Published:Updated:

`எனக்கு உடம்பு சரியில்ல, திருமணம் வேண்டாம்': நாடகமாடிய மணமகன் வசமாக சிக்கியது எப்படி?

marriage fear ( pixabay )

சரியாக திருமண நாளின்போது, மணமகன் `நான் குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டேன், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்’ என உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். எதற்காகத் தெரியுமா?

`எனக்கு உடம்பு சரியில்ல, திருமணம் வேண்டாம்': நாடகமாடிய மணமகன் வசமாக சிக்கியது எப்படி?

சரியாக திருமண நாளின்போது, மணமகன் `நான் குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டேன், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்’ என உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். எதற்காகத் தெரியுமா?

Published:Updated:
marriage fear ( pixabay )

திருமணம் செய்து கொள்வதில், சிலருக்கு விருப்பம் இருக்கலாம்; சிலருக்கு திருமண பந்தத்தில் நுழைய தயக்கம் இருக்கலாம். பயமும், பதற்றமும் கொண்ட சிலர் பல காரணங்களைச் சொல்லி திருமணத்தைத் தள்ளிப்போடுவதுண்டு. அப்படி மணமகன் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி தன்னுடைய திருமணத்தைத் தள்ளிப்போட்டு வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம், கைகலப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

marriage
marriage
pixabay

தெலங்கானா மாநிலம், ஹனம்கொண்டாவைச் சேர்ந்தவர், அன்வேஷ். இவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய பெற்றோரிடம், தெலங்கானா ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற நினைத்த பெற்றோர், மகனின் திருமணத்தை நடத்துவதற்கான வேலையில் இறங்கினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண் வீட்டாரின் தரப்பில் இருந்தும் முழு சம்மதம் அளிக்கப்பட்டு வரதட்சணையாக 25 லட்சம் அன்வேஷுக்கு கொடுக்க முடிவு செய்தனர். முதல்கட்டமாக 15 லட்சத்தை நிச்சயத்தின்போது கொடுத்துள்ளனர். மீதி பணத்தை திருமணத்தின்போது கொடுப்பதாக உறுதி அளித்திருந்தனர்.

திருப்புமுனையே இதிலிருந்து தான் ஆரம்பமாகிறது.

வரதட்சணை
வரதட்சணை
Ashish Kumar

ஆகஸ்ட் 21-ம் தேதி இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவர் வீட்டிலும் திருமண வேலைகள் மும்முரமாக நடக்க, சரியாக திருமண நாளின்போது, மணமகன் `நான் குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டேன், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்’ என உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நல்ல நாளிலா இப்படி நடக்க வேண்டும் என உறவினர்களும் பதறியடித்து, அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அதன் பிறகும், அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதுபோல மழுப்பி உள்ளார். மற்றொரு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, அவர் பூரண நலத்தோடு உள்ளதாகத் தெரிவித்தனர்.

இப்படியே பல காரணம் சொல்லி 5 மணி நேரமாக நடித்து திருமணத்தைத் தள்ளிப்போட்டுள்ளார். மணமகள் தரப்பில் இருந்து உண்மையைக் கூறும்படி வலியுறுத்த, இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என, `எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டு கோபமடைந்த மணமகளின் வீட்டார், அந்த நபரை தாக்க முயன்றனர். ஆனால் சண்டை பெரிதாகாமல் சுற்றியிருந்த குடும்ப உறுப்பினர்கள் தடுத்து விட்டனர். அதனை தொடர்ந்து அந்தத் திருமணம் நிறுத்தப்பட்டது.

`எனக்கு உடம்பு சரியில்ல, திருமணம் வேண்டாம்': நாடகமாடிய மணமகன் வசமாக சிக்கியது எப்படி?
pixabay

திருமணம் செய்துக் கொள்ள பயந்து மணமகன் நாடகமாடிய இந்தச் சம்பவத்தைக் கேள்விப்படும் அப்பகுதி மக்கள், சிரிக்கின்றனர்.

திருமணம் செய்ய விருப்பமில்லை என்றால், முன்பே சொல்லி இருக்கலாம். என்னதான் இருந்தாலும் ஃபேமிலி பாவம் இல்லையா…?