Published:Updated:

போர்க்களமான பொலிவியா

பொலிவியா
பிரீமியம் ஸ்டோரி
பொலிவியா

கனிமவளங்களை கைப்பற்றத் துடிக்கும் வல்லரசுகள்...

போர்க்களமான பொலிவியா

கனிமவளங்களை கைப்பற்றத் துடிக்கும் வல்லரசுகள்...

Published:Updated:
பொலிவியா
பிரீமியம் ஸ்டோரி
பொலிவியா

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், கடந்த இரு வாரங்களாக வன்முறை கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ளது. இதுவரை 32 உயிர்கள் பலியாகியுள்ளன. அதிபர் ஈவோ மொராலிஸ் பதவி விலகியதுடன், நாட்டைவிட்டும் வெளியேறி மெக்ஸிகோவில் தஞ்சமடைந் துள்ளார். நாடே ஸ்தம்பித்து உள்ளது. கடந்த அக்டோபரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மொராலிஸ் செய்த தில்லுமுல்லுகள் மட்டுமே இந்த நிலைக்குக் காரணமல்ல... கனிமவளமிக்க தென் அமெரிக்க நாடுகளை அடக்கி ஆளத் துடிக்கும் வல்லரசு களின் சதித்திட்டமும்தான்.

உலகளவில் மின்சார கார்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியவுடன் பேட்டரிகளின் தேவையும் அதிகரித்தது. பேட்டரி உற்பத்திச் செய்யத் தேவைப்படும் மூலப்பொருளான லித்தியம் தேவையும் கணிசமாக உயர்ந்தது. ‘வெண்மைத்தங்கம்’ என்றழைக்கப்படும் லித்தியம், பொலிவியாவில் கொட்டிக் கிடக்கிறது. உலகளவில் லித்தியம் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருக்கிறது பொலிவியா.

பொலிவியா
பொலிவியா

உலகளவில் லித்தியத்தின் தேவை 55 சதவிகிதம் வரை உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் ஜெர்மனி, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பொலிவியாவைக் குறிவைக்கத் தொடங்கின. பொலிவியாவின் கனிமவளத்தைப் பெறுவதற்கு இந்தியாவும் களத்தில் குதித்துள்ளது. தனக்கு எதிராகச் செயல்படும் அரசுகள், தென் அமெரிக்க நாடுகளில் நீடிப்பதை அமெரிக்கா எப்போதும் விரும்புவதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோகோ விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த இடதுசாரியான ஈவோ மொராலிஸ் 2005-ம் ஆண்டில் அதிபர் ஆனவுடன், நாட்டின் முன்னேற்றத்துக்காக பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். முதலில், அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்களை தேசியமயமாக்கினார். அமெரிக்கா ஆத்திரமடைந்தது. அதேசமயம், தென் அமெரிக்க நாடுகளில் மிகவும் ஏழைநாடாக இருந்த பொலிவியா, மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்தது. நாட்டில் ஏழ்மை 38 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாகக் குறைந்தது. உலக இடதுசாரிகளின் நாயகன் ஆனார் மொராலிஸ். கடந்த 2009, 2014-ம் ஆண்டு அதிபர் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்றார் மொராலிஸ்.

ஈவோ மொராலிஸ், ஜீனைன் அனீஸ்
ஈவோ மொராலிஸ், ஜீனைன் அனீஸ்

கடந்த 2008-ம் ஆண்டில் அமெரிக்கத்தூதரை நாட்டைவிட்டு வெளியேற்றியது, 2013-ல் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தை நாட்டைவிட்டுத் துரத்தியது ஆகியவை அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தின. இந்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்து கனிமவளங்களையும் தேசியமயமாக்கி, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஒடுக்கினார் மொராலிஸ். எனவே, வல்லரசுகள் இவரை ஒழித்துக்கட்டக் காத்திருந்தன.

நாட்டின் முதல் பூர்வகுடி அதிபர் மற்றும் நீண்டகாலம் அதிபராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் மொராலிஸ். ஆனால், நான்காவது முறையாக அதிபர் ஆவதற்காக, அரசியலமைப்புச் சட்டங்களை தனக்குச் சாதகமாக வளைத்து தேர்தல் ஆணையத்தை தன் கைக்கூலியாக மாற்றியதால், அவரின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. கடந்த அக்டோபரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நிகழ்த்திய தில்லுமுல்லுகள், இவருக்கு எதிராகத் திரும்பின. இது தொடர்பாக விசாரணை நடத்த இவரே நியமித்த அமெரிக்க நாடுகளுக் கான அமைப்பும், தேர்தலில் குளறுபடி கள் நடந்ததை உறுதிசெய்ததால், நிலைமை மோசமானது.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. நிலைமையைச் சமாளிக்க மீண்டும் தேர்தல் நடத்த முன்வந்தார் மொராலிஸ். தேர்தலில் மொராலிஸ் போட்டியிடக் கூடாது என்று எதிர்க் கட்சிகள் போர்க்கொடி தூக்கின. பழிவாங்கக் காத்திருந்த அந்நிய சக்திகளும் பன்னாட்டு நிறுவனங்களும், மொராலிஸுக்கு எதிராகச் செயல்பட்டன. அரசியல் போராட்டம் கலவரமாக மாறியது. வன்முறை வெடித்தது. ராணுவமும் காவல்துறையும் அதிபருக்கு எதிரியாகின.

போர்க்களமான பொலிவியா

மொராலிஸ் தன் பதவியை ராஜினாமா செய்யும்படி ராணுவத் தளபதி வில்லியம்ஸ் காலிமான் நிர்பந்தித்தார். வேறு வழியின்றி நவம்பர் 10-ம் தேதி மொராலிஸ் ராஜினாமா செய்தார். துணை அதிபர் அல்வாரோ கார்சியா லினெராவும் மற்ற செனட் உறுப்பினர் களும் ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறி மெக்ஸிகோ வில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஜீனைன் அனீஸை எதிர்க்கட்சிகள் இடைக்கால அதிபர் ஆக்கின. இவரை முதலில் அங்கீகரித்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். ஆனாலும் நிலைமை சீராகவில்லை.

தீ வைப்பு, சூறையாடல் என வன்முறை தாண்டவமாடுகிறது. அரசியல் வெற்றிடத்தை யார் நிரப்பப் போகிறார் கள் என்ற குழப்பம் நிலவுகிறது.

அந்நிய சக்திகளின் சதியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜோஸ் முஜிகா. ‘தென் அமெரிக்க நாடுகளின் கனிமவளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கும் அவர்களின் (அமெரிக்கா வின்) ஆட்டத்தின் ஒரு பகுதிதான் இது. மக்கள் ஏமாறக் கூடாது’ என்று முன்னரே எச்சரித்தவர் ஜோஸ். இன்று, சுமார் 1.1 கோடி மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

வர்த்தக நலன்களுக்காக எத்தனை நாடுகளை வல்லரசுகள் சீரழிக்கப் போகின்றனவோ தெரியவில்லை!