Published:Updated:

Xiaomi-யிடம் 5,500 கோடி ரூபாய் பறிமுதல்: அமலாக்க இயக்குநரகம் அதிரடி!

Xiaomi ( Chinadaily.cn.com )

ராயல்டி என்ற பெயரில் பெரிய தொகையானது, சீன பெற்றோர் குழு நிறுவனம் ஒன்றுக்கும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட, தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமலாக்க இயக்குநகரம், 5,551.27 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி (Xiaomi) இந்திய அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதால் அந்த நிறுவனத்திடம் இருந்து, அமலாக்க இயக்குநரகம் 5,500 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்துள்ளது.

மொபைல் போன் வர்த்தகர் மற்றும் விநியோகஸ்தராக செயல்பட்டு வரும் Xiaomi India, MI என்ற பிராண்ட் பெயரிலும் அறியப்படுகிறது. இந்நிறுவனம் ராயல்டி என்ற பெயரில் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய பண மதிப்பில் 5,551.27 கோடிக்கு சமமான வெளிநாட்டு நாணயத்தை அனுப்பியுள்ளது.

அமலாக்க பிரிவு
அமலாக்க பிரிவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சட்ட விரோதமாக இந்த நிறுவனம் பணம் அனுப்பியது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்க இயக்குநரகம், இந்த ஆண்டு ஃபிப்ரவரியில் விசாரணையைத் தொடங்கியது. அதில், ராயல்டி என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகையானது, சீன பெற்றோர் குழு நிறுவனம் ஒன்றுக்கும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட, தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குநகரம் தெரிவித்தது. எனவே அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999-ன் விதிகளின் கீழ், நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து 5,551.27 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது அமலாக்க இயக்குநரகம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism