Published:Updated:

`2 ஏக்கரில் 1,000 மரங்கள்!' - மியாவாக்கி முறையில் அசத்தும் மேலூர் விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

2 ஏக்கர் நிலத்தில் 1000 மரக்கன்றுகள் நட்டு மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியை மேலூர் விவசாயிகள் கையில் எடுத்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் `அகிரா மியாவாக்கி" அந்நாட்டின் யோகோஷாமா பல்கலைக்கழகத்தில் பணி செய்கிறார்.

மரக்கன்றுகள்
மரக்கன்றுகள்

தாவரவியலாளர் மியாவாக்கி `இடை வெளி இல்லா அடர்காடு' எனும் முறையைப் பின்பற்றி குறைந்த இடத்தில் அதிக மரங்களை விரைவாக வளர வைக்கும் முறையை உருவாக்கினார். மியாவாக்கி இந்த முறையில் 4 கோடி மரங்களுக்கு மேல் வளர்த்து சின்னச் சிறு காடுகளாக உருவாக்கி அசத்தினார்.

Vikatan

இதற்காக 2006 -ல் சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பிடமிருந்து `புளூ பிளானெட் விருது' அவருக்கு வழங்கப்பட்டது. இவரின் தத்துவ முறையில் உருவான அடர்வனம், மியாவாக்கி என அழைக்கப்படுகிறது. இந்த முறையானது இந்தியா முழுதும் பல இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இந்த முறையைப் பின்பற்றிவருகிறார்கள்.

மியாவாக்கி
மியாவாக்கி

இந்நிலையில் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தேசிய விவசாயிகள் தினத்தில் `மியாவாக்கி' காடுகள் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மதுரை மாவட்டம் மேலூர் நாட்டார் மங்கலம் பகுதியில் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் 2 ஏக்கர் நிலத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. நாட்டு வகை மரங்களான தேக்கு, குமில், மகாகனி, நாவல், உள்ளிட்ட பல வகையான மரங்கள் இதில் அடக்கம். இந்த விழாவில் அப்துல் கலாம் அறக்கட்டளை சேக்சலீம், புதுகோட்டை மரம் வளர்ப்போர் சங்கச் செயலாளர் தங்க.கண்ணன், மதுரை மரம் பிரசாத், இயற்கை விவசாயி அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேசிய விவசாயிகள் தினத்தில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், மரம் இல்லாத சூழல் காரணமாக என்ன மாற்றங்கள் நிகழும் என்ற அபாயம் குறித்தும் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

அடர்வனம்
அடர்வனம்

விழாவில் கலந்துகொண்ட அப்துல் கலாம் அறக்கட்டளை இயக்குநரும் அப்துல் கலாமின் அண்ணன் பேரனுமான சேக் சலீமிடம் பேசினோம். ``தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக்குறைந்துவிட்டது. இதனால், டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு தமிழகத்திலும் ஏற்படலாம். எனவே, நமது சந்ததிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதிமான மரங்களை நடவேண்டும். அதிக மரங்களை குறிப்பிட்ட ஆண்டுகளில் வளர்த்தெடுக்க மியாவாக்கி முறை மிகவும் எளிமையானது. கலாம் ஐயா இந்தியா முழுவதும் 100 கோடி மரங்களை நட வேண்டும் என விரும்பினார். எனவே, அனைவரும் மியாவாக்கி முறையைப் பின்பற்றுவோம். ஆரோக்கியமான வாழ்வை மீட்டெடுப்போம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு