Published:Updated:

`எங்க பழவேற்காடு பாதுகாக்கப்படணும்!' - காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்க்கும் மாணவர்கள்

மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் ஒன்று

``இயற்கை நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும்ங்கிறதையும் அதை காக்கறதுக்கு நாம ஒவ்வொருத்தரும் போராடணும்ங்கிறதையும் எல்லோரும் புரிஞ்சிக்கணும்." என்கின்றனர் மாணவர்கள்.

`எங்க பழவேற்காடு பாதுகாக்கப்படணும்!' - காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்க்கும் மாணவர்கள்

``இயற்கை நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும்ங்கிறதையும் அதை காக்கறதுக்கு நாம ஒவ்வொருத்தரும் போராடணும்ங்கிறதையும் எல்லோரும் புரிஞ்சிக்கணும்." என்கின்றனர் மாணவர்கள்.

Published:Updated:
மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் ஒன்று

மாணவர்களின் குரலுக்கு எப்போதுமே வலிமை அதிகம். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராக அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள், சூழலியல் ஆர்வலர்கள், எதிர்க் கட்சியினர் எனப் பலரும் குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இந்த திட்டத்துக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருப்பது பலரது கவனத்தையும் குவித்திருக்கிறது.

அதானி துறைமுகம்
அதானி துறைமுகம்

சென்னை, பழவேற்காட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அதானி குழுமத்துக்குச் சொந்தமான துறைமுகம். இதனை 6,110 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சியினரும், சூழலியல் ஆர்வலர்களும் பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், துறைமுக விரிவாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை குறிப்பிட்டு, `இந்தத் திட்டத்தை ரத்து செய்யுங்கள்’ என சென்னையிலுள்ள 50 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கூகுள் டாக்குமென்டில் கையெழுத்திட்டு அதனை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தத் திட்டத்தால் ஏற்படப்போகும் விளைவுகளை ஓவியங்களாகத் தீட்டியும் கவனம் ஈர்த்துள்ளனர்.

இந்த முன்னெடுப்பில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவரான வைபவிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``எங்கள் பள்ளிக்கென விவசாயத் தோட்டம் இருக்கு. வாரம் ஒருமுறை அங்கே போய் நாங்க தோட்ட வேலைகள் செய்வோம். அப்படி போகும்போது ஒருமுறை சூழலியல் ஆர்வலரான யுவன் சாரும் எங்களோட வந்திருந்தார். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பான போராட்டம் குறித்து அவர்கிட்ட கேட்டப்போ, இந்த திட்டம் வந்தா என்னவெல்லாம் நடக்கும்னு அவர் சொன்னதைக் கேட்டு நாங்க அதிர்ந்துட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் திட்டத்தை செயல்படுத்தினா மழைக்காலங்கள்ல சென்னையோட வடிகாலா இருக்குற பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும் பாதிப்புக்குள்ளாகும். கடல் அரிப்பு உண்டாகி கொற்றலை ஆறு கடலோடு கலந்துடுற அளவுக்கு இதுல ஆபத்து இருக்கு. அப்படி நடந்தா நம்ம சென்னையை வெள்ளத்திலிருந்து காப்பாத்தவே முடியாது. பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு முக்கியமான இடமான பழவேற்காடு பாதிப்புக்குள்ளாகுறது என்பது பெரிய பேரழிவை ஏற்படுத்திரும். அதுமட்டுமில்ல, இதனால ஏராளமான மீனவ கிராமங்கள் கடலுக்குள் போயிரும். இங்கிருக்கிற ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் சுத்தமா பறிபோயிரும்.

மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் ஒன்று...
மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் ஒன்று...

ஏராளமான கடல் வளங்களும் அழியும்னு தெரிஞ்சதும் இதைத் தடுக்கறதுக்கு நாமளும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அப்பதான் இந்தத் திட்டத்துக்கு எதிரா மாணவர்கள்லாம் சேர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தலாம்னு முடிவெடுத்தோம். கொரோனா காலம்ங்கிறதால அதை ஆன்லைன்ல செய்யலாம்னு முடிவெடுத்தோம். கூகுள் டாக்குமென்டில் இந்தத் திட்டத்துக்கு எதிரா கையெழுத்திட்டு எங்க நண்பர்கள் அவர்களின் நண்பர்கள்னு அவங்க அவங்க தொடர்பிலிருக்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸுக்கு அனுப்பி 500 கையெழுத்துக்கு மேல பெற்றோம்.

அதை முதலமைச்சருக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் கடந்த மாதம் அனுப்பினோம். அதுமட்டுமல்லாம `Save Pulicat’, `பழவேற்காட்டை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் மாணவர்கள் பலர் தனித்தனியாக ஓவியம் வரைந்து அதை வெளியிட்டோம். இதைத் தொடர்ந்துதான், இந்த திட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூடத்தை அரசாங்கம் நிறுத்தி வெச்சிருக்கு. அது எங்களால் நடந்ததா என்றெல்லாம் தெரியாது. ஆனா, அதுல எங்களோட பங்களிப்பும் இருக்குதுன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்குது. இயற்கை நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும்ங்கிறதையும் அதை காக்கறதுக்கு நாம ஒவ்வொருத்தரும் போராடணும்ங்கிறதையும் எல்லோரும் புரிஞ்சிக்கணும். இந்தத் திட்டம் வரக் கூடாது. பழவேற்காடு பாதுகாக்கப்படணும். அதுதான் எங்களோட நோக்கம்” என்றார்.

மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் ஒன்று..
மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் ஒன்று..

இதுகுறித்து சூழலியலாளரும் எழுத்தாளருமான யுவனிடம் பேசினோம். ``இது முழுக்க முழுக்க மாணவர்களோட முன்னெடுப்புதான். இதுல என்னோட பங்களிப்புங்கிறது ரொம்ப சின்னதுதான். என்னைப்போல ஏராளமான பள்ளி ஆசிரியர்களும் இதற்கு உறுதுணையா இருந்திருக்காங்க. ஆகையால, பள்ளி மாணவர்களைத் தாண்டி நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. அடுத்து வரும் தலைமுறையினருக்கு இப்படி சூழலியல் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுத்துட்டா போதும். மத்ததை அவங்க பாத்துப்பாங்க.

இப்போ பள்ளி மாணவர்களே துறைமுக விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு மேலயும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு நினைச்சா அது அநீதி. சூழலுக்கும், மக்களோட நலனுக்கும், மாணவர்களின் உணர்வுக்கும் இந்த அரசு மதிப்பளிச்சு இந்த திட்டத்தை கைவிடணும். ஏன்னா ஏற்கனவே இங்கிருக்கிற துறைமுகங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டலை. அப்படியிருக்கும்போது இந்த துறைமுக விரிவாக்கம் துளியும் அவசியம் இல்லை.” என்றார்.