்டுக்கு... நடு மாட்டுக்கு... நுனி வீட்டுக்கு’ என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். நெற்பயிரில் மேல் பகுதியில் விளைந்த நெல்லை வீட்டுக்கும், நடுவில் இருக்கும் வைக்கோலை மாட்டுக்கும், அடியில் உள்ளதை அப்படியே வயலிலும்விட்டு உழ வேண்டும் என்பதுதான் அதன் பொருள். நெல்லை அரைத்து, தவிட்டை மாட்டுக்கும் கோழிக்கும் கொடுத்தார்கள். கூர்தீட்டப்படாத (பாலீஸ் செய்யப்படாத) அரிசியை மனிதர்கள் உண்டார்கள். அன்றைக்கு சர்க்கரைநோய் இல்லை. விஞ்ஞான வளர்ச்சியால் நவீன அரிசி ஆலைகள் வந்த பிறகு, அரிசி பட்டைதீட்டப்பட்டது. பழுப்பு நிற அரிசியிலிருந்த சத்துகள் நீக்கப்பட்டு, வெள்ளை அரிசியை உண்ணப் பழக்கப்படுத்தினார்கள். அதனால் ‘சுகர்’ நோயாளிகளாக உலவிக்கொண்டிருக்கிறோம். நம் தற்சார்பு தகர்ந்தது. அவர்களது மருந்து வியாபாரம் சூடுபிடித்தது.

ஒரு பகுதியில் விளையும் உணவுப்பொருள்கள் அதிக பட்சம் 30 கிலோமீட்டருக்குள் அழிய வேண்டும் என்பார்கள். அந்தந்தப் பகுதிகளில் விளையும் விளைபொருள்களை உண்பதுதான் சூழலுக்கும் உடல்நலத்துக்கும் சரியானது. ஆனால், இன்றைக்கு ‘ஃபாஸ்ட் ஃபுட்’ கலாசாரத்தில் சிக்குண்டு கிடக்கிறோம். நமது பாரம்பர்ய உணவுப்பழக்கத்தைக் கைவிட்டதால், பத்து நபர்களுக்கு ஆறு நபர்கள் நோயாளிகளாக அலைகிறோம். நமது நுகர்வு மனப்பான்மைதான் அத்தனை இன்னல்களுக்கும் காரணம். ஆனால், இந்த நுகர்வுக் கலாசாரத்தைத்தான் இன்றைக்கும் உலக நாடுகள் இந்தியா உட்பட, தலையில் வைத்துக் கொண்டாடுகிறது.

‘நமது கருத்துகள், தனிமனிதனின் நோக்கத்துக்கு எதிராக... மக்களின் முன்னேற்றத்துக்கு ஆதரவாக மாற வேண்டும். நாம் நமது அங்காடியைக் கட்டுப்படுத்த வேண்டும். தூரத் தொலைவிலிருந்து பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்’ என்கிறார் தற்சார்பு பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி.குமரப்பா.

`வெளிநாட்டுப் பொருள்களைவிட்டு, உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினாலே பல சிக்கலிலிருந்து விடுபடலாம். ஊரடங்கு உத்தரவு காரணமாக, கிடைத்ததை உண்கிறோம் அல்லவா? இனியும் முடிந்தவரை அப்படியே உண்ணப் பழகுவோம். விளம்பர மோகம் தவிர்ப்போம்.

நமது பாரம்பர்ய உணவுமுறையில் மருத்துவமும் இணைந்தே இருந்தது. ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ப உணவுமுறை இருந்தது. அதனால்தான் ‘உணவே மருந்து’ என்றார்கள். அதை மறந்தோம். இன்றைக்கு ‘மருந்தே உணவு’ என வாழ்கிறோம். நமது பாரம்பர்ய உணவு வகைகள் உடலுக்குத் தரும் எதிர்ப்பு சக்தியின் முன் கொரோனா போன்ற வைரஸ்கள் வாலாட்ட முடியாது.

அதனால்தான், தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது எனப் புரிந்த பிறகு, கொரோனா விஷயத்தில் இந்தியாதான் உலகை வழிநடத்த வேண்டும்’ என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர். டெங்கு காய்ச்சலின்போதும் இப்படியோர் இன்னலைச் சந்தித்தோம். நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நிலையில், மர்மக் காய்ச்சல் என விலகி நின்றது அரசு. ஆனால், நிலவேம்புக் கசாயம் கொடுத்து, டெங்கு காய்ச்சலை குணமாக்கியது சித்த மருத்துவம். கொரோனாவுக்கும் பாரம்பர்ய வைத்தியத்தில் தீர்வு உள்ளதாகச் சொல்கிறார்கள். கபசுர குடிநீரை பலர் மருந்தாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், இதை ஆராய்ச்சி அளவில்கூட மத்திய-மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றன என்பது பரிதாபமே!

மனிதன் வாழ்வதற்கு அடித்தளமானவை சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர். இயற்கையைத் தவிர வேறு எந்தச் சக்தியாலும் இதை உருவாக்க முடியாது. ‘மலர்கள் இல்லாமல் பறவைகள் வாழ்ந்துவிட முடியும். பறவைகள் இல்லாமல் மனிதன் வாழவே முடியாது. பறவைகள் இல்லாவிட்டால் பூச்சிகள், ஒரே நாளில் மனித இனத்தை அழித்துவிடும்’ என்கிறார் பறவையியல் அறிஞர் சலீம் அலி.

உண்மைதான். மனிதர்களைவிட, சக்தி படைத்த உயிரினங்கள் பூமியில் இருப்பதை இப்போதாவது ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரே ஒரு வைரஸ் தாக்குதலைத் தாங்க முடியாத மனித இனம், இனியாவது இயற்கை மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆற்றுப்படுகையின் வயிற்றைக் கிழித்து மணலைத் திருடுவது, வனங்களை அழிப்பது என இயற்கைக்கு எதிரான செயல்பாட்டை நிறுத்திவிட்டு, இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். கூடுமானவரை தற்சார்பு வாழ்வியலுக்குப் பழகிக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு வீட்டுத்தோட்டம் பிரபலமாகி வருகிறது. அது தற்சார்பின் ஓர் அடையாளம். சிறுதானியங்கள், இயற்கை விளைபொருள்கள் மீதான ஆர்வம் அதிகமாகிவருகிறது. இது நல்ல ஆரம்பம். இதன் பயன்பாடு அதிகமானால் பன்னாட்டுப் பொருள்கள் குறைந்து தற்சார்பு மீண்டும் உருவாகும். உச்சக்கட்ட உலகமயமாக்கலில் இருக்கிறோம். சில நுகர்வுகளைத் தவிர்க்க முடியாதுதான். அதுவும் தற்சார்பு என்கிற பெயரில் அறிவியலைப் புறக்கணிப்பதும் மிகப்பெரிய மூடத்தனமே. மனிதகுலத்துக்கு ஆக்கம் தரும் அறிவியல் வளர்ச்சியை மட்டுமே ஆதரிப்போம். இயற்கையை அழிக்கும் நாசகர அறிவியலை அடியோடு எதிர்ப்போம். அப்போதுதான், இதைப் போன்ற வைரஸ் தாக்குதலை இன்னும் மூர்க்கமாக எதிர்க்க முடியும்.