Published:Updated:

நம்புங்க... பார் சோப்பு மாதிரி இது பார் ஷாம்பூ! 2019-ம் ஆண்டின் பசுமைப் பொருள்கள் #VikatanPhotoStory

பொதுப் பயன்பாட்டுக்குள் அதிகரித்த மக்கக்கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய பசுமைப் (சூழல்-சார்) பொருள்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சூழல்-சார் பசுமைப் பொருள்கள்
சூழல்-சார் பசுமைப் பொருள்கள்

நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் சூழலுக்கு உகந்ததாக இருப்பதில்லை. 2019-ம் ஆண்டு, சுற்றுச்சூழல் குறித்த விவாதங்களும் விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அதிகமாயின. அதன்விளைவாக, பொதுப் பயன்பாட்டிலிருந்த சூழலுக்கு விரோதமான பல்வேறு பொருள்களுக்கு மாற்றாகப் பசுமைப் (சூழல்-சார்) பொருள்கள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளன. பொதுப் பயன்பாட்டிற்குள் அப்படி அதிகரித்த மக்கக்கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய சூழல்-சார் பொருள்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

ஸ்பூன்கள்

ஸ்பூன்கள்
ஸ்பூன்கள்

பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்றவற்றால் தயாரிக்கப்படும் ஸ்பூன்கள், கிண்ணங்கள் அதிகளவில் பயன்பாட்டிலிருந்த நகர்ப்பகுதிகளில், இப்போது மரப்பொருள்கள் மற்றும் அரிசி, கோதுமை, கரும்புக் கழிவுகளை வைத்துத் தயாரிக்கும் ஸ்பூன்கள், கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எளிதில் மக்கிவிடுவதாலும் விவசாயக் கழிவுகளால் தயாரிக்கப்படுவதால் மண் வளத்தைப் பாதிக்காது என்பதாலும் இந்தச் சூழல்-ஸ்பூன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

தட்டுகள்

பாக்கு மட்டைத் தட்டுகள்
பாக்கு மட்டைத் தட்டுகள்
`ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000; 1லி பாலுக்கு ரூ.60' - பசுமை விகடன் பட்ஜெட் பரிந்துரைக் கூட்டத்தில் ஒலித்த குரல்!

முன்னர் பிளாஸ்டிக் தட்டுகள் அதிகப் பயன்பாட்டிலிருந்தன. தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்குத் தடை விதித்தைத் தொடர்ந்து, பாக்கு மட்டைகள், வாழை இலைகளின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.

பாலிதீன் பைகள்

துணி மற்றும் காகிதப் பைகள்
துணி மற்றும் காகிதப் பைகள்
`4 டன் பிளாஸ்டிக் சிமென்ட்  ஆலைக்கு விற்பனை!'- கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சூப்பர் முயற்சி

பாலிதீன் மற்றும் பாலிதீன் கலந்த, ஆனால் பார்ப்பதற்குத் துணிப்பை போலவே இருக்கும் பைகளால் சூழலுக்கு ஏற்படும் தீங்குகள் ஏராளம். இந்த ஆண்டில், அவற்றுக்கு மாற்றாகத் துணிப் பைகள், காகிகதப் பைகள், கோணித் துணியில் நெய்யப்பட்ட கூடை வகைகள் போன்றவற்றின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஸ்ட்ரா

காகித ஸ்ட்ரா
காகித ஸ்ட்ரா

இளநீர், பழச்சாறுகளை அருந்த அதிகமாகப் பயன்படும் ஸ்ட்ரா பொருள்கள் பிளாஸ்டிக்கில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதைத் தவிர்த்து, காகிதங்களால் தயாரிக்கப்படும் ஸ்ட்ராக்களின் பயன்பாடு, 2019-ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. இந்தக் காகித ஸ்ட்ராக்கள், சூழலுக்குக் கேடு விளைவிக்காத, எளிதில் மக்கக்கூடிய தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

மரச் சீப்புகள்

மரச் சீப்புகள்
மரச் சீப்புகள்

தலைகோதும் சீப்புகள் பிளாஸ்டிக்கில்தான் தயாரிக்கப்படுகின்றன. நம் அன்றாடப் பயன்பாட்டில், அவ்வளவு எளிதில் அப்புறப்படுத்த முடியாத கழிவுகளாகச் செல்லும் பிளாஸ்டிக் பொருள்களில் சீப்புகளும் ஒன்று. அதைத் தவிர்த்து, பெருவாரியான மக்கள் இந்த ஆண்டில் மரப் பொருள்களால் செய்யப்பட்ட சீப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

