Published:Updated:

வீட்டில் கங்காரு வளர்த்தவருக்கு நேர்ந்த சோகம்!

kangaroo ( pixabay )

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 1936-ம் ஆண்டில் கங்காருவின் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து 86 ஆண்டுகள் கழித்து இறப்பை உண்டாக்கக் கூடிய அளவிற்குக் கங்காருவின் தாக்குதல் தற்போது நிகழ்ந்துள்ளது.

வீட்டில் கங்காரு வளர்த்தவருக்கு நேர்ந்த சோகம்!

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 1936-ம் ஆண்டில் கங்காருவின் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து 86 ஆண்டுகள் கழித்து இறப்பை உண்டாக்கக் கூடிய அளவிற்குக் கங்காருவின் தாக்குதல் தற்போது நிகழ்ந்துள்ளது.

Published:Updated:
kangaroo ( pixabay )

மேற்கு ஆஸ்திரேலியா, ரெட்மாண்ட் பகுதியில் 77 வயதுடைய முதியவர் ஒருவர் கங்காரு ஒன்றை வளர்ப்பு பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம், அந்த முதியவர் பலத்த காயங்களோடு அடிப்பட்டு இருப்பதை, அவரின் உறவினர் ஒருவர் கண்டு, காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

Death (Representational Image)
Death (Representational Image)

உடனடியாக அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஆட்கள் அனுப்பப்பட்டனர். ஆனால் காயமடைந்த நபரை மீட்க விடாமல் கங்காரு அவர்களைத் தடுத்துள்ளது. அவசர உதவிக்காக அங்கு விரைந்தவர்களுக்குத் தொடர் அச்சுறுத்தலை கங்காரு கொடுத்து வந்தது. வேறு வழியில்லாமல் கங்காருவைக் கொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு காவல் துறையினர் வந்தனர். இறுதியாக அவரை உயிருடன் மீட்க முடியாமல் போனதுதான் வேதனை.

ஒருநாளுக்கு முன்பே தாக்குதலுக்கு ஆளான அவரை, மீட்புக் குழுவினர் போராடி மீட்டபோது உயிரிழந்து காணப்பட்டார். இந்த சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த கங்காருவின் இனம் எதுவென்று அடையாளம் காணப்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு சாம்பல் கங்காருவின் தாயகம், மேற்கு ஆஸ்திரேலியா. இவ்வினத்தில் வளரக்கூடிய ஆண் கங்காரு, சுமார் 2.2 மீட்டர் அதாவது 7 அடிக்கும் மேல் உயரமும், 70 கிலோ அதாவது 154 பவுண்டுகள் எடையும் கொண்டிருக்கும்.

கங்காரு
கங்காரு
pixabay

இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 1936-ம் ஆண்டில் கங்காருவின் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 86 ஆண்டுகள் கழித்து இறப்பை உண்டாக்கக் கூடிய அளவிற்குக் கங்காருவின் தாக்குதல் தற்போது நிகழ்ந்துள்ளது என ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.