Published:Updated:

இது நமக்கான போராட்டம்!

கிரெட்டா துன்பெர்க்
பிரீமியம் ஸ்டோரி
கிரெட்டா துன்பெர்க்

“இங்கு நடக்கும் எல்லாமும் தவறாக உள்ளன. இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள்.

இது நமக்கான போராட்டம்!

“இங்கு நடக்கும் எல்லாமும் தவறாக உள்ளன. இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள்.

Published:Updated:
கிரெட்டா துன்பெர்க்
பிரீமியம் ஸ்டோரி
கிரெட்டா துன்பெர்க்

ருவநிலை நெருக்கடியைப் புரிந்துகொண்டு எங்கள் கோரிக்கையைக் கேட்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். எந்தச் சூழலிலும் உங்கள் வார்த்தைகளை நான் நம்பப்போவதில்லை. நாம் அனைவரும் பேரழிவின் விளிம்பில் நிற்கிறோம். ஆனால் அதை உணராமல் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சிபோன்றவற்றைப் பற்றி இங்கு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இனியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நாங்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்கவே மாட்டோம்” - 16 வயதான கிரெட்டா துன்பெர்க் உணர்ச்சி கொந்தளிக்க ஐ.நா.சபையில்பேசிய வார்த்தைகள்இவை. சமீபத்தில் நியூயார்க்கில் பருவநிலை தொடர்பான ஐ.நா உச்சி மாநாடு நடைபெற்றது. அதற்கு முன்தினம் அதே நகரில் இரண்டரை லட்சம் மாணவர்களைத் திரட்டி மிகப் பெரும் பேரணி நடத்தியுள்ளார் கிரெட்டா. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருந்தது சுவீடன். அந்தத் தருணத்தில், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே, 15 வயதேயுடைய ஒரு சிறுமி கையில் பதாகையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ‘உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்திலிருந்து பூமியைப் பாதுகாக்க வேண்டும்’ என்பதே அவர் அங்கு அமர்ந்திருந்ததற்கான காரணம். தனி ஒரு மனுஷியாகப் போராட்டத்தைக் கையில் எடுத்தபோது, அடுத்த ஆண்டின் இதே நேரத்தில் உலகமே தன்னோடு நிற்குமென்று அந்தச் சிறுமி கற்பனைகூடச் செய்திருக்க மாட்டார். அவருக்குத் தெரிந்ததெல்லாம், தன்னுடைய மற்றும் தன்னைப்போன்ற குழந்தைகளுடைய எதிர்காலம் பாதுகாப்பாக இல்லை; பூமி பாதுகாப்பாக இல்லை என்பது மட்டும்தான்.

இது நமக்கான போராட்டம்!

தாம் வாழும் பூமியைக் காக்க, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மட்டும் பள்ளிக்குச் செல்லாமல் சுவீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தினார். #FridaysForFuture என்ற அமைப்பைத் தொடங்கிப் பல நாடுகளுக்குச் சென்று பருவநிலை மாற்றம் குறித்துப் பேசினார். கிரெட்டாவின் கோரிக்கையை ஏற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக, மக்கள் அவர் பின்னால் வரத்தொடங்கினர். கிரெட்டா தொடங்கிய இந்தப் போராட்டம் குறித்து, முதலில் நகரம் முழுவதும் பேசத் தொடங்கினர். பிறகு சுவீடன் முழுவதும் பேசினர். இந்த ஓராண்டில் உலகம் முழுவதும் பரவியுள்ளன அவர் பெயரும், அவருடைய போராட்டமும்.

கடந்த ஆண்டின் இறுதியில், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு முழுநேரப் போராட்டக் களத்தில் குதித்தார். பருவநிலை மாற்றம் குறித்தும் அதைச் சரிக்கட்ட முறையான நடவடிக்கை எடுக்காத அரசுகள் குறித்தும் தொடர்ந்து பேசிவந்த இவருக்கு ஆதரவாக உலகின் பல்வேறு இடங்களிலுள்ள மாணவர்கள் பள்ளிகளைப் புறக்கணித்து வீதிக்கு வந்தனர்.

‘2019 செப்டம்பர் 20 முதல் 27 வரை உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாணவர்களும் எதிர்காலத்துக்காகப் போராட வேண்டும்’ என கிரேட்டா சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். சிறுமியின் அழைப்பை ஏற்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா, கனடா, ஹங்கேரி போன்ற 185 நாடுகளில், 6,100 இடங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் போராட்டத்தில் இறங்கினர். இந்தியாவில் மாணவர்கள் மட்டுமன்றி, பணியில் இருப்பவர்களும் களத்துக்கு வந்தனர். சென்னை, கேரளா, டெல்லி என 12 இடங்களில் பருவநிலை மாற்றம் தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற்றன.

‘ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாடு’, ‘உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம்’, நாடாளுமன்றம், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு இடங்களில் கிரெட்டா பேச அழைக்கப்பட்டார். தன்னுடைய செயல்பாடு களால், உலகம் முழுக்கப் பேராதரவையும் விமர்சனங்களையும் பெற்றார். ‘இயற்கைக்காகப் போராடும் இவருக்கு 2019-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும்’ என நார்வே நாட்டைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நோபலுக்கு இணையாகக் கருதப்படும் சுவீடன் நாட்டின் ‘ரைட் லைவ்லி ஹூட்’ (Right Livelihood) விருது கிரெட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது நமக்கான போராட்டம்!

உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்றவை சாதாரண விஷயமல்ல. இவை அனைத்தும் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, பருவநிலை மாற்றத்தின்மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிரெட்டா உள்ளிட்ட அனைவரின் நோக்கமாக உள்ளது. ‘எங்கள் எதிர்காலத்தை நீங்கள் அனைவரும் கேள்விக்குறியாக்கிவிட்டீர்கள். அதை நீங்களேதான் சரிசெய்ய வேண்டும். உங்கள் பாவங்களை எங்கள் தலையில் சுமத்திவிடாதீர்கள்’ என்பதுதான் இந்தப் போராட்டக் குரல்களின் அடிப்படை.

ஆட்டிசத்தின் ஒரு வகையான ‘அஸ்பெர்கர்’ குறைபாட்டால் (Asberger Syndrome) கிரெட்டா பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நினைத்ததைச் சரியாகப் பேச முடியாமல் இருந்தார். எட்டு வயதில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து அறிந்த இவர் அதைப்பற்றித் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்ததால், 11 வயதில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். “பாதுகாப்பான எதிர்காலத்தில் வாழ நமக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. நாம் பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே கேட்கிறோம். நம்மை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் மாற்றம் வந்துகொண்டி ருக்கிறது. அந்த மாற்றத்தின் விதைகளாக நாம் இருக்கப்போகிறோம்” என்ற கிரெட்டா துன்பெர்க்கின் உரை உலகளவில் கவனம் பெற்றன. அந்தக் கவனம் மனிதர்களை மிகப்பெரிய போராட்டத்திற்குத் தயார் செய்துகொண்டிருக்கிறது.