Published:Updated:

`ஒரு குடும்பம்; மூன்று மரக்கன்றுகள்!' - ஊராட்சியைப் பசுமையாக்க கரூர் இளைஞரின் அசத்தல் திட்டம்

மரக்கன்றுகள் பெற்ற பயனாளிகள்
மரக்கன்றுகள் பெற்ற பயனாளிகள்

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, வரவனை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 10 ஊர்களில், 777 குடும்பங்களுக்கு 2,331 மரக் கன்றுகளை வழங்கியிருக்கிறார்கள்.

தனது கிராமம் அடக்கிய ஊராட்சியையே பசுமையாக்கும் பொருட்டு, 'ஒரு குடும்பம்; மூன்று மரம்' என்ற திட்டத்தை இளைஞர்கள் சிலரின் உதவியோடு செயல்படுத்தியிருக்கிறார், அமெரிக்க வாழ் இளைஞர் ஒருவர்.

3 மரக்கன்றுகள் பெற்ற பயனாளிகள்
3 மரக்கன்றுகள் பெற்ற பயனாளிகள்

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, வரவனை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 10 ஊர்களில், 777 குடும்பங்களுக்கு 2,331 மரங்களை வழங்கியிருக்கிறார்கள்.

Vikatan

அமெரிக்காவில் வசித்துவரும் இந்த ஊராட்சியில் உள்ள வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர்தான், இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

மரக்கன்றுகள் வழங்குதல்
மரக்கன்றுகள் வழங்குதல்

வரும் ஜூலை மாதத்தில், வரவனை ஊராட்சியில் உள்ள மற்ற ஊர்களுக்கும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட இருக்கிறது. அப்போது, `ஒரு ஊராட்சி முழுக்க பழவகை மரங்களால் ஓரிரு ஆண்டுகளில் மக்கள் பயன் பெறுவார்கள்' என்று சந்தோஷமாகச் சொல்கிறார் நரேந்திரன் கந்தசாமி.

அமெரிக்காவில் உள்ள நரேந்திரன் கந்தசாமியிடம் வாட்ஸ்அப் கால் மூலமாகப் பேசினோம். ``எனது சொந்த ஊரான வ. வேப்பங்குடியைப் 'பசுமைக்குடி' என்று மாற்ற, எனது கிராமத்தைச் சுற்றி பழ வகை மரங்கள், காய்கறித் தோட்டம், வீடு தோறும் காய்கறி என்று மாற்ற, எனது செலவில் முயற்சி செய்துள்ளேன். அதன் நீட்சியாக, எங்கள் ஊர் அமைந்துள்ள வரவனை ஊராட்சியையே பசுஞ்சோலை ஊராட்சியாக மாற்ற, எதிர்வரும் மழைக்காலத்தில் இன்னும் அதிக மரங்களை நட இருக்கிறேன். அதற்கு முன்னர், வீடுதோறும் பழவகை மரங்களைக் கொண்ட ஊராட்சியாக மாற்றும் முயற்சி இது. ஜெய் முத்துகாமாட்சி என்பவரின் முயற்சிதான், `நலம் நண்பர்கள்' குழு. அவர், இக்குழுவின் மூலம் அமெரிக்காவில் இருக்கும் நன்கொடையாளர்களிடம் பணம் பெற்று, இதுவரை 32,000 மரங்களுக்கு மேல் வழங்கியிருக்கிறோம். அவரின் நிதி உதவியோடு, எங்க ஊராட்சியில் `ஒரு குடும்பம்; மூன்று மரக்கன்றுகள்' என்ற திட்டத்தின் மூலம் இங்கே நிறைவேற்றியி ருக்கிறோம்.

 நரேந்திரன் கந்தசாமி
நரேந்திரன் கந்தசாமி

`ஒரு குடும்பம்; மூன்று மரக் கன்றுகள்' திட்டத்தின் மூலம், ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்றடி வளர்ந்த ஒரு தென்னை மரம், ஒரு கொய்யா மரம், ஒரு மாமரம் வழங்கப்படுகின்றன. பொது இடங்களில் நடும்போது, அவற்றுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அதிகம். அவற்றை வீடுகளுக்குக் கொடுக்கும்போது, அவர்கள் நல்ல முறையில் பராமரிப்பார்கள். தண்ணீர் ஊற்றுவது சுலபம். பழ வகை மரங்களாக கொடுக்கும்போது, மக்களுக்கு நிறைய பயன் கிடைக்கும். வீடுகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரம் வளர்ப்பின் மீதான அக்கறையை அதிகப்படுத்தும் என்ற காரணங்களால், இந்த திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு