Published:Updated:

`7,000 மரப்பிள்ளைகளை பிரிய மனமில்லை!' தான் உருவாக்கிய வனத்தை வணங்கி விடைபெற்ற டி.எஸ்.பி

மரக்கன்றுகளை வணங்கும் அய்யர்சாமி ( நா.ராஜமுருகன் )

கரூர் ஆயுதப்படை டி.எஸ்.பியாக வந்த அய்யர்சாமி, காடுகளின் அளவை பெருக்க தன்னாலான முயற்சியை தொடங்கினார். ஆயுதப்படை, எஸ்.பி அலுவலக வளாகங்களில் உள்ள காலிஇடங்களில் 2,786 மரக்கன்றுகள், மியாவாக்கி முறையில் 2050 மரக்கன்றுகள், 2200 பனைவிதைகள் என்று 7,036 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்.

`7,000 மரப்பிள்ளைகளை பிரிய மனமில்லை!' தான் உருவாக்கிய வனத்தை வணங்கி விடைபெற்ற டி.எஸ்.பி

கரூர் ஆயுதப்படை டி.எஸ்.பியாக வந்த அய்யர்சாமி, காடுகளின் அளவை பெருக்க தன்னாலான முயற்சியை தொடங்கினார். ஆயுதப்படை, எஸ்.பி அலுவலக வளாகங்களில் உள்ள காலிஇடங்களில் 2,786 மரக்கன்றுகள், மியாவாக்கி முறையில் 2050 மரக்கன்றுகள், 2200 பனைவிதைகள் என்று 7,036 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்.

Published:Updated:
மரக்கன்றுகளை வணங்கும் அய்யர்சாமி ( நா.ராஜமுருகன் )

பொதுவாக, காவல்துறையில் பணிபுரிபவர்கள் அந்த பணிக்கே உரித்தான 'அதிகாரத்தை'தான் காதலிப்பார்கள். ஆனால், கரூர் மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பியாக பணியாற்றிய அய்யர்சாமி, ஓர் இயற்கை காதலர். தான் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் காவல்துறை பணியோடு சேர்த்து, இயற்கையை கட்டமைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

நம்மாழ்வார் சமாதியில் வணங்கும் அய்யர்சாமி
நம்மாழ்வார் சமாதியில் வணங்கும் அய்யர்சாமி
நா.ராஜமுருகன்

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் அவர் பணியாற்றிய இந்த மூன்று வருடங்களில் 7,036 மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார். தற்போது அவருக்கு பணிமாறுதல் உத்தரவு வர, அந்த மரங்களையும், நம்மாழ்வார் சமாதியையும் கைகூப்பி வணங்கிவிட்டு, விடைப்பெற்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகள் பாய்கின்றன. ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள 70 சதவிகிதம் பகுதிகள், வறட்சி மிகுந்த, வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. சுண்ணாம்பு கலந்த மண்தான் இங்கு அதிகம் என்பதால், மழையையும் ஈர்க்காமல், எப்போதும் வெப்பமே நிலவுகிறது. மழை சீராக பெய்ய, குறைந்தது 32 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும் என்று சூழலியல் வல்லுநர்கள் சொல்வார்கள்.

 மரக்கன்றுகளை பராமரிக்கும் காவலர்கள்
மரக்கன்றுகளை பராமரிக்கும் காவலர்கள்
நா.ராஜமுருகன்

ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள காடுகளின் அளவோ, வெறும் 2.27 சதவிகிதம்தான். இதனால்தான், கரூர் வறட்சிமிகு, வெப்பம் அதிகம் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இந்த நிலையில், கரூர் ஆயுதப்படை டி.எஸ்.பியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு வந்த அய்யர்சாமி, காடுகளின் அளவை பெருக்க தன்னாலான முயற்சியை தொடங்கினார். ஆயுதப்படை, எஸ்.பி அலுவலக வளாகங்களில் உள்ள காலிஇடங்களில், 2786 மரக்கன்றுகள், மியாவாக்கி முறையில் 2050 மரக்கன்றுகள், 2200 பனைவிதைகள் என்று 7,036 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்.

அவற்றை, பிரிய மனமில்லாமல் அந்த அற்புத வனத்துக்குள் கனத்த இதயத்துடன் வலம் வந்த அய்யர்சாமியைச் சந்தித்தோம்.