ஷாம்பூ

ஷாம்பூ பார்
ஷாம்பூ பார்

பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் ஷாம்பூ சேஷேக்கள், மிகவும் சிறியவை. அவற்றை மறுசுழற்சி செய்யவும் முடியாது. பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பகுதி, சேஷேக்களாகவே செல்கின்றன. அவற்றை முழுமையாக அப்புறபடுத்துவதும் சிரமமான காரியம். அதற்கு மாற்றாக இந்த ஆண்டில், பார் சோப் வடிவத்திலான ஷாம்பூக்களின் பயன்பாடு தொடங்கியுள்ளது. சோப்புகளைப் போலவே இருக்கும் இவற்றைத் தலைமுடிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காபி கப்கள்

காகிதத்தால் செய்யப்பட்ட கோல்ட் காபி கப்
காகிதத்தால் செய்யப்பட்ட கோல்ட் காபி கப்

காகிதங்களில் தயாரிக்கப்படும் டீ, காபி கப்களின் பயன்பாடு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கோல்ட் காபி விற்பனைகளில்கூட, அவற்றுக்கான கப்கள் காகிதங்களில் செய்யப்பட்டவையாக, ஸ்ட்ரா பயன்பாடின்றி குடிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

டூத் பிரஷ்கள்

மூங்கில் டூத் பிரஷ்கள்
மூங்கில் டூத் பிரஷ்கள்

டூத் பிரஷ்களின் கைப்பிடிகள் பிளாஸ்டிக்கில் செய்யப்படுகின்றன. அவற்றைக் குப்பைகளிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்துவது கடினமாக இருக்கின்றன. மூங்கில் குச்சிகளாலான கைப்பிடிகளைக் கொண்ட டூத் பிரஷ்களின் பயன்பாடு பெருவாரியான மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

மறுசுழற்சி அலுமினியம்

ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு தன்னுடைய தொழில்நுட்பங்கள் அனைத்தையுமே பழைய அலுமினியத்தை மறுசுழற்சி செய்வதன் மூலம் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட அளவுக்கு அலுமினிய உற்பத்தியைக் குறைத்துள்ளது.

ராக்கெட்புக் குறிப்பேடுகள் (Rocketbook Everlast Notebook)

Rocketbook Everlast Notebook
Rocketbook Everlast Notebook

ஆண்டுக்குச் சுமார் 200 மில்லியன் டன் காகிதம் பயன்படுத்தப்படுகிறது. காகிதங்களை மறுசுழற்சி செய்தாலும்கூட அவை பயன்பாட்டுக்குப் பிறகு கழிவாகத்தான் செல்கின்றன. இந்தக் கழிவு உற்பத்தியைக் குறைக்கும் விதத்தில், காலத்திற்கும் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் நோட்டுகள் வந்துள்ளன. ராக்கெட்புக் என்றழைக்கப்படும் அவற்றில் எழுதுவதற்கெனத் தனி பேனாக்களும் கொடுக்கப்படுகின்றன.

அதில், எழுதிவிட்டுத் துணியை வைத்துத் துடைத்து அழித்துவிட்டு, அதே காகிதத்தை மீண்டும் பயன்படுத்தலாம். இந்தக் குறிப்பேட்டிற்கென்றே தனி ஆப் வசதியும் உள்ளது. எழுதியவற்றை ஒளிப்படமெடுத்து ஆப்களில் சேமித்து வைத்துக்கொண்டு, அதே காகிதத்தை மீண்டும் பயன்படுத்தலாம். நீங்கள் எழுதிய வார்த்தைகளை, கணினிமயமாக்கும் வசதியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பசுமைப் பொம்மைகள்

Green Toys
Green Toys
Vikatan

ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு பெருங்கடல்களைச் சென்றடைகின்றன. 2050-ம் ஆண்டில், கடலிலுள்ள மீன்களைவிட அதிகமாக பிளாஸ்டிக் கழிவு இருக்குமென்று கணிக்கப்படுகிறது. அந்த நிலையைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு செயல்பாடுகளில் இந்த ஆண்டு பசுமைப் பொம்மைகளும் அதிகப் பங்களிப்பு செய்துள்ளன. கடலோரங்கள், நீர்நிலைகளுக்கு அருகிலும் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துவந்து, மறுசுழற்சி செய்து குழந்தைகள் விளையாடுவதற்கான பொம்மைகளாக மாற்றி சந்தைகளில் விற்கப்படுகின்றன. இதுபோன்ற பசுமை பொம்மைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்வதைத் தடுக்கின்றன.