Published:Updated:

நியூசிலாந்தின் முதல் பழங்குடியினப் பெண் கவர்னர் ஜெனரல்; யார் இந்த டேம் சிண்டி கிரோ?

``மக்கள் அனைவரும் இணைந்திருப்பதை பார்க்கும்போது, நமது நாடு என்ற உணர்வும், நாம் நிற்பதற்கு ஓர் இடம் உள்ளது என்ற மகிழ்வும் வருகிறது. நியுசிலாந்தை தங்கள் நாடாக ஏற்றுக்கொண்ட மக்கள், இந்த மண்ணிற்கு பரிசளித்த மதம் மற்றும் கலாசாரங்களைக் கொண்டாடுவேன்".

நியூசிலாந்து நாட்டின் முதல் பெண் பழங்குடி கவர்னர் ஜெனரலாக மவோரி பழங்குடி இனத்தைச் சேர்ந்த டேம் சிண்டி கிரோ பதவியேற்றுக் கொண்டார். இவரது பதவியேற்பு சிறிய விழாவாக நேற்று (அக்டோபர் 11) வெலிங்டனில் நடைபெற்றது. மவோரி பழங்குடி மக்கள் நியூசிலாந்தின் பூர்வகுடிகள். தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவாக இருந்து வருகின்றனர். இப்பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான கிரே, ``அகதிகள், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அணுகி அவர்களுக்காக உழைப்பேன்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, அதிகாரத்தில் இருக்கும் பிரிட்டிஷ் மன்னரின் சார்பாக அரசியலமைப்பு ரீதியான கடமைகளை நிறைவேற்றுபவராக கவர்னர் ஜெனரல் பதவி இருந்தது. தற்போது அதன் பொறுப்பு உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

Dame Cindy Kiro
Dame Cindy Kiro
Photo: Mark Mitchell/New Zealand Herald via AP
இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு; யார் இந்த பி.வி. நாகரத்னா?

பதவியேற்றபின் பேசிய கிரே தனது மவோரி மற்றும் பிரிட்டிஷ் பாரம்பர்யம் குறித்து பெருமை கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், ``மக்கள் அனைவரும் இணைந்திருப்பதை பார்க்கும்போது, நமது நாடு என்ற உணர்வும், நாம் நிற்பதற்கு ஓர் இடம் உள்ளது என்ற மகிழ்வும் வருகிறது" என்றும், ``புதிதாகக் குடியேறியவர்கள், முன்னாள் அகதிகள் என அனைத்துத் தரப்பு மக்களுடனும் இணைந்திருப்பேன். நியுசிலாந்தை தங்கள் நாடாக ஏற்றுக்கொண்ட மக்கள், இந்த மண்ணிற்கு பரிசளித்த மதம் மற்றும் கலாசாரங்களைக் கொண்டாடுவேன்" எனவும் கூறினார்.

நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவிகிதம் உள்ள மவோரி மக்கள் சமூக அந்தஸ்திலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களாக உள்ளனர். 2019-ம் ஆண்டு சமூக நீதி மற்றும் நில உரிமைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் போராடிய நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது பழங்குடியினக் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்த டேம் சிண்டி கிரே, தொடக்கத்தில் கல்வியாளராக இருந்தார். பின்னர் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்த இவர், `சமூகக் கொள்கை'-ல் பிஹெச்.டியும் முடித்துள்ளார்.

Dame Cindy Kiro
Dame Cindy Kiro
Photo: Mark Mitchell/New Zealand Herald via AP
பார்வை நேரத்தில் உடலுறவு:  `கொரோனா சூழல் இல்லாதபோதும் கூட அது வேண்டாமே..!’ - நியூசிலாந்து பிரதமர்

பல பல்கலைகழகங்களில் முன்னணி பதவிகள் வகித்தார். தற்போது கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ள கிரேவை உற்சாகமாக வரவேற்றார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.

முதல் பழங்குடி கவர்னர் ஜெனரலாக சிண்டி கிரே பதவியேற்றுக் கொண்டாலும் நியூசிலாந்து பழங்குடி மக்கள் காண வேண்டிய மாற்றங்கள் பல. உச்சபட்ச சுய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இல்லாத பதவியாக கவர்னர் ஜெனரல் பதவி கருதப்பட்டாலும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கு இது முதல் படியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு