Published:Updated:

கரூர், நாமக்கல்லில் பெரும் சத்தத்துக்கு காரணம் நில அதிர்வா? அச்சத்தில் மக்கள்!

நாமக்கல்
News
நாமக்கல்

நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராபி கருவி சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஏற்பட்டது நிலநடுக்கமா அல்லது வேறு பிரச்னையா என்பதை, அந்த கருவில் பதிவான விஷயங்களை வைத்தே சொல்ல முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல இடங்களில் காதை துளைக்கும் அளவுக்கு கடும் சத்தம் கேட்டதால், அதற்கு காரணம் நில அதிர்வாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இன்று காலை 11.30 மணிக்கு கரூர் ஜவஹர் பஜார் அருகே கடும் சத்தம் கேட்டதாக, அனைத்து மக்களும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நில அதிர்வா, சத்தம் வந்தது வானத்திலா, பூமியிலா என்று புரியாமல் விழித்தனர். இந்நிலையில், கரூர் தான்தோன்றிமலை, லைட்ஹவுஸ், கருப்பக்கவுண்டன்புதூர், திருமாநிலையூர், காந்திகிராமம் உள்ளிட்டப் பல பகுதிகளிலும் இந்த பெரும் சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், `இது நிலநடுக்கம்தான். ஒரு ஹோட்டல் கண்ணாடி, அந்த பெரும் சத்தத்தில் உடைந்தது' என்று சில கூறினர்.

நாமக்கல்
நாமக்கல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல், கேப்பம்பட்டி, பேத்தான்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருமுறை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனால் அங்குள்ள சில வீடுகளின் சுவர்களில் விரிசலும் ஏற்பட்டதாகவும் கூறி, அங்குள்ள மக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். தகவல் அறிந்ததும், கரூர் மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். நில அதிர்வு ஏற்பட்டதுபோல் பூமி அதிர்ந்ததாகவும், அந்த நேரத்தில் குண்டு வெடிப்பது போல பெரும் சப்தம் ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், நாமக்கல் மாவட்டத்தில், திருச்சி சாலையில் உள்ள சில பகுதிகளிலும், திருச்செங்கோடு உள்ளிட்டப் பகுதிகளிலும் இந்த பெரும் சத்தம் கேட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

`கட்டடங்கள் அதிரும், குலுங்கும் அளவுக்கு கடுமையான சத்தமாக அது கேட்டது. எங்களால் பூமி அதிர்ந்ததை உணர முடிந்தது. ஒரு நிமிடம் வரை அந்த சத்தம் கேட்டது' என்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பும் இதுபோல் பெரும் சத்தம் கேட்டது. அப்போதைய நாமக்கல் ஆட்சியர், `தஞ்சாவூரில் உள்ள விமானப்படைக்குச் சொந்தமான போர்விமானம் இந்தப் பகுதியில் பறந்தபோது, சத்தம் ஏற்பட்டதாகவும், ஒரு வேகத்தில் இருந்து மற்றொரு வேகத்துக்கு மாறும்போது இதுபோன்ற சத்தம் வரும்' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இப்படி இரண்டு மாவட்டங்களிலும் கடும் சத்தம் கேட்டிருக்கிறது.

கரூர்
கரூர்

`கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கல்குவாரிகள் அதிகம் இயங்கி வருகின்றன. அங்கு அடிக்கடி வெடிகள் வைக்கப்படும். அந்த சத்தம்கூட கேட்டிருக்கலாம்' என்றும் சிலர் காரணம் சொல்கிறார்கள். இன்னொருபக்கம், இந்தோனேஷியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஏற்பட்டதும் நிலநடுக்கமாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், `நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராபி கருவி சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஏற்பட்டது நிலநடுக்கமா அல்லது வேறு பிரச்னையா என்பதை, அந்த கருவில் பதிவான விஷயங்களை வைத்தே சொல்ல முடியும். அதுவரை மக்கள் பயப்படக்கூடாது' என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.