Published:Updated:

மரங்களில் தண்ணீர் பாட்டில்கள்... பறவைகளின் தாகம் தீர்க்கும் இளைஞர்கள்!

தண்ணீர் பாட்டில்கள்
தண்ணீர் பாட்டில்கள்

தினமும் ஒவ்வொரு குழுவும் அந்தந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட மரங்களில் கட்டப்பட்டிருக்கும் பாட்டில்கள்ல தண்ணீர், தானியத்தின் அளவைக் கண்காணிச்சு நிரப்பிக்கிட்டே இருப்போம்

இந்த கொரோனா ஊரடங்கால் அனைவருமே வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறோம். சுட்டெரிக்கும் கோடைக்காலம் தொடங்கியிருப்பதால், பெரும்பாலான குளங்கள், கிணறுகள் தண்ணீரின்றி வற்றிக் காணப்படுகின்றன. அதனால், உணவு, தண்ணீரைத் தேடி பறவைகளும் பல மைல்கள் தூரம் இடம்பெயர்ந்து செல்கின்றன.

எனவே, பறவைகளுக்குத் தேவையான தண்ணீர், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காந்திபுரத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பறவைகள் கூடும் பெரிய மரங்கள் மற்றும் பறவைகள் கூடு கட்டும் மரங்களின் கிளைகளில் பசியைப் போக்கவும், தாகத்தைத் தீர்க்கவும் காலி பாட்டில்களில் தண்ணீர் மற்றும் தானியங்களை நிரப்பிக் கட்டிவருகின்றனர்.

மரங்களில் தண்ணீர் பாட்டில்கள்... பறவைகளின் தாகம் தீர்க்கும் இளைஞர்கள்!

"இதனால், தானியம், தண்ணீரைத் தேடி மரங்களில் அதிக எண்ணிக்கையில் பறவைகள் கூடுகின்றன'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

"தினமும் ஒவ்வொரு குழுவும் அந்தந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட மரங்களில் கட்டப்பட்டிருக்கும் பாட்டில்கள்ல தண்ணீர், தானியத்தின் அளவைக் கண்காணிச்சு நிரப்பிக்கிட்டே இருப்போம். முதல் ரெண்டு நாள்கள் பறவைகளைக் காணோம். அடுத்தடுத்த நாள்களில் பறவைகளின் வரத்து கூடிச்சு. பழைய மாதிரி பறவைகளின் சத்தங்களைக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றனர்.

இந்த யோசனை உருவான விதம், செயல்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவர்கள் விவரித்ததை முழுமையாக வாசிக்க > பறவைகளின் பசியைப் போக்கும் இளைஞர்கள்! https://bit.ly/2ZJEaqS

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு