Published:Updated:

விமானங்களுக்கான வான்வெளி எல்லையை மூடிய ஆப்கானிஸ்தான்... இதனால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

ஆப்கன் வான்வெளி எல்லை மூடல்
ஆப்கன் வான்வெளி எல்லை மூடல்

ஆப்கன் வான்வெளி எல்லைக்குள் பறக்கும் விமானங்களுக்கு உரியச் சேவைகளை தரைதளத்தில் இருந்து அளிக்க முடியாது என Afghanistan Civil Aviation Authority (ACAA) கடந்த திங்கள் அன்று அறிவித்தது.

ஆப்கானிஸ்தான் வான்வெளி எல்லை கடந்த திங்கள் முதல் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, காபூலில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்தியாவில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் விமானங்களும் ஆப்கன் வான்வெளி எல்லை வழி இனி செல்ல முடியாது என்பதால் விமானப் பயண நேரம் அதிகரித்திருக்கிறது. தற்போது காபூல் விமான நிலையத்தில் ராணுவ விமானங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

Afghan airspace closed
Afghan airspace closed

ஆப்கன் வான்வெளி எல்லைக்குள் பறக்கும் விமானங்களுக்கு உரியச் சேவைகளை தரைதளத்தில் இருந்து அளிக்க முடியாது என Afghanistan Civil Aviation Authority (ACAA) கடந்த திங்கள் அன்று அறிவித்ததோடு, அப்போது பறந்து கொண்டிருந்த பயணியர் விமானங்களையும் ஆப்கன் வான்வெளி எல்லைக்குள் நுழையாமல் வேறு பாதையில் செல்ல வலியுறுத்தியது. இந்தப் புதிய கட்டுப்பாடுகளினால் காபூலில் இருந்து 160 இந்தியர்களை இந்தியாவுக்குக் கொண்டுவரவிருந்த ஏர் இந்தியா விமானத்தால் இந்தியா திரும்ப முடியவில்லை.

இந்தியாவில் இருந்து லண்டன் அல்லது நியூயார்க் என மேற்கு நோக்கிச் செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - உஸ்பெகிஸ்தான் பாதை வழியாகவே சென்று வந்து கொண்டிருந்தன. தற்போது ஆப்கானிஸ்தானில் பறக்க முடியாது என்பதால் இனி பாகிஸ்தான் - இரான்- துருக்கி வழியாகச் செல்லும். இதனால் பயணநேரம் 20 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போது அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்தது ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானம். ஆப்கன் எல்லைக்குள் அந்த விமானம் நுழைவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னால் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், கடைசி நேரத்தில் அந்த விமானம் ஷார்ஜாவிற்கு திருப்பிவிடப்பட்டது. இதேபோல சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த விமானமும் கடைசி நேரத்தில் ஷார்ஜாவிற்கு திருப்பிவிடப்பட்டது. இரண்டு விமானங்களும் ஷார்ஜாவில் எரிபொருள் நிரப்பிவிட்டு இந்தியா வந்தடைந்தன.

அடுத்த கட்டுரைக்கு