Published:Updated:

`சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை, குழப்பமான திட்டமாக இருக்கிறது!' - உச்ச நீதிமன்றம்

Salem road
Salem road

'சுற்றச்சூழல் அனுமதி இல்லாமல் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டம் அமைக்க மாட்டோம்' என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Vikatan

'சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலைத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் 'நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' எனத் தேசிய நெடுஞ்சாலைத் துறை முறையிட்டது.

மத்திய அரசும் தனது நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்தது. அதில், எட்டு வழிச் சாலையின் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு பணியையும் ஆரம்பிக்க மாட்டோம்' என மத்திய அரசு தெரிவித்தது.

Supreme court
Supreme court

இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடந்தது. நிலம் கையகப்படுத்தும் முறையானது எந்த அடிப்படையில் நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள். விரிவான திட்டம் தயாரிக்கப்படாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இந்தத் திட்டத்துக்கு எப்படி நிலம் கையகப்படுத்த முடியும். சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற எவ்வளவு காலம் ஆகும். அப்படி நீண்ட காலம் எடுத்துக்கொண்டால், நிலத்தை ஒப்படைத்தவருக்கு என்ன பதில் சொல்வீர்கள். இந்தத் திட்டம் ஒரு குழப்பமான திட்டமாக இருக்கிறது. இதற்கான முழு அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு, 'சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச் சாலை அமைக்கப்பட மாட்டாது, அந்தத் திட்டத்தை தொடங்க மாட்டோம்' எனத் தெரிவித்தது. அதையடுத்து வழக்கை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு