Published:Updated:

`10,000 முருங்கை விதைகள், மரக்கன்றுகள்!’ - பதவியேற்பு விழாவில் நெகிழ வைத்த ஊராட்சி மன்றத் தலைவர்

பதவியேற்வு விழாவில் மரக்கன்றுகள் வழங்கும் கந்தசாமி
பதவியேற்வு விழாவில் மரக்கன்றுகள் வழங்கும் கந்தசாமி

வரவணை ஊராட்சியில் இருக்கும் 15 கிராமங்களிலும் வசிக்கும் மக்களுக்குப் பயனளிக்கும் விதமாக, 10,000 முருங்கை விதைகள் கொடுக்கப்பட்டன. அதோடு, 1000 பேருக்கு பலா, மா உள்ளிட்ட மரகன்றுகளும் வழங்கப்பட்டன.

ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்கும் விழாவில் 10,000 முருங்கை விதைகள், 1000 மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கி, `எனது ஐந்து வருடப் பதவிகாலத்தில் நம்ம ஊராட்சியை 100 சதவிகிதம் பசுமையான ஊராட்சியாக மாற்றிக் காட்டுவேன்' என்று உறுதிமொழி கொடுத்து, மக்கள் மனதில் மகிழ்ச்சியை விதைத்திருக்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர்.

பதவியேற்வு விழாவில் மரக்கன்றுகள் வழங்கும் கந்தசாமி
பதவியேற்வு விழாவில் மரக்கன்றுகள் வழங்கும் கந்தசாமி
Vikatan

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, வரவணை ஊராட்சி. இந்த ஊராட்சியில் வ.வேப்பங்குடி உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வ.வேப்பங்குடியைச் சேர்ந்த கந்தசாமி ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கந்தசாமி, ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். கந்தசாமி வரவணை ஊராட்சியின் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்கும் விழா, வரவணை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பதவியேற்வு விழாவில் மரக்கன்றுகள் வழங்கும் கந்தசாமி
பதவியேற்வு விழாவில் மரக்கன்றுகள் வழங்கும் கந்தசாமி

இனிதே நடந்த அந்த விழாவில், வரவணை ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றும் உறுதியைக் கொடுத்த கந்தசாமி, 15 கிராமங்களையும் பசுமையாக்கும் முயற்சியின் தொடக்கமாக முருங்கை விதை கொடுக்கப்பட்டது. வரவணை ஊராட்சியில் இருக்கும் 15 கிராமங்களிலும் வசிக்கும் மக்களுக்குப் பயனளிக்கும் விதமாக, 10,000 முருங்கை விதைகள் கொடுக்கப்பட்டன. அதோடு, 1,000 பேருக்கு பலா, மா உள்ளிட்ட மரகன்றுகளும் வழங்கப்பட்டன.

நல்ல முயற்சியைத் தொடங்கியிருக்கும் கந்தசாமி அவர்களுக்கு, `வாழ்த்துகள்' சொல்லி, அவரிடம் பேசினோம். ``நான் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவன். அரசியல்ல எல்லாம் ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தேன். ஆனா, மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து, `நீங்கதான் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு நிற்கணும்'னு சொன்னாங்க. முதல்ல நான் மறுத்துட்டேன். ஆனா, என் மகன் எங்க ஊரான வ.வேப்பங்குடியில் செய்திருக்கும் பசுமைப் புரட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லிய மக்கள், என்னை வறுபுறுத்தி நிற்கச் சொன்னாங்க. என் மகன் நரேந்திரன் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு கம்பெனியில் தொழில்நுட்ப ஆலோசகரா இருக்கிறான். கடந்த ஒருவருஷமா எங்க ஊரில் மரக்கன்றுகள் நடுதல், வீட்டுக்கு வீடு நாட்டுக்காய்கறி விதைகளைக் கொடுத்து வளர்க்க வைத்தல், ஊரைச்சுற்றிப் பழ மரங்களை வைத்தல்னு மாற்றினார். அதோடு, ஊருக்குப் பொதுவான இடம் ஓர் ஏக்கரில் சமூகக் காய்கறித் தோட்டம், அமைத்து மக்களுக்கு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை அர்ப்பணித்திருக்கிறார். சாதாரண வேப்பங்குடியா இருந்த எங்க ஊரை, இப்போ பசுமைக்குடியா மாத்தியிருக்கிறார்.

கந்தசாமி
கந்தசாமி

அதைப் பார்த்து வியந்துதான், எங்க ஊரையும் உள்ளடக்கிய வரவணை ஊராட்சியில் வரும் 15 கிராம மக்களும், என்னைத் தேர்தல்ல நிக்கச் சொன்னாங்க. மக்களோட அன்பைத் தட்டமுடியாம கடைசியில் தேர்தல்ல நிக்க வேண்டியதா போச்சு. ஆனால், அதே அன்போட எனக்கு வாக்களிச்சு, ஊராட்சிமன்றத் தலைவராக்கிட்டாங்க. அதனால், என் மகன் வேப்பங்குடியில் பண்ணின பசுமைப் புரட்சியை, நான் 15 கிராமங்களிலும் பண்ணப்போறேன். எனது 5 வருடப் பதவிக்காலத்திலும், வரவணை ஊராட்சியை 100 சதவிகிதம் பசுமையாக்குவேன். அதோடு, அடிப்படை வசதிகள், சுத்தம், தண்ணீர், சாலை வசதிகள் என எல்லாவகையிலும், வரவணை ஊராட்சியை இந்தியாவிலேயே முன்மாதிரி கிராமமாக மாற்றிக்காட்டுவேன். அந்த உறுதியை வரவணை ஊராட்சி மக்களுக்குப் பதவியேற்கும் நாளிலேயே கொடுக்கத்தான், 10,000 முருங்கை விதைகளையும், 1000 மரக்கன்றுகளையும் வழங்கினேன்" என்றார், மகிழ்ச்சியாக!.

அடுத்த கட்டுரைக்கு