Published:Updated:

450 கருமுக குரங்குகளை கொல்ல உத்தரவிட்ட நாடு... ஏன் தெரியுமா?

வெர்வெட் குரங்கு
News
வெர்வெட் குரங்கு ( Pixabay )

வெர்வெட் குரங்குகள் பெரும்பாலும் சைவ உணவு விரும்பிகள். இலைகள், இளம் தளிர்கள், பட்டை, பூக்கள், பழங்கள், வேர்கள், புல் மற்றும் விதைகளையும் இவை உண்கின்றன.

கரீபியன் நாடான சின்ட் மார்டனில் உள்ள ஒட்டுமொத்த வெர்வெட் குரங்குகளையும் அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

வெர்வெட் குரங்குகள் உருவத்தில் சிறியவை. தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இவற்றின் முகம், காது, கை, கால், வால்நுனி போன்றவை கறுப்பாக இருக்கும்.

வெர்வெட் குரங்கு
வெர்வெட் குரங்கு
Pixabay

உடலைச் சுற்றியும் வெண்ணிற ரோமங்கள் இருக்கும். பெண் குரங்குகளைவிட ஆண் குரங்குகள் நீளமாக இருக்கும். இந்த குரங்குகள் 17-ம் நூற்றாண்டுகளில் கரீபியன் தீவை அடைந்துள்ளது.

வெர்வெட் குரங்குகள் பெரும்பாலும் சைவ உணவு விரும்பிகள். இலைகள், இளம் தளிர்கள், பட்டை, பூக்கள், பழங்கள், வேர்கள், புல் மற்றும் விதைகளையும் இவை உண்கின்றன.

இந்த வகை குரங்குகள் விவசாய நிலங்களில் பயிர்களைத் தாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாகத் தொடர்ந்து விவசாயிகள் புகார் அளித்து வந்தனர். இதனால் வெர்வெட் குரங்குகளை தொல்லையாக அந்நாட்டில் நினைத்தனர். விவசாயிகள் பலர் அளித்த புகாரின் அடிப்படையில், கரீபியன் தீவில் வளர்ந்து வந்த வெர்வெட் குரங்குகளை அழிக்க தற்போது அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு நிதியுதவியளிக்கும் `நேச்சர் ஃபவுண்டேஷன் செயின்ட் மார்டன்’ என்ற அறக்கட்டளை மூலமாக, 450-க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப்பட்டு அடுத்த மூன்று வருடங்களில் கருணைக் கொலை செய்யப்பட உள்ளது.

வெர்வெட் குரங்கு
வெர்வெட் குரங்கு
Pixabay

இந்த அறக்கட்டளையின் மேலாளர் லெஸ்லி ஹிக்கர்சன் கூறுகையில், ``ஓர் உயிரினம், அதன் பூர்வீகம் இல்லாத ஒரு பகுதியில் அதிகமாக வளர்கிறது என்றால், அதன் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். எங்களுக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்குத் தீவை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு உயிரினங்களைக் கட்டுப்படுவது முக்கியம்'' என்று தெரிவித்துள்ளார்.  

வெர்வெட் குரங்குகளைக் கொல்லாமல், அதற்கு மாற்றாக அவற்றிற்குக் கருத்தடை செய்வது அவற்றின் எண்ணிக்கையை பெருக்கமடைவதில் இருந்து குறைக்கும் என விலங்கு நல ஆர்வலர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.