''எனக்குச் சொந்த ஊர் மதுரை பக்கமுள்ள கருமாத்தூர். விவசாயக் குடும்பம்தான். அதனால், இயல்பாகவே எனக்குள் இயற்கை மீது அதிக ஆர்வம் இருந்தது. படிக்கிற காலத்திலேயே ஊருக்குள்ள மரக்கன்றுகள் வைப்பது, இயற்கையை சுத்திப் பார்ப்பதுனு செயல்படுவேன்.

இந்த நிலையில்தான், கடந்த 1984 -ம் வருடம் போலீஸ் வேலைக்கு வந்தேன். கிடைக்கும் ஓய்வுநேரத்தில் அவ்வபோது மரக்கன்றுகள் நட்டு வந்தேன். இந்தச்சூழலில்தான், கடந்த 2009 - ம் ஆண்டு, கோயமுத்தூர் மாநகர காவல் நிலையத்தின் ஆய்வாளராக பணிஉயர்வில் வந்தேன். அது முதல், தீவிரமாக இயற்கையை கட்டமைக்கிற காரியத்தில் இறங்கினேன்.

மூலிகை செடிகள் முன்பு அய்யர்சாமி
மூலிகை செடிகள் முன்பு அய்யர்சாமி
நா.ராஜமுருகன்

அரசு, தனியார் பள்ளிகள், எல்லா காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், பொது இடங்கள் என்று பல இடங்களுக்கு மரக்கன்றுகளை வைக்க கேட்பவர்களுக்கு சொந்தச் செலவில் மரக்கன்றுகள் வாங்கி கொடுக்க ஆரம்பித்தேன். நாங்களும் மரக்கன்றுகள் நட ஆரம்பித்தோம். ஆனால், அது கட்டுப்படியாகாததால், சொந்தமா நர்சரி போட்டு நாங்களே மரக்கன்றுகளை உற்பத்தி பண்ணினோம். அதைக்கொண்டு, மரக்கன்றுகள் கேட்போர்களுக்கு இலவசமாக தர ஆரம்பித்தோம். அந்த வகையில், அங்கு பணியில் இருந்த ஒன்பதேகால் வருடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை இவலசமாக வழங்கினோம். நாங்க மட்டும் நேரடியாக, 15,000 மரக்கன்றுகள் நட்டிருப்போம்.

இந்தச் சூழலில்தான், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, கரூர் ஆயுதப்படை பிரிவு டி.எஸ்.பியாக பதவி உயர்வுபெற்று, இங்கு பணிக்கு வந்தேன். வந்து இங்கப் பார்த்ததும், அதிர்ச்சியாயிட்டேன். காரணம், எங்குப் பார்த்தாலும் வறட்சி. கடும் வெப்பம் உடம்பை சுட்டெரித்தது. ஆயுதப்படை வளாகத்தில் ஏற்கனவே 500 வேப்பமரங்கள் இருந்தாலும், அனல்காற்று அடித்தது. அதனால், இங்கு பசுமையை கட்டமைப்பது அவசர அவசியம் என்று நினைத்தேன். மரக்கன்றுகள் நட முடிவெடுத்தேன். இங்கு பணியில் இருந்த காவலர்கள் அதற்கு ஒத்துழைச்சாங்க.

மரக்கன்றுகள் நடும் பணி
மரக்கன்றுகள் நடும் பணி
நா.ராஜமுருகன்

இதனால், மூன்று வருடத்துக்துக்கு முன்பு இரண்டு போர்வெல்களையும் ஒட்டி கிடந்த காலி இடத்தில், நெல்லி, மகாகனி, ஆலமரம், மா என்று 370 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நட்டோம். அதற்கு, போர்வெல்லில் இருந்து வாகனம் மூலம் தண்ணீர் பிடித்து வந்து ஊற்றினோம். தொடர்ந்து, கடந்த மாதங்களுக்கு முன்பு, 370 மரக்கன்றுகளை நட்டோம். அதேபோல், கடந்த இரண்டரை வருஷத்துக்கு முன்பு மைதானத்தையொட்டியிருந்த இடத்தில், 270 வேப்பமரக்கன்றுகளை நட்டோம்.

