Published:Updated:

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராகும் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க பெண் கரீன் ஜீன்-பியர்!

Karine Jean-Pierre ( AP Photo/Andrew Harnik, File )

அதிபருடன் பணிபுரியும் பத்திரிக்கை செயலாளர்கள் தினமும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் சந்திப்புகளை நிகழ்த்துவதால், தற்போது இவருக்கு ஒதுக்கப்பட்ட பதவி சவாலானதாகவும், உயர்வானதாகவும் இருக்கும்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது புதிய செய்தி தொடர்பாளராக கரீன் ஜீன்-பியரை (Karine Jean-Pierre) நியமித்துள்ளார். ஆப்பிரிக்க - அமெரிக்கரை, அதிலும் தன் பாலீர்ப்புடைய பெண் செய்தித் தொடர்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

44 வயதான ஜீன்-பியர், பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து முதன்மை துணைச்செய்திச் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

Karine Jean-Pierre
Karine Jean-Pierre
AP Photo/Evan Vucci

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதன்மை துணைச்செய்திச் செயலாளராகப் பணிபுரிந்த 43 வயதான ஜென் சாகி, அடுத்த வாரத்தின் இறுதியில் பதவியை விட்டுச்செல்வதால், அவருக்கு பதிலாக முதன்மை பணியிடத்தில் ஜீன்-பியர் இருப்பார். அதிபருடன் பணிபுரியும் பத்திரிக்கை செயலாளர்கள் தினமும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் சந்திப்புகளை நிகழ்த்துவதால், தற்போது இவருக்கு ஒதுக்கப்பட்ட பதவி சவாலானதாகவும், உயர்வானதாகவும் இருக்கும்.

இவருக்கு அளிக்கப்பட்ட பதவியையடுத்து, அவரை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜென் சாகி பதிவிட்டுள்ளார். ``அவரது தனித்துவமான பாணி, புத்திசாலித்தனம், செயல்பாங்கு ஆகியவற்றைப் பார்ப்பதற்குக் காத்திருக்கிறேன்..'' என தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism