Published:Updated:

30 ஆண்டுகளுக்கு முன் வைரலான ஆப்கன் பெண் ஷர்பத் குலா; இப்போது இத்தாலியில் தஞ்சம்; ஏன்?

Sharbat Gula
News
Sharbat Gula ( AP Photo/B.K. Bangash, File )

ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஆப்கானிஸ்தானில் இருந்து கிட்டத்தட்ட 5,000 ஆப்கானியர்களை வெளியேற்றியதாக ரோம் கூறியது. வெளியேறியவர்களில் பலர் பல மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

1980-ல் நேஷனல் ஜியாகிரஃபிக் இதழின் அட்டைப் படத்தில் இடம் பெற்ற பச்சை நிற கண்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் அகதிப் பெண் ஷர்பத் குலா, இத்தாலிக்கு இடம்பெயர்ந்திருப்பதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. ``ஆப்கானிஸ்தான் குடிமகள் ஷர்பத் குலா ரோம் வந்தடைந்தார்" என்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கும் அந்த அரசு, அவர் எப்போது வந்தார் என்ற தேதி எதையும் குறிப்பிடவில்லை.

ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டை விட்டு ஷர்பத் குலா வெளியேற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக ரோம் கூறியிருக்கிறது.

Sharbat Gula
Sharbat Gula
AP Photo/Rahmat Gul

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1980களில் அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கரி பாகிஸ்தான் முகாமில் எடுத்த புகைப்படத்தையடுத்து, குலா ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான அகதி ஆனார்.

குலாவின் புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் முகப்பு அட்டையில் வெளியிடப்பட்டது. 1979-ல் சோவியத் படையெடுப்பிற்கு பிறகு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகேதான் முதலில் ஆதரவற்றவராக பாகிஸ்தானுக்கு வந்ததாக குலா கூறினார். அன்றிலிருந்து எல்லையில் அடைக்கலம் தேடி தஞ்சம் புகுந்த லட்சக் கணக்கான ஆப்கானியர்களில் குலாவும் ஒருவர்.

மோசடி அடையாள ஆவணங்களோடு பாகிஸ்தானில் வசித்ததற்காக 2016- ல் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார்.

Sharbat Gula
Sharbat Gula
AP Photo/B.K. Bangash, File

ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஆப்கானிஸ்தானில் இருந்து கிட்டத்தட்ட 5,000 ஆப்கானியர்களை வெளியேற்றியதாக ரோம் கூறியது. வெளியேறியவர்களில் பலர் பல மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அதில் இத்தாலியும் ஒன்றாகும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலைமையிலான இந்தப் பணிகளில் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் துருக்கியுடன் அதிகம் ஈடுபட்டுள்ள நாடுகளுள் இத்தாலியும் ஒன்றாகும்.