Published:Updated:

`3 மாதத்தில் 360 உயிரிழப்புகள்!’ - போட்ஸ்வானாவை உலுக்கும் யானைகளின் மர்ம மரணங்கள்

போட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பு
போட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பு

போட்ஸ்வானா நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 360-க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானா, உலகிலேயே அதிகளவில் யானைகளைக் கொண்ட நாடு. அங்கு சுமார் 1,30,000 ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. இந்நிலையில் போட்ஸ்வானாவில் இருக்கும் ஒகவாங்கோ (Okavango) என்ற டெல்டா பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 360-க்கும் அதிகமான யானைகள் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளன. இந்த யானைகளின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை.

போட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பு
போட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பு

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பின் இயக்குநர் நியால் மெக்கேன் இந்த யானைகளின் உயிரிழப்பை உறுதி செய்துள்ளார். ஒகவாங்கோ பகுதியில் 350-க்கும் அதிகமான இறந்த யானைகளின் உடல்களைத் தான் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை தங்கள் முகம் முழுவதும் தரையில் படும்படி விழுந்தும், இறப்பதற்கு முன்பு ஒரே இடத்தில் வட்ட வடிவில் நடந்துள்ளன. இதனால் இறந்த யானைகளில் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்கியிருக்கலாம் என மெக்கேன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள்களில் 2 யானைகள், 2 சிறுத்தைகள் உயிரிழப்பு!- என்ன நடக்கிறது கோவையில்?

ஆனால், வேட்டையாடுபவர்கள் பயன்படுத்திய சயனைடை உட்கொண்டதால்தான் யானைகள் உயிரிழந்துள்ளதாக போட்ஸ்வானா அரசு கூறியுள்ளது. அரசின் கருத்தை மறுத்துள்ள மெக்கேன்,``உயிரிழந்த பல யானைகளுக்கு தந்தங்கள் உள்ளன. மேலும் வேட்டையாடிகளின் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிரினங்களும் இறந்திருக்கும். ஆனால், ஒகவாங்கோவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் ஆய்வு செய்த வரையில் உயிரிழந்த அனைத்து யானைகளும் உடலளவில் மிகவும் பலவீனமாக இருந்தன. மேலும் அவை வறட்சியாலும் பாதிக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பு
போட்ஸ்வானா யானைகள் உயிரிழப்பு

இறந்த யானைகளின் பாகங்களைச் சோதனைக்காக அனுப்பியுள்ளது போட்ஸ்வானா அரசு. அதன் முடிவுகள் வந்த பிறகு யானைகள் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். யானைகளின் உயிரிழப்பு காரணத்தை உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும், அது தவறினால் இத்தகைய நோய், நீர் மற்றும் நிலம் மூலமாக மனிதர்களுக்குப் பரவும் என்பதையும் மறுக்க முடியாது என்று கூறியுள்ளார் மெக்கேன். சமீபகாலத்தில் ஒகவாங்கோவில் தற்போதுதான் அதிகளவிலான யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி அதிர்ச்சி: மூங்கில் தேடிவந்த யானை! - தனியார் ரிசார்ட்டில் உயிரிழந்த சோகம்
அடுத்த கட்டுரைக்கு