டெல்லியில் வசிக்கும் மஹேந்திர குமார் எனும் ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவின் மீது செடிகளை வளர்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வெப்பத்தை எதிர்கொள்ள இவர் மேற்கொண்ட புதிய முயற்சியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
டெல்லியில் வசித்து வரும் மஹேந்திர குமார் என்பவர் 25 - 30 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாவே தனது ஆட்டோவின் மீது 25 வகையான செடிகளை வளர்க்கத் தொடங்கி உள்ளார். கோடைக்காலத்தில் சூடாக இருக்கும் தனது ஆட்டோ, செடிகளை வளர்க்கத் தொடங்கிய பின் குளிர்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செடிகள் வெப்பத்தை தணிப்பதோடு, இந்த முயற்சியைப் பார்த்துவிட்டு, பயணிகள், கூடுதலாக 10-20 ரூபாய் தருவதாகவும், ஆட்டோவில் ஏறிய பயணிகள், செல்ஃபி எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில், வெப்பத்தை எதிர்கொள்ள இவர் மேற்கொண்ட புதிய முயற்சியை, பலரும் பாராட்டி வருகின்றனர்.