Published:Updated:

ஒரே ஆண்டில் 45 பத்திரிகையாளர்கள் படுகொலை; இந்தியாவில் மட்டும் 6 பேர் - அதிர்ச்சி அறிக்கை!

ஊடக சுதந்திரம்
News
ஊடக சுதந்திரம்

உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த 45 பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்ததற்காக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.

2021-ம் ஆண்டு உலக அளவில் 45 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகை நிறுவனம் (International Press Institute (IPI)) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளைச்செய்ய மிகவும் அபாயகரமான நாடுகள் என மெக்சிகோ, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சர்வதேச பத்திரிகை நிறுவனம் அறிக்கை விவரம்
சர்வதேச பத்திரிகை நிறுவனம் அறிக்கை விவரம்
International Press Institute

கடந்த 70 ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் குறித்த உலகளாவிய தகவல்களை திரட்டி, ஆய்வறிக்கையின்மூலம் ஆவணப்படுத்தி, சர்வதேச பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அந்தவகையில், நேற்று (டிசம்பர் 29) வெளியிட்டிருக்கும் `IPI Death Watch - 2021' எனும் அறிக்கையில், இந்த ஆண்டில் மட்டும் உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த 45 பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்ததற்காக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. அதில், 7 பத்திரிகையாளர்கள் படுகொலையுடன் மெக்சிகோ முதலிடத்திலும், 6 படுகொலைகளுடன் இந்தியா, ஆப்கானிஸ்தான் முறையே இரண்டாம் இடத்திலும், 3 படுகொலைகளுடன் காங்கோ ஜனநாயக குடியரசு மூன்றாம் இடத்திலும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் நடந்த 45 கொலைகளில் 28 கொலைகள் திட்டமிட்டு, குறிவைத்து செய்யப்பட்டவை என்றும், 11 கொலைகள் விசாரணையின்போது நிகழ்த்தப்பட்ட கொலைகள் என்றும் கூறியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மேலும், இந்த நாடுகளை பத்திரிகையாளர்கள் வாழ்வதற்கும், பணியாற்றுவதற்கும் மிகவும் ஆபத்தான நாடுகள் என சர்வதேச பத்திரிகை நிறுவனம் வகைப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில், அரிந்தம் தாஸ் (ARINDAM DAS), புத்திநாத் ஜா (BUDDHINATH JHA), சென்னகேசவலு (CHENNAKESHAVALU), மனிஷ் குமார் சிங் (MANISH KUMAR SINGH), ராமன் காஷ்யப் (RAMAN KASHYAP), சுலாப் ஶ்ரீவஸ்தவா (SULABH SRIVASTAVA) ஆகிய ஆறு பத்திரிகையாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் படுகொலை காரணங்கள்
பத்திரிகையாளர்கள் படுகொலை காரணங்கள்
IPI

இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் `எல்லை கடந்த பத்திரிகையாளர்கள் அமைப்பு' வெளியிட்ட பத்திரிகை சுதந்திரத்துக்கான நாடுகளின் பட்டியலில், இந்தியாவை `மோசம்' என்ற பிரிவில் வகைப்படுத்தியிருந்தது. மேலும், இந்தியாவில் பத்திரிகையாளர்கள் அனைத்துவிதமான தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர் என்றும், பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பான தரவரிசையில் இந்தியா 142-வது இடத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளிட்டிருந்தது.

சர்வதேச பத்திரிகை நிறுவனம் அறிக்கை நாடுகளின் விவரம்
சர்வதேச பத்திரிகை நிறுவனம் அறிக்கை நாடுகளின் விவரம்
IPI

கடந்த பத்தாண்டுகளாகவே இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும், அதுகுறித்தான உலகளாவிய ஆய்வறிக்கைகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்துவருவதும் வாடிக்கையாகிவிட்டது. அதேசமயம், பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்காக தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.