Published:Updated:

ஸ்விக்கியில் கேக் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... வாயடைக்கச் செய்த சம்பவம்!

கேக்

முட்டை சேர்க்கப்பட்டதா, இல்லையா என்பதை ஆர்டர் விவரத்தில் குறிப்பிடுவதற்குப் பதிலாக, கேக்கின் மீதே ``முட்டை சேர்க்கப்பட்டது" என எழுதப்பட்டு வந்திருக்கிறது.

ஸ்விக்கியில் கேக் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... வாயடைக்கச் செய்த சம்பவம்!

முட்டை சேர்க்கப்பட்டதா, இல்லையா என்பதை ஆர்டர் விவரத்தில் குறிப்பிடுவதற்குப் பதிலாக, கேக்கின் மீதே ``முட்டை சேர்க்கப்பட்டது" என எழுதப்பட்டு வந்திருக்கிறது.

Published:Updated:
கேக்

கபில் என்பவர் நாக்பூரில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கானது முட்டை கலந்து தயாரிக்கப்பட்டதா அல்லது முட்டை இல்லாததா எனக் குறிப்பிடும்படி உணவை விநியோகிக்கும் நிறுவனமான ஸ்விக்கியிடம் கேட்டுள்ளார்.

ஆர்டர் வந்ததும் பிரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முட்டை சேர்க்கப்பட்டதா, இல்லையா என்பதை ஆர்டர் விவரத்தில் குறிப்பிடுவதற்குப் பதிலாக, கேக்கின் மீதே ``முட்டை சேர்க்கப்பட்டது" என எழுதப்பட்டு வந்திருக்கிறது. சிரிப்பை வரவழைக்கக்கூடிய இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு கேக்கை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கபில் பகிர்ந்துள்ளார்.

இவரிடம் மன்னிப்பு கேட்கும் வகையில், ``உங்களின் கேள்வியை ஆர்டர் எடுத்தவர் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். உங்களுக்கு உதவ ஆர்டர் ஐடியைப் பகிரவும்'' என ஸ்விக்கி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

``ஆர்டர் எடுத்தவரை குறை சொல்லத் தேவையில்லை. உண்மையில் அவர் உங்கள் கேள்வியை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பின்பற்றியிருக்கிறார்...'' என்று நகைச்சுவையாக கமென்ட்ஸை பகிர்ந்து வருகிறார்கள் வலைதள மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism