Published:Updated:

`காட்டுயிர்களுக்கு ஊறு விளைவிக்காமல் தீபாவளி'- நீலகிரி மக்களுக்கு கோரிக்கைவிடுக்கும் கலெக்டர்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலத்தை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. எனவே ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர் கொண்டாட வேண்டுகோள்.

diwali crackers banned
diwali crackers banned ( Arun.k )

வனப்பகுதிகள் நிரைந்த நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி தேசிய பூங்கா, நீலகிரி வனக்கோட்டம் என காப்புக்காடுகள் அதிகளவில் உள்ளன. இந்த காடுகளில் அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், பூச்சி இனங்கள், தாவரங்கள் உள்ளன. வனங்களை ஒட்டிய பகுதிகளில் நடமாட, உணவு சமைக்க, தீ ஏற்படும் வகையில் செயல்கள் மேற்கொள்ள தடை உள்ளது. மேலும் தீபாவளி சமயங்களில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த நிலையில் காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீபாவளி கொண்டாட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவயா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

J. Innocent Divya I.A.S
J. Innocent Divya I.A.S

``நீலகிரி மாவட்டத்தை பொறுத்துவரையிலும், மொத்த மாவட்டமும் உயிர் கோளப்பகுதி என வரையறுக்கப்பட்ட, மிக மென்மையான சூழலியலை கொண்ட பகுதியாகும். நம் மாவட்டம் பல்வேறு வகையான வன விலங்குகளுக்குள், அரிய வகை தாவரங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

இச்சூழலில் மாவட்டத்தில் பட்டாசுகள் வெடிப்பதனால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படின் அது மாவட்டத்தின் மென்மையான சூழலியலுக்கும், வன விலங்குகளுக்குள் ஊறு விளைவிப்பதாக அமையும்.

எனவே, இதனை தவிர்த்து நம் மாவட்டத்தின் வனங்களில் காணப்படும் விலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் மாவட்ட மக்களாகிய அனைவருக்கும் உள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தீபாவறியன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கும் படியும், அதிக ஓசை எழுப்பக் கூடிய தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

இதனை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வர். இது போன்றே, பட்டாசு விற்பனையாளர்களும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது. இதனை மீறும் விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி தண்டனையும் விதிக்கப்படும்'' எனக் கூறியுள்ளார்.

diwali crackers banned
diwali crackers banned

இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் சார்பிலும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறியிருப்பதாவது, "காப்பகத்தினை சுற்றியும் மற்றும் உள்ளடக்கியும் பல கிராமப் பகுதிகளும், குடியிருப்புகளும், தனியார் விடுதிகளும் உள்ளன.

வெடியினால் எழும் சப்தம் வனவிலங்குகளை பாதிக்கும். இதனால் வனவிலங்குகளுக்கு அச்சம் அல்லது கோபம் ஏற்பட்டு அதன் இயல்பான தன்மையில் இருந்து மாறி நமக்கு இடையூறு ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. எனவே முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள மசினகுடி, மாயார், சிங்காரா, வாழைத்தோட்டம், பொக்காபுரம், ஆனைக்கட்டி , சிறியூர், தெங்குமரஹாடா மற்றும் அனைத்து சிறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் மாசில்லாத, சப்தமில்லாத பசுமை தீபாவளியாக கொண்டாட வேண்டும்.

diwali crackers banned
diwali crackers banned

வன விலங்குகளுக்கோ, வனப்பகுதிக்கோ, சுற்றுசூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் விதமான எவரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.