Published:Updated:

Ghost town: Chernobyl - உலகின் மிகப்பெரிய சவப்பெட்டியைக் கொண்ட நகரம்! | பகுதி 5

செர்னோபில்

வெளிவந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடுமையான தலைவலி, வாயில் மெட்டாலில் சுவையை உணர்வது, இருமல், வாந்தி எனஒ பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. அதில் பலர் இறக்கவும் நேரிட்டது.

Ghost town: Chernobyl - உலகின் மிகப்பெரிய சவப்பெட்டியைக் கொண்ட நகரம்! | பகுதி 5

வெளிவந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடுமையான தலைவலி, வாயில் மெட்டாலில் சுவையை உணர்வது, இருமல், வாந்தி எனஒ பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. அதில் பலர் இறக்கவும் நேரிட்டது.

Published:Updated:
செர்னோபில்
அன்றைய நாள் அந்த ரேடியோவின் குரல் பெரும் பதைபதைப்பாக இருந்தது. வழக்கமாக உற்சாகத்தை வெளிப்படுத்தும் அந்தக் குரல் அன்று பெரும் பயத்தை வெளிப்படுத்தியது…

“ மக்களின் கவனத்துக்கு… தோழர்களே ! நகரக் கூட்டமைப்பு அறிவிப்பதாவது…

செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4-ம் எண் ரியாக்டரில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பிரிப்யாட் நகரம் முழுக்க அபாயகரமான கதிர்வீச்சுகள் பரவிவருகின்றன. இது நகர மக்களுக்குப் பாதுகாப்பனது அல்ல. அதனால், உடனடியாக நகரைவிட்டுக் கிளம்புங்கள். தற்காலிகமாகத்தான். உங்களுக்கான பேருந்துகள் உங்கள் வீடு தேடி வரும். இன்று ஏப்ரல் 27, மதியம் 2 மணி முதல் உங்களுக்கான பேருந்துகள் வரத் தொடங்கும் . உடனடியாக பிரிப்யாட்டைவிட்டுக் கிளம்புங்கள்.”

Ghost town: Chernobyl - உலகின் மிகப்பெரிய சவப்பெட்டியைக் கொண்ட நகரம்! | பகுதி 5

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தச் செய்தி அந்த நகரைப் பெரும் பரபரப்புக்குள் தள்ளியது. `மூன்று நாள்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சுற்றுலாவுக்கு கிளம்புவதுபோல் கிளம்புங்கள்’ என்று அரசாங்கம் அறிவித்தது. அரசுக்குத் தெரியும், அது சுற்றுலாப்பயணமும் அல்ல… மூன்று நாள்கள் அல்ல… 30 வருடங்கள் ஆனாலும், அந்த மக்கள் மீண்டும் நகரத்துக்குத் திரும்ப முடியாது என்று. ஆனால், அந்த ஊர் மக்கள் மூன்று நாள்களில் திரும்பிவிடலாம் என்ற நினைப்பில் நகரத்தைவிட்டுக் கிளம்பினார்கள்.

1980-களின் காலகட்டத்தில் உலகிலேயே அதிக பாதுகாப்பானது `Nuclear Power Stations’ என்று சொல்லப்படும் `அணு மின் நிலையங்கள்’தான் என்பதை அன்றைய சோவியத் ரஷ்யா உறுதியாக நம்பியது. அதன் பொருட்டு, ரஷ்யாவின் பல பகுதிகளிலும் அணுமின் நிலையங்களை அது நிறுவியது. அதில் ஒன்றுதான் அன்றைய சோவியத் ரஷ்யா… இன்றைய உக்ரைனில் இருக்கும் `செர்னோபில் அணுமின் நிலையம்.’

செர்னோபில்
செர்னோபில்

செர்னோபில் அணுமின் நிலையத்தில் வேலை செய்பவர்களுக்காக ஒரு பிரத்தியேக நகரை நிர்மாணித்தது சோவியத் ரஷ்யா. இப்படி உருவாக்கப்படும் நகரங்களை `AtomGrad’ என்று ரஷ்யாவில் குறிப்பிடுவார்கள். இந்த நகரங்களுக்கு அரசின் முழு அனுமதி பெற்றுத்தான் போக வேண்டும்.

அப்படியாக, செர்னோபில்லிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்திருந்த அந்த நதிக்கரையை ஒட்டி ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. அந்த நதியின் பெயரே அந்த நகரத்துக்குச் சூட்டப்பட்டது. பிரிப்யாட்.

செர்னோபில்
செர்னோபில்

13,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள், 15 மழலையர் பள்ளிகள், 25 கடைகள், ஒரு பெரிய மருத்துவமனை, இரண்டு விளையாட்டரங்கம், 35 மைதானங்கள், 18,000-க்கும் அதிகமான மரங்கள், 33,000 ரோஜாச் செடிகள், சினிமா தியேட்டர், கேளிக்கை விடுதிகள், நீச்சல்குளங்கள் எனச் சகல வசதிகளோடு அந்த நகரி்ல், பேரழிவுக்கு முன்னர் வரை கிட்டத்தட்ட 50,000 பேர் வசித்துவந்தார்கள்.

