Published:Updated:

காலநிலை மாற்றத்தின் விளைவு... அழிந்துவரும் பூமி! #VikatanInfographics

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் 2017-ம் ஆண்டு 14-வது இடத்திலிருந்த இந்தியா, 2018-ம் ஆண்டில் 5-வது இடத்தில் உள்ளது.

காலநிலை ஆபத்து
காலநிலை ஆபத்து

கடந்த சில வருடங்களாக மனிதர்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்னை காலநிலை மாற்றம். இது குறித்து சர்வதேச அளவில் வெளியிடப்படும் ஆய்வறிக்கைகள் அனைத்தும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன.

Global Climate Risk Index 2019
Global Climate Risk Index 2019

இதன் அடிப்படையில் தற்போது ஜெர்மன் வாட்ச் சுற்றுச்சூழல் சிந்தனை அமைப்பு, 181 நாடுகளில் 1998 முதல் 2017 வரை, தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், இறந்தவர்களின் எண்ணிக்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆய்வுசெய்து, Global Climate Risk Index 2019 என்னும்அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Global Climate Risk Index 2019
Global Climate Risk Index 2019

இந்த அறிக்கையில், ஐக்கிய அமெரிக்காவின் பியூர்டோ ரிகோ (Puerto Rico) முதலிடத்தில் உள்ளது. இதுவரை இந்தத் தீவு 25 முறை காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 5,033.16 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஹோண்டுராஸ் (Honduras), மியான்மர், ஹைட்டி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2017-ல் பியூர்டோ ரிகோ (Puerto Rico) நகரில் மோசமான காலநிலை மாற்றம் காரணமாக 2,978 பேர் இறந்துள்ளனர்.

Infographics
Infographics

இந்தப் பட்டியலில் 2017-ல் வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது. இதில், இறந்தவர்களின் எண்ணிக்கை 2,736 பேர். சுமார் 13,789.86 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில், 2017-ம் ஆண்டு 14-வது இடத்திலிருந்த இந்தியா, 2018-ம் ஆண்டில் 5-வது இடத்தில் உள்ளது.

உலகளவில் கார்பன் டை ஆக்சைடை அதிகம் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவு... அழிந்துவரும் பூமி! #VikatanInfographics

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு, உலகளவில் கடந்த 2017-ல் 10,028 டன் அளவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது. இதில் 6.8 சதவிகிதம் இந்தியாவின் பங்கு உண்டு. அதாவது 2,467 டன் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடை அதிகம் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகளவில் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. 2018-ல் டெல்லியில் அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இந்தியா முழுவதும் வெப்ப அலையால் 100 பேர் உயிரிழந்தனர்.

கார்பன் டை ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு
இயற்கையின் இறுதி ஆயுதம்!  காலநிலை மாற்றம்: ஆபத்தா... வதந்தியா?

ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழையும் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. 2018-ம் ஆண்டு அதிகப்படியாக இழப்புகளை இந்தியா சந்தித்தது. கேரள வெள்ளம், கஜா, டிட்லி புயல், வெப்ப அலைகள் உள்ளிட்ட பேரிடர்களால் மட்டும் 2,081 பேர் உயிரிழந்தனர். அதிலும் குறிப்பாக, கேரளாவில் 324 பேர் பலியானார்கள். 220,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். 20,000 வீடுகள் மற்றும் 80 அணைகள் அழிந்துள்ளன. சேதம் மட்டும் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டது.

Save Earth
Save Earth

ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் இந்த அறிக்கையில், காலநிலை நிகழ்வுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என அனைத்தும் அதிகரித்துக்கொண்டுதான் செல்கின்றன.

இந்தப் பூமி, காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து பல்வேறு விதமான இயற்கைப் பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. அமேசான் காட்டுத்தீ, ஆஸ்திரேலிய காட்டுத்தீ, வறட்சி, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெறுவது தொடர்கதையாகிவிட்டது.

global warming
global warming

இதனால், பல்வேறு விதமான நோய்கள், இறப்புகள், காற்று மாசு, வாழ்வாதாரம் அழிப்பு, சொத்துகள் சேதம், விவசாயம் பாதிப்பு ஆகியவை தொடர்ந்து விரட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. அதற்குக் காரணமாக இருக்கும் மனிதர்கள் இதைப் பற்றி சிறிதும் யோசிப்பது இல்லை. இதுநாள் வரை ஏற்பட்ட பாதிப்புகளை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு காலநிலை மாற்றத்திலிருந்து பூமியைப் பாதுகாக்க முன்வர வேண்டும். உலக நாடுகள் விழித்துக்கொண்டு செயல்படக் குரல் கொடுக்க வேண்டும்.

நாடுகள் பலவாக இருக்கலாம். ஆனால், இந்தப் பூமி ஒன்றுதான். அதைப் பாதுகாக்க வேண்டும்.