Published:Updated:

`35 ஆண்டுகளில் இல்லாதது; தயங்கும் பெண்கள்!’- அமெரிக்காவில் குறைந்த குழந்தை பிறப்பு விகிதம்

குழந்தைகள்
குழந்தைகள் ( மாதிரிப் படம் )

``பொருளாதாரமும் இதற்கு அடிப்படையான காரணமாக இருந்து வருகிறது. குறைவான ஊதியம், நிலையான வேலை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்கள் குறித்தும் தம்பதிகள் மற்றும் பெண்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதால் குழந்தை பெறுவது குறித்த யோசிக்கின்றனர்”

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு 3.25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். தொடர்ந்து இந்த வைரஸ் பல நாடுகளிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 93 ஆயிரம் பேர் இந்த நோய்த் தொற்றால் இறந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளமானவை. இந்நிலையில், ஏற்கெனவே குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைந்து வரும் அமெரிக்காவில் இன்னும் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறையும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்கா
அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தைகள் பிறப்பு தொடர்ந்து குறைந்து வருவதாகவும் கடந்த ஆண்டு கணக்கின்படி குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 35 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம் ஆகியவை இந்தக் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையை மேலும் குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எமோரி பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்துறைத் தலைவர் டெனிஸ் ஜேமீசன் பேசுகையில், ``கணிக்க முடியாத சூழ்நிலை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கவலை ஆகியவை பெண்களை குழந்தை பெறுவது தொடர்பாக இரண்டு முறை சிந்திக்க வைக்கும்” என்றார்.

`கண்ணுக்குத் தெரியாத எதிரியை இணைந்து வெல்வோம்!’ - இந்தியாவுக்கு வென்டிலேட்டர் அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. அந்நாட்டில் வழங்கப்பட்ட 99 சதவிகித பிறப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து பிறப்பு எண்ணிக்கை 1 சதவிகிதம் குறைந்து 3.7 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டைத் தவிர 2007-ம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியடைந்த பின்னரும் இந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதற்குப் பெண்களின் தாய்மை பற்றிய அணுகுமுறை காரணமாக கூறப்படுகிறது.``பெரும்பான்மையான தம்பதிகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் பெறுவதைத் தள்ளி வைத்து வருகின்றனர். பொருளாதாரமும் இதற்கு அடிப்படையான காரணமாக இருந்து வருகிறது. குறைவான ஊதியம், நிலையான வேலை இல்லாமை உள்ளிட்ட பல காரணங்கள் குறித்தும் தம்பதிகள் மற்றும் பெண்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதால் குழந்தை பெறுவது குறித்து ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட சில குழுக்களிடையே குழந்தை பிறப்பு அதிகமாக வாய்ப்புள்ளது” என கொலம்பிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் சேன்டெல்லி கூறியுள்ளார்.

குழந்தை
குழந்தை
மாதிரிப் படம்

மேலும் அவர், குழந்தைக் கட்டுப்பாடு மற்றும் கருக்கலைப்பு போன்றவை அதிகமாக நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முதன்மை ஆசிரியர் பிராடி ஹாமில்டன், ``இந்த ஆண்டு குழந்தை பிறப்பு விஷயத்தில் என்ன நடக்கும் எனத் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் காரணமாக மகப்பேறு வார்டுகளில் குழந்தை பிறப்பு தொடர்பான விஷயங்கள் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பம் வரை தெளிவாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

`20 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்; இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!’ -சீனாவை கடுமையாகச் சாடிய அமெரிக்கா
அடுத்த கட்டுரைக்கு