Published:Updated:

அபாயகட்டத்தில் புழல் ஏரி... என்ன காரணம்?

துரை.நாகராஜன்

எந்தவொரு நீர்த்தேக்கத்தையும் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதி ஒரு முக்கிய பங்கைக் கொண்டது. ஏனெனில், ஓடும் மழைநீர் நீர் பிடிப்புப் பகுதிகளில் உள்ள சிறிய நீரோடைகள் அல்லது சிற்றோடைகளாக ஓடி நீர்த்தேக்கத்தை அடையும்.

புழல் ஏரி
புழல் ஏரி

சென்னை கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில், நகரத்தின் முதன்மை நீர் ஆதாரமான புழல் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஒரு பெரிய தொழில்துறை மண்டலத்தை உருவாக்க அரசு நிறுவனம் ஒன்று முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புழல் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி 53 ஏக்கர் நிலப்பரப்பை மறுவடிவமைக்க தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் சார்பில் தொழிற்சாலை மையம் அமைக்க சென்னை சி.டி.எம்.ஏ-விடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது புழல் ஏரி. சென்னையின் மிகப்பெரிய நீர் ஆதாரங்களில் முக்கியமானது. மொத்தம் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி, வறட்சிக் காலங்களில் சமாளிக்கத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறது. ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீரின் ஒரு பகுதியும் இந்த நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படுகிறது.

புழல் ஏரி
புழல் ஏரி

"எந்தவொரு நீர்த்தேக்கத்தையும் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதி ஒரு முக்கிய பங்கைக் கொண்டது. ஏனெனில், ஓடும் மழைநீர், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள சிறிய நீரோடைகள் அல்லது சிற்றோடைகளாக ஓடித்தான் நீர்த்தேக்கத்தை அடையும். நீரைத் தேக்க நீர்ப்பிடிப்புப் பகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அப்பகுதிகளில் எழும் கட்டுமானங்கள் நீரின் ஓட்டத்தைத் துண்டிக்கக் கூடும். இதனால் நீர்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு குறையும். அதனால் இப்போது புழல் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொழிற்சாலை மையம் அமைந்தால், ஏரிக்குத் தண்ணீர் வருவது தடுக்கப்படும். ஏரியும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்க நேரிடும்" என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர் சூழலியலாளர்கள்.