Election bannerElection banner
Published:Updated:

ஊருக்குள் பரவத் தொடங்கிய காட்டுத்தீ, திணறும் மிசோரம்... கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானப்படை!

மிசோரம் காட்டுத்தீ
மிசோரம் காட்டுத்தீ ( Zoramthanga/ Twitter )

சனிக்கிழமை அன்று அதிகாலை 7 மணிக்கு, லுங்லெய் நகரத்துக்கு அருகிலிருந்த மலைப்பகுதியில் காட்டுத் தீ தொடங்கியது.

கடந்த 32 மணிநேரங்களாக தெற்கு மிசோராம் காட்டில் எரிந்துகொண்டிருகும் காட்டுத்தீ, அருகிலுள்ள லுங்லேய், லாங்லெய் ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கும் கிராமங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

மாநில அரசாங்கத்தின் தீயணைப்புப் படை வீரர்கள், அஸ்ஸாம் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியோடு நெருப்பை அணைக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தீயணைப்புப் படை
தீயணைப்புப் படை
Zoramthanga/ Twitter

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை, இந்திய விமானப் படையின் இரண்டு Mi-17V5 ரக ஹெலிகாப்டர்கள் தீயணைப்புப் பணிகளுக்காக மிசோராம் மாநில அரசுக்குக் கிடைத்தது. சனிக்கிழமை அன்று அதிகாலை 7 மணிக்கு, லுங்லெய் நகரத்துக்கு அருகிலிருந்த மலைப்பகுதியில் காட்டுத் தீ தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமைக்குள், லுங்லேய் பகுதியைச் சேர்ந்த 10 குக்கிராமங்களுக்கும் பரவியது.

ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் தங்களால் இயன்ற அளவுக்குப் போராடிய அதிகாரிகள், நெருப்பை ஓரளவுக்கு அணைத்தார்கள். ஆனால், இன்று (திங்கள்கிழமை) காலையில், காட்டுத்தீ மீண்டும் அதிக வீரியத்துடன் பரவியதோடு மேன்மேலும் அதிகமாகப் பரவவும் தொடங்கியுள்ளது. தற்போது நிலவும் காற்றின் வேகம் மற்றும் வறண்டிருக்கும் காட்டுப் பகுதிகள், காட்டுத் தீயை இன்னும் தீவிரப்படுத்துகிறது. இது, நெருப்பை அணைக்கும் முயற்சிக்குப் பெரும் சவாலாக இருப்பதாக அப்பகுதி அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மிசோராம் அதிகாரிகள் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், ``லுங்லெய் டவுனில் இருக்கும் ஸோட்லாங், சேர்கான், சன்மாரி ஆகிய பகுதிகளிலுள்ள சில கட்டடங்களுக்கும் நெருப்பு பரவிவிட்டது. விரைந்து அதைக் கட்டுப்படுத்தியிருந்தாலும்கூட, பொருள் சேதம் கணிசமாக ஏற்படுள்ளது" என்று கூறியுள்ளனர்.

இந்தக் காட்டுத்தீ உருவானதன் காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் மிசோரம் வனத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் 2020-ம் ஆண்டில் மட்டுமே சுமார் 1,300 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு