மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த சித்தாதிபுரம் என்ற கிராமத்தில், அரசு துவக்கப் பள்ளி உள்ளது. "இங்கு, பல ஆண்டுகளாக மாணவர்களே இல்லாமல் தலைமை ஆசிரியர் மட்டுமே வந்து போகிறார்" என அதிர்ச்சியூட்டுகிறார்கள் கிராம மக்கள். https://bit.ly/2YDGsbN
சித்தாதிபுரத்தைத் தேடிச் சென்றோம். அங்கு உள்ள துவக்கப் பள்ளிக்குள் தலைமை ஆசிரியர் மகேஷ்வரி மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். கரும்பலகையில் பாடங்கள் எழுதப்பட்டிருந்தன. தலைமை ஆசிரியருக்கு ஒரு டேபிள் மற்றும் நாற்காலியைத் தவிர்த்து, மற்ற பொருள்கள் உடைந்து கிடந்தன. சிறுவர்களின் சலசலப்பு கேட்கவேண்டிய பள்ளியில், குண்டூசி போட்டால் கேட்கும் அளவுக்கு அமைதி.
தலைமை ஆசிரியர் மகேஷ்வரி, ஆரம்பத்தில் பள்ளியைப் புகைப்படம் எடுக்கவே மறுப்பு தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்திப் பேசினோம்.

"நான் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, 12 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் வேலை செய்கிறேன். பேருந்து வசதிகள் இல்லாத இந்தப் பள்ளிக்கு, மிகவும் கஷ்டப்பட்டுதான் வந்து செல்கிறேன். செங்கல்சூளையில் வேலை செய்பவர்களுடன் வேனிலும், சில நேரம் ஆட்டோவிலும் வந்து செல்கிறேன். அதிக மாணவர்கள் படித்த இந்தப் பள்ளியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்கைந்து குழந்தைகள்தான் படித்தனர். தற்போது இரண்டு குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். அவர்களும் உறவினரின் ஊருக்கு இப்போது சென்றுள்ளனர். சில நாள்களில் வந்துவிடுவார்கள்.
அந்த இரண்டு மாணவர்களும் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு என் சொந்த செலவில் உணவு வாங்கிக் கொடுக்கிறேன். நல்லபடியாகச் சொல்லிக்கொடுக்கிறேன். ஆனால், இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள், தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் படிக்கவைக்காமல் வெளியூர்களிலும் ஆங்கிலப் பள்ளியிலும் படிக்கவைக்கின்றனர். இதனால் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. மாணவர்கள் இல்லையென்பதால், இங்கே இருந்த ஆசிரியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆறு வருடங்களாக தனி ஆளாகப் பள்ளியில் வேலை செய்கிறேன். மிகவும் கஷ்டமாக உள்ளது. என்னையும் பணியிட மாற்றம் செய்யக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

> இந்தப் பள்ளியின் அவல நிலை குறித்து சித்தாதிபுரம் கிராம மக்கள், மதுரை சி.இ.ஓ சுவாமிநாதன் சொல்வது என்ன? - 'கஷ்டத்தில் காமராஜர் காலத்துப் பள்ளி! - இரண்டே மாணவர்கள்... அவர்களையும் காணோம்!' https://www.vikatan.com/social-affairs/education/kamarajar-period-school-have-only-hm-without-teachers-and-students எனும் ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையில் முழுமையாக வாசிக்கலாம்.
> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/