Published:Updated:

`காற்று மாசுபாட்டைத் தடுக்க யாகம்!' - உ.பி அமைச்சர் யோசனை

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் அறுவடை முடிந்தபின் சருகுகளை எரிப்பதால் உருவாகும் புகையால்தான் இந்த மாசு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

டெல்லி காற்று மாசுபாடு
டெல்லி காற்று மாசுபாடு ( vikatan )

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு முன்னெப்போதும் இல்லாத அளவு மிக மோசமடைந்துவருகிறது. காற்று மாசுபாட்டுக்கான குறியீடு 400 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ளது. இதனால் பலரும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப்பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லி காற்று மாசுபாடு
டெல்லி காற்று மாசுபாடு
vikatan

விவசாய நிலங்களில் சருகுகள் எரிக்கப்படுவதே, காற்று மாசுக்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. டெல்லியைச் சுற்றியுள்ள உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் அறுவடை முடிந்தபின் சருகுகளை எரிப்பதால் உருவாகும் புகையால்தான் இந்த மாசு அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

``பசுமைப் பட்டாசுகூட வெடிக்க வேண்டாமே..!’’ - காற்று மாசு குறித்து ஜவடேகர் வேதனை

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் இருவருமே இந்த குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர். தற்போது, பஞ்சாபில் 22,000 இடங்களிலும் ஹரியானாவில் 4,200 இடங்களிலும் சருகுகளை எரிப்பதன்மூலம் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, அந்த மாநிலங்களில் சருகுகளை எரிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காற்று மாசுபாடு
டெல்லி காற்று மாசுபாடு
vikatan

ஆனால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் சுனில் பரலா இதற்கு மாறான கருத்தைக் கூறியுள்ளார். ``விவசாய நிலங்களில் சருகுகளை எரிப்பதால் காற்று மாசுபடுவதில்லை. சூரியக் கடவுளான இந்திரனின் மனதைக் குளிரவைத்தால், அவரே மழையை வரவழைத்து இந்த சிக்கலைத் தீர்த்துவைப்பார். அதற்கு இந்திரனின் மனம் குளிர யாகம் நடத்தினால் போதும். அதைவிடுத்து, விவசாயிகளைக் குறைகூறுவதை நிறுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார். இவரது இந்தக் கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியுள்ளது.