Published:Updated:

7 வருடங்கள் வீட்டில் அடைக்கப்பட்ட சிறுமி; தாய், பாட்டி, தாத்தா செய்த கொடுமை: மர்மம் விலகாத வீடு!

lock ( pixabay )

ஏதோ ஒரு காரணத்திற்காக சிறுமி வீட்டிலேயே அடைக்கப்பட்டிருக்கிறாள். அதன் பின்னணி என்ன என்று இதுவரை மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கில் சிறுமியின் அம்மா மற்றும் அவரின் தாத்தா, பாட்டி ஆகியோர் மௌனம் சாதித்து வருகின்றனர்.

7 வருடங்கள் வீட்டில் அடைக்கப்பட்ட சிறுமி; தாய், பாட்டி, தாத்தா செய்த கொடுமை: மர்மம் விலகாத வீடு!

ஏதோ ஒரு காரணத்திற்காக சிறுமி வீட்டிலேயே அடைக்கப்பட்டிருக்கிறாள். அதன் பின்னணி என்ன என்று இதுவரை மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கில் சிறுமியின் அம்மா மற்றும் அவரின் தாத்தா, பாட்டி ஆகியோர் மௌனம் சாதித்து வருகின்றனர்.

Published:Updated:
lock ( pixabay )

ஜெர்மனி நாட்டின் சௌர்லாண்ட் பகுதியில், தன்னுடைய பெண் குழந்தையை வெளியுலகத்திற்குக் காட்டாமல், ஏழு வருடங்களாக தாயும், அவரின் பெற்றோரும் வீட்டிலேயே அடைத்து வைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Girl child
Girl child
pixabay

ஏழு வருடங்களாக வீட்டில் அடைக்கப்பட்டிருந்த சிறுமி, வெளியுலகில் இதுவரை யாருடனும் பேசியதேயில்லை, வெளியுலகத்தை பார்த்ததும் இல்லை. அதே சமயம் சிறுமி உடல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை. ஊட்டச்சத்து குறைப்பாடுடனும் இல்லை.

ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக அச்சிறுமி வீட்டிலேயே அடைக்கப்பட்டிருக்கிறாள். அதன் பின்னணி என்ன என்று இதுவரை மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கில் சிறுமியின் அம்மா மற்றும் அவரின் தாத்தா, பாட்டி ஆகியோர் மௌனம் சாதித்து வருகின்றனர். 

அக்கம் பக்கம் நிலவும் பேச்சுகளின் அடிப்படையில், குழந்தை பிறப்பதற்கு சில காலம் முன்பே குழந்தையின் அம்மா தன் கணவரை விட்டுப் பிரிந்ததால், குழந்தையை அப்பாவிடமிருந்து பிரித்துவைக்க இப்படிச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குழந்தையை சந்திக்க அவரின் அப்பாவை அனுமதிக்கவில்லை சிறுமியின் அம்மா. அதனால்  2016-ம் ஆண்டில் குடும்ப நீதிமன்றத்திற்குச் சிறுமியின் தந்தை சென்றபோது, பெற்றோர் இருவரும் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக தாயும், மகளும் நாட்டை விட்டு வெளியேறி இத்தாலிக்குச் சென்றதாக, சிறுமியின் தந்தையையும், அங்குள்ள அதிகாரிகளையும் நம்ப வைத்துள்ளனர். ஆனால் அங்கிருந்து செல்லாமல் சிறுமியின் தாய் வழி தாத்தா, பாட்டியோடு வாழ்ந்து ஏமாற்றியுள்ளனர்.

7 வருடங்கள் வீட்டில் அடைக்கப்பட்ட சிறுமி; தாய், பாட்டி, தாத்தா செய்த கொடுமை: மர்மம் விலகாத வீடு!

அந்தச் சிறுமியைப் பற்றி அதிகாரிகளுக்கு இரண்டு ரகசியத் தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் விசாரித்தபோது, பெரிய ஆதாரங்கள் ஏதும் சிக்கவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம், ஒரு தம்பதி சிறுமியைப் பார்த்ததாகப் புகாரளித்ததைத் தொடர்ந்து, விசாரணை பணி தீவிரப்படுத்தப்பட்டது.

சிறுமியும் அவரின் தாயும் இத்தாலியில் வசிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின், அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள், தாத்தா பாட்டி வீட்டில் சிறுமி இருப்பதைக் கண்டுபிடித்தனர். செப்டம்பர் மாதம் இறுதியில் சிறுமியை வீட்டிலிருந்து மீட்டுள்ளனர். 

சிறுமியை அடைத்து வைத்திருந்ததற்காக மூவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. வழக்குரைஞர்கள் சிறுமியின் தாய்க்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். 

உள்ளூர் குழந்தைகள் நலத்துறைத் தலைவர் மைக்கேல் ஃபார்பர் கூறுகையில், ``சிறுமியால் கணிதத்தைப் படிக்கவும், எழுதவும் முடிகிறது. ஆனால் அன்றாட வேலைகளைச் செய்ய மிகவும் சிரமப்படுகிறாள். படிக்கட்டுகளில் ஏறவும், தினசரி வேலைகளைச் செய்யவும் சிறுமி சிரமப்படுகிறாள். காடுகளையோ அல்லது புல்வெளியையோ, சிறுமி இதுவரையில் பார்த்ததில்லை'' என்று கூறியுள்ளார்.