Published:Updated:

360 டிகிரியில் சுழலும் கேமராக்கள்; கழுகுப் பார்வையில் உலகம்!- இணையத்தில் வைரலாகும் வீடியோ

கழுகின் பார்வையில் உலகைப் பார்ப்பது இதுதான் முதல்முறை. இயற்கை எவ்வளவு அழகானது என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கழுகு
கழுகு ( REUTERS )

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை, சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று. இயற்கையின் பல அற்புதங்கள் மனிதர்களின் பேராசையினால் அழிந்து வருகின்றன. தந்தங்களுக்காகக் கொல்லப்படும் யானைகள், தோல்கள், நகங்களுக்காகக் கொல்லப்படும் புலிகள், காலநிலை மாற்றம் காரணமாக அழிந்து வரும் பல பறவை இனங்கள், மனிதர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. புவிவெப்பமயமாதல், காலநிலை மாற்றம், பனிமலை உருகுதல் போன்றவை மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

360 டிகிரியில் சுழலும் கேமராக்கள்; கழுகுப் பார்வையில் உலகம்!- இணையத்தில் வைரலாகும் வீடியோ

காலநிலை மாற்றம் காரணம் ஐரோப்பாவின் மிகப்பெரிய வெள்ளை வால் கழுகுகள் அழியும் தருவாயில் உள்ளன. ஆல்ப்ஸ் மலைகளில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை உலகுக்குத் தெரியப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தி ஈகிள் விங்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் `ஆல்பைன் ஈகிள் ரேஸ் புராஜெக்ட்’ மேற்கொண்டது. இந்த புராஜெக்ட்டுக்காக விக்டர் என்ற 9 வயது வெள்ளை வால் கழுகு பயன்படுத்தப்பட்டது. ஆல்ப்ஸ் மலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

விக்டரின் மேற்புறத்தில் 360 டிகிரியில் சுழலும் வகையிலான கேமராக்கள் பொருத்திப் பறக்கவிட்டனர். இதுகுறித்த பேசிய இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், “ வெள்ளை வால் கழுகுகள் அழியும் தருவாயில் உள்ளன. பிரான்ஸிலிருந்தே இந்தக் கழுகுகள் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக மாயமாகிவிட்டன. சுவிஸ் பார்டரில் சில கழுகுகளை மட்டுமே காணமுடிகிறது. பனிமலை உருகுவது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதற்காகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டோம்.

கழுகின் பார்வையில் இந்த உலகைக் காண்பது இதுதான் முதல்முறை. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். சுற்றுச்சூழலைக் காப்பாற்றினால் இந்த வெள்ளை வால் கழுகுகளைக் காப்பாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது