Election bannerElection banner
Published:Updated:

நான்கு வழிச்சாலையில் மான்கள் பலியாகும் கொடுமை... நடவடிக்கை எடுக்க கோரும் மதுரை மக்கள்!

பலியான புள்ளி மான்
பலியான புள்ளி மான்

திருமங்கலத்திலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் இரை தேடி மான்கள் வருவது வாடிக்கை. இவை நான்கு வழிச் சாலையைக் கடக்கும்போது, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டாரத்தில் நான்கு வழிச்சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் மோதி மான்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 3 மான்களும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மான்களும் பலியாகியுள்ளதாக இப்பகுதி மக்கள் அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்கிறார்கள்.

பலியான புள்ளி மான்
பலியான புள்ளி மான்

திருமங்கலத்திலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் இரை தேடி மான்கள் வருவது வாடிக்கை. இவை நான்கு வழிச் சாலையைக் கடக்கும்போது, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

கடந்த 19-ம் தேதி 3 வயதே ஆன புள்ளிமான், சாலையைக் கடக்கும்போது வேகமாகச் சென்ற வாகனம் மோதி பலியானது.

இந்த மாதத்தில் மட்டும் வாகனம் மோதி 3 மான்கள் பலியாகியுள்ள நிலையில் உசிலம்பட்டி சரக வனத்துறையினர் இச்சம்பவத்தை விசாரித்து வருகிறார்கள்.

சிவரக்கோட்டை ராமலிங்கம்
சிவரக்கோட்டை ராமலிங்கம்

இதைப் பற்றி இப்பகுதி விவசாயிகளுக்கு வழிகாட்டியாகத் திகழும் சிவரக்கோட்டை ராமலிங்கத்திடம் கேட்டோம், ``கடந்த ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மான்கள் இப்பகுதியில் பலியாகியுள்ளன. இன்னும் அந்தக் கொடுமை தொடர்கிறது. இந்த வட்டாரத்தில் உலவிக்கொண்டிருக்கும் மான்களை வேட்டைக்குப் பலியாக்குவது ஒரு பக்கமென்றால், இதுபோல் இரை தேடி சாலையைக் கடக்கும்போது பலியாகி வருவதும் இன்னொரு புறம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

இந்தக் கொடுமையை நிறுத்த வனத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதியில் மான்கள் நடமாட்டம் இருப்பதால் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்" என்றார்.

கடந்த வாரம் பலியான மான்
கடந்த வாரம் பலியான மான்

கள்ளிக்குடி சிவரக்கோட்டை வயல் காட்டுக்குள் வசிக்கும் மான்கள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்தவை என்றும், இல்லை ஆரம்பத்திலிருந்து இப்பகுதியில் மான்கள் மேய்ந்து வருகிறது என்றும் இருவேறு கருத்துகளை இப்பகுதி மக்கள் கூறி வரும் நிலையில், அதன் பாட்டுக்கு மேய்ந்து கொண்டிருக்கும் மான்களுக்கு முதலில் பாதுகாப்பு கொடுங்கள் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு