Published:Updated:

`உங்க நாடுகளிலேயே பிரச்னை இருக்கு; எனக்கு விருது வேண்டாம்!'- சர்வதேச விருதை உதறிய கிரேட்டா தன்பர்க்

உங்களது வெற்று வார்த்தைகளால், எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு? பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டு இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?

கிரேட்டா
கிரேட்டா

கிரேட்டா தன்பர்க்... சமீபத்தில் உலகெங்கும் உச்சரிக்கப்பட்டப் பெயர். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அனைத்து நாட்டு அரசுகளும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி, ஸ்வீடன் நாட்டின்  நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தியவர். பருவநிலை  மாற்றங்களைத் தடுக்க, தன்னைப் போன்ற குழந்தைகளிடம் 'பள்ளிக்குப் போகாதீர்கள்: தங்களுக்காகவும், வருங்கால தலைமுறையினருக்காகவும் வெள்ளிக்கிழமை தோறும் வீதிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தவர்.

கிரேட்டா
கிரேட்டா

'உங்களது வெற்று வார்த்தைகளால், எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு? பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டு இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று உலகத் தலைவர்களை ஐ.நாவில் வைத்து கேள்வி கேட்டவர். அவருடைய இந்தக் கோபம் சூழலியல் மாற்றங்களால் அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்ற உண்மையை அனைத்து நாடுகளும் சிந்திக்கத்தொடங்கின.

சூழலியல் செயல்பாடுகளுக்காக 'ஸ்டால்க்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' வழங்கும் சூழலியலாளருக்கான விருதுக்கு ஸ்வீடன் மற்றும் நார்வே நாட்டின் சார்பாக  கிரேட்டா தன்பர்க் பரிந்துரைக்கப்பட்டார்.

கிரேட்டா தன்பர்க்
கிரேட்டா தன்பர்க்

இந்த ஆண்டுக்கான விருது கிரேட்டா தன்பர்க்கிற்கு வழங்கப்பட இருக்கிறது என ஸ்டால்க்ஹோம் நிறுவனம் தகவல் வெளியிட்டது. இந்த விருதுக்கு, இந்திய மதிப்பிற்கு 37 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும்.

ஆனால், இந்த விருது மற்றும் பரிசுத்தொகை தனக்கு வேண்டாம் என்று கூறி உலகத்தின் பார்வையை மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளார் கிரேட்டா. இதுகுறித்து கிரேட்டா பேசியபோது, ``விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதை நான் பெருமையாக உணர்கிறேன். நார்டிக் கவுன்சில் என்னைத் தேர்வு செய்ததற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ -  ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்

சூழலியல் போராட்டங்களுக்கு விருது வேண்டாம், மக்களின் மனதில் ஏற்படும் மாற்றங்களே வேண்டும். விருது கொடுக்கும் நோர்டிக் நாடுகளிலே ஏகப்பட்ட சூழலியல் பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பிரச்னைகளை அவர்கள் பெரிதாகக் கருதாதபோது விருதுகள் எதற்கு?" என்று கூறியுள்ளார். கிரேட்டாவின் விருது புறக்கணிப்பை சிலர் விமர்சித்தாலும், பல சூழலியல் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.