Published:Updated:

நிலத்தடி நீரில் நச்சு கனிமங்கள்: மத்திய அரசு தரும் புள்ளிவிவரங்கள் இதுதான்!

நிலத்தடி நீர்

இந்த பாதிப்பானது நகரங்களை ஒப்பிடுகையில் கிராமத்தில் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் கிராம புறங்களில் வாழும் மக்கள் ஆறு, குட்டை, கிணறு, போர்வெல் போன்றவற்றை நம்பி இருக்கின்றனர்.

நிலத்தடி நீரில் நச்சு கனிமங்கள்: மத்திய அரசு தரும் புள்ளிவிவரங்கள் இதுதான்!

இந்த பாதிப்பானது நகரங்களை ஒப்பிடுகையில் கிராமத்தில் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் கிராம புறங்களில் வாழும் மக்கள் ஆறு, குட்டை, கிணறு, போர்வெல் போன்றவற்றை நம்பி இருக்கின்றனர்.

Published:Updated:
நிலத்தடி நீர்

நிலத்தடி நீர் தான் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அதாவது ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆவணத்தின்படி, நாட்டிலுள்ள 80 சதவிகித மக்கள் தங்கள் குடிநீர் ஆதாரத்துக்கு நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.

Water
Water
Photo by mrjn Photography on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் ராஜ்ய சபாவில் நீரின் தரம் குறித்து தரவுகள் வெளியிடப்பட்டன. அதில் நிலத்தடி நீரில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சு உலோகங்கள் அதிகளவில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில் நிலத்தடி நீரில் நச்சு உலோகங்கள் அதிகமானால் அது விஷமாக மாறும். அதாவது விஷம் நிறைந்த நீரையே மக்கள் குடித்து வருகின்றனர்.

இந்தப் பாதிப்பானது நகரங்களை ஒப்பிடுகையில் கிராமத்தில் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் கிராம புறங்களில் வாழும் மக்கள் ஆறு, குட்டை, கிணறு, போர்வெல் போன்றவற்றை நம்பி இருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட விவரங்கள்:

*25 மாநிலங்களில் உள்ள 209 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஆர்சனிக் அளவு லிட்டருக்கு 0.01 மில்லி கிராமுக்கும் அதிகமாக உள்ளது. நீரில் ஆர்சனிக் அளவு அதிகமானால் தோல் நோய்கள் மற்றும் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

*29 மாநிலங்களில் உள்ள 491 மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் இரும்பு லிட்டருக்கு 1 மில்லி கிராமுக்கும் அதிகமாக உள்ளது. நீரில் அதிக இரும்பு அதிகமாக இருந்தால் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பு மண்டல பிரச்சனைகள் உருவாகும்.

நிலத்தடி நீர்
நிலத்தடி நீர்
AP

*11 மாநிலங்களில் உள்ள 29 மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் கேட்மியத்தின் அளவு லிட்டருக்கு 0.003 மில்லி கிராமுக்கும் அதிகமாக உள்ளது. இதனால் சிறுநீரக பிரச்னைகள் உருவாகும்.

*16 மாநிலங்களில் உள்ள 62 மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் குரோமியத்தின் அளவு லிட்டருக்கு 0.05 மில்லி கிராமுக்கும் அதிகமாக உள்ளது. சிறுகுடலில் ஹைப்பர்பிளாசியாவை உண்டு பண்ணும்.

*18 மாநிலங்களில் உள்ள 152 மாவட்டங்களில் உள்ள நிலத்தடிநீரில் லிட்டருக்கு 0.03 யுரேனியம் உள்ளது. இதனால் சிறுநீரக பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் உருவாகலாம்.