தொடர்ந்து, ஆயுதப்படை மைதானத்தையொட்டி உள்ள காலி இடத்தில் 300 வேப்பமரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நட்டோம். அடுத்து ஒருவாரம் கழித்து, எஸ்.பி அலுவல வளாகத்தில், வேம்பு, புங்கன், கொய்யா, மா, சப்போட்டா என்று 285 மரக்கன்றுகளை நட்டோம். அடுத்த பத்து நாள்ல, எஸ்.பி அலுவலகத்துக்கு பின்பு புதர்கள் மண்டிகிடந்த காலி இடத்தை ரொட்டேட்டர் வச்சு சரிசெய்து, அந்த இடத்தில் 'ப' வடிவில் 400 பனைவிதைகளை விதைத்தோம். இப்படியே, இதுவரை 7,036 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அதோடு, இங்குள்ள கட்டடங்கள், அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள மாடிகளில் பறவைகள் எச்சம் மூலம் விதை விழுந்து முளைத்திருக்கும் 100க்கும் அதிகமான ஆலம், அரச மரக்கன்றுகளை பிடுங்கி வந்து, ஆயுதப்படை வளாகத்தில் நட்டுள்ளோம்.

கட்டடங்களில் இருந்து பிடுங்கு நட்ட ஆலங்கன்று
கட்டடங்களில் இருந்து பிடுங்கு நட்ட ஆலங்கன்று
நா.ராஜமுருகன்

அதோடு, ஆயுதப்படை வளாகத்தில் என் அலுவலகத்துக்கு எதிரே உள்ள இடத்தில், மஞ்சள் கரிசாலை, எலுமிச்சை புல், மருதாணி, ஆடாதொடை, சிறுபீளை, சித்தரத்தை, வசம்பு, துளசி, வல்லாரை என்று 35 மூலிகைச்செடிகளையும் வச்சு வளர்த்துகிட்டு வந்தோம். எல்லா கன்றுகளுக்கும் சொட்டுநீர் பாசனம் முறையில் தண்ணீர் பாய்ச்சும் அமைப்பை ஏற்படுத்தினோம். நம்மாழ்வார் மீது பற்று இருந்தாலும், இங்கு பணிக்கு வருவதற்கு முன்புவரை அவரது சமாதி கரூர் மாவட்டத்தில்தான் இருக்குனு எனக்கு தெரியாது.

அது தெரிந்ததும், அங்கே அடிக்கடி போய், அவரை வணங்கிவிட்டு, ஆசிபெற்று வருவேன். கடந்த 3 வருடங்களில் 50 முறை அங்கே சென்றிருப்பேன். அவர் சொல்லிச்சென்ற தொழில்நுட்பங்களையும் மரம் வளர்ப்பில் செயல்படுத்தினோம். அதாவது, முதலில் நட்ட 370 மரக்கன்றுகளைச் சுற்றியும், கற்றாழைச் செடியை ஊன்றி வைத்திருக்கிறோம். கற்றாழைச் செடி, பூமிக்குள் உள்ள வெப்பத்தை வெளியேற்றி, மரக்கன்றுகளுக்கு குளுமையைக் கொடுக்கும், மரக்கன்றுகளை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் என்பதால், அப்படி கற்றாழைச் செடிகளை நட்டிருக்கிறோம். உயரதிகாரிகள், காவலர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைச்சதாலதான், என்னால சிறப்பா செயல்பட முடிந்தது.

கற்றாழை தொழில்நுட்பம்
கற்றாழை தொழில்நுட்பம்
நா.ராஜமுருகன்

இப்போ, கோயமுத்தூருக்கு, தமிழ்நாடு சிறப்பு காவல்படை டி.எஸ்.பியா எனக்கு பதவி உயர்வு கிடைச்சுருக்கு. அதனால், நாங்க உருவாக்கிய இந்த 7,036 மரக்கன்றுகளை பிரிய மனமில்லாமல், கடந்த இரண்டு நாளாக அவற்றை சுத்திசுத்தி வந்துகிட்டு இருக்கேன். நேத்து மனைவியோடு வானகம் போய், நம்மாழ்வார் நிரந்தரமாக துயிலும் அவரோட சமாதி முன்பு நின்னு வணங்கி, 'சாகும்வரை அதே வேகத்தோடு இயற்கையை கட்டமைக்கும் சக்தியை கொடுங்க'னு வேண்டிக்கிட்டு வந்தேன். என்னோட, இயற்கை மீதான வேட்கை தொடரும்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.