Published:Updated:

`5 காரணங்கள்; கசப்பான உண்மை’- துப்பாக்கிச் சூடு நடத்திய அமெரிக்கரின் அதிர்ச்சிப் பதிவு

சத்யா கோபாலன்

அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பாசோ (EL paso) என்ற நகரில் இருக்கும் வால்மார்ட் வணிக வளாகத்துக்குள், இயந்திரத் துப்பாக்கியுடன் நுழைந்த 21 வயதான பேட்ரிக் க்ரூசிஸ் (Patrick Crusius) என்ற இளைஞர், அங்கு பிஸியாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 26 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
AP

வணிக வளாகத்துக்கு அருகிலேயே காவல் நிலையம் இருந்ததால் தாக்குதல் நடந்த அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் பேட்ரிக்கை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் தாக்குதல் தொடர்பாக சமூகவலைதளத்தில் பேட்ரிக் எழுதியுள்ள பதிவு காவலர்களுக்குக் கிடைத்துள்ளது.

அதில் இருக்கும் தகவல்கள், தாக்குதலுக்கான காரணம் போன்றவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 2,300 வார்த்தைகள் கொண்ட அந்தப் பதிவில் `கசப்பான உண்மை’ என்ற தலைப்பில் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. அரசியல் காரணம் 2. பொருளாதார காரணம் 3.தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி விவரம் 4. தாக்குதலுக்கான காரணம் 5. சொந்த காரணங்கள் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
AP

அதில், ’இனி வரும் நாள்களில் ஜனநாயக கட்சி மட்டுமே அமெரிக்காவை ஆட்சி செய்ய வேண்டும் என அக்கட்சிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அமெரிக்காவில் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகள் மட்டுமே உள்ளதாகப் பிற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறுபவர்களை அனுமதிக்கக் கூடாது. அமெரிக்கக் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலம் வேண்டும் என்றால் இங்கு யாரும் குடிபெயரக்கூடாது.

இயற்கை வளங்களை அதிகமாக அறுவடை செய்வதன் மூலம் நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஏ.கே 47 துப்பாக்கி 100 சுற்றுகள் வரை சுட்டாலும் வெப்பம் அதிகமாகாது. அதனால் அதைப் பயன்படுத்தினேன். நான் இந்தத் தாக்குதல் நடத்தும் என்னை யாரேனும் சுட்டுவிட்டால் மகிழ்ச்சி, ஒருவேளை நான் இறக்காமல் காவலர்களால் கைது செய்யப்பட்டால் நாடு முழுவதும் என்னைப் பற்றிப் பேசுவார்கள்.

வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
வால்மார்ட் துப்பாக்கிச் சூடு
AP

கொடுமையான முறையில் எனக்கு மரண தண்டனை நிறைவேற்றுவார்கள். என் குடும்பத்தினரையும் சேர்த்து அனைவரும் இகழ்வார்கள் “ எனப் பல்வேறு விஷங்கள் பற்றியும் அமெரிக்காவில் நடக்கும் பல முக்கிய பிரச்னைகள் பற்றியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.