ரஷ்யா
ரஷ்யா

மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்த அந்த மக்களின் வாழ்க்கை 26 ஏப்ரல், 1986 நள்ளிரவு 1:23-க்கு மொத்தமாகத் தடம் மாறியது.

செர்னோபில்
செர்னோபில்

செர்னோபில் உலை எண் 4 - RBMK Type Nuclear Reactor வகையைச் சார்ந்தது. நாம் பென்சிலுக்கு உபயோகிக்கும் கிராஃபைட்டை (Graphite ) மூலப்பொருளாகக்கொண்டு இயங்கும் ஒரு வகை உலை அது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருவேளை திடீர் மின்தடையோ, மின்வெட்டோ ஏற்பட்டால் இந்த உலையைச் சமாளிப்பது எப்படி, அதன் வெப்பநிலையை ஓடும் தண்ணீர்கொண்டு சீராக வைப்பது எப்படி என்பது போன்ற விஷயங்களுக்கான ஒத்திகை அவ்வப்போது நடப்பது வழக்கம். 1982 முதல் மூன்று முறை இந்த ஒத்திகைகள் பார்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆராய்ச்சியாளர்களுக்கு எதிர்பார்த்த விடைகள் கிடைக்காமலேயே இருந்தன.

செர்னோபில்
செர்னோபில்

26 ஏப்ரல், 1986 அன்று நான்காவது ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒத்திகை ஒரு மிகப்பெரிய விபத்தில் சென்று முடிந்தது. உலை எண் 4… வெடித்துச் சிதறியது. இதில் இரண்டு பெரு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று, நீராவி வெடிப்பு (Steam Explosion ), மற்றொன்று, அணு வெடிப்பு (Nuclear Explosion).

அன்று ஏற்பட்ட அணு வெடிப்பின் காரணமாக, கதிரியக்கக் கூறுகள் (Radioactive Elements ) காற்றில் விஷமாகப் பரவ ஆரம்பித்தன.

செர்னோபில்
செர்னோபில்

அன்றைய காலகட்டங்களில் அது ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவாக இருந்ததால், எந்தவொரு கட்டளையும் தலைநகர் மாஸ்கோவிலிருந்து வர வேண்டும் என்கிற நிலையிருந்தது. இந்த விபத்தின் செய்தி, மாஸ்கோவை அடைந்து மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு வர ஒரு நாள் அவகாசமானது. அந்த ஒரு நாள் வரை… மக்கள் அனைவரும் அந்த விஷக் காற்றை சுவாசித்தவாறு பிரிப்யாட் நகரிலேயேதான் இருந்தார்கள்.

அணு உலை
அணு உலை

மாஸ்கோவிலிருந்து உத்தரவு வந்ததும், பேருந்துகளில் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். உலை வெடித்ததில், அங்கு அப்போது பணியிலிருந்த இரண்டு பேர் மரணமடைந்தார்கள். நகரைவிட்டு வெளிவந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடுமையான தலைவலி, வாயில் மெட்டாலில் சுவையை உணர்வது, இருமல், வாந்தி என பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. அதில் பலர் இறக்கவும் நேரிட்டது.

Ghost town: Chernobyl - உலகின் மிகப்பெரிய சவப்பெட்டியைக் கொண்ட நகரம்! | பகுதி 5

விபத்து நடந்து அடுத்த பத்தாண்டுகளில் பலரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கடைசி ஆதாரமாக, பிரிப்யாட் நகரவாசிகளின் வம்சாவளியில் 2011-ல் பிறந்த குழந்தை வரைக்கும் கதிர்வீச்சின் பாதிப்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

1986, டிசம்பர் மாதம் வெடித்த உலையிலிருந்து இனியும் கதிர்வீச்சுகள் வெளிவரக் கூடாது என்பதற்காக, சார்கோஃபேகஸ் (Sarcophagus) எனச் சொல்லப்படும் மிகப்பெரிய சவப்பெட்டி மாதிரியான ஒரு தடுப்பு அரண் உலையைச் சுற்றி அமைக்கப்பட்டது.

பிரிப்யாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சால்வ்யூடிக் எனும் மற்றொரு நகரில் குடியமர்த்தப்பட்டார்கள். இன்றும்கூட அந்த நகரத்தின் காற்றில் கதிர்வீச்சு கலந்தேதான் இருக்கிறது. விபத்தின்போது நகரத்தில் வாழ்ந்தவர்கள் இன்றளவும் நகரத்துக்குப் போக அஞ்சுகிறார்கள். அந்த நகரத்துக்கே சென்றிராத பழைய நகரவாசிகளின் சந்ததிகளுக்கு இன்றளவும் விபத்தின் தாக்கம் இருந்துகொண்டிருக்கிறது.

செர்னோபில்
செர்னோபில்

இந்தப் பேரழிவின் சாட்சிகளாக இருக்கும் இந்த மனிதர்கள் உலகத்துக்குச் சொல்லும் செய்தி இதுதான்…

``மொத்த உலக வரலாற்றுக்கும் ஒரு செர்னோபில் துயரம் போதும்… அது அத்தனை வலி மிகுந்தது. இனி ஒருபோதும் இப்படியான ஒரு பேரழிவு எங்கும், எப்போதும் நடந்திடவே கூடாது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism