Published:Updated:

``சாதிவெறியை ஆதரிக்கிறதா கூகுள்?'' - வேலையை ராஜினாமா செய்த மூத்த மேலாளர்

கூகுள் நிறுவனம்

`இந்த நிறுவனத்தில் நிறம் காரணமாக நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டத்தை நானே பார்த்திருக்கிறேன்' என்று தன்னுடைய ராஜினாமா மெயிலில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஜா குப்தா.

``சாதிவெறியை ஆதரிக்கிறதா கூகுள்?'' - வேலையை ராஜினாமா செய்த மூத்த மேலாளர்

`இந்த நிறுவனத்தில் நிறம் காரணமாக நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டத்தை நானே பார்த்திருக்கிறேன்' என்று தன்னுடைய ராஜினாமா மெயிலில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஜா குப்தா.

Published:Updated:
கூகுள் நிறுவனம்

சில விஷயங்களைக் கேட்கையில் `இந்த இடத்தில், இப்படியும் நடந்துகொள்வார்களா?' என்று அதிர்ச்சியடைவோம். அப்படியோர் அதிர்ச்சியை சமீபத்தில் ஏற்படுத்தியிருக்கிறது கூகுள் நிறுவனம்.

தலித் வரலாற்று மாதத்தையொட்டி, கடந்த ஏப்ரல் மாதம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது கூகுள். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த தலித் உரிமைகள் அமைப்பின் சமத்துவ ஆய்வகத்தின் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜன் கலந்துகொண்டு சாதி, சமத்துவம் குறித்துச் சிறப்புரையாற்றுவதாக இருந்தது.

கூகுள்
கூகுள்

ஆனால், கூகுளில் வேலைபார்க்கும் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த சுமார் 8,000 பேர், தேன்மொழி செளந்தரராஜன் தங்கள் நிறுவனத்தில் பேசவிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் தலைமைக்கு குரூப் மெயில் அனுப்பியிருக்கின்றனர். `அமெரிக்காவில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. சாதி அடிப்படையில் இங்கு பாகுபாடுகளும் காட்டப்படுவதில்லை. தவிர, தேன்மொழி செளந்தரராஜன் ஓர் இந்து விரோதி. அவர் இங்கு வந்து உரையாற்றக் கூடாது' என்று தங்கள் எதிர்ப்புக்கான காரணத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதையடுத்து தேன்மொழி செளந்தரராஜனின் உரையை ரத்து செய்தது கூகுள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூகுள் மூத்த மேலாளர் தனுஜா குப்தா, தன்னுடைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். தனுஜா குப்தா ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. `நான் இந்த நிறுவனத்தில் 11 வருடங்களாக வேலைபார்த்து வருகிறேன். என்னுடைய வேலையை ராஜினாமா செய்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், கூகுளில் சாதி சமநிலையை ஏற்படுத்த முயன்ற எனக்கு எதிராக நடந்த இச்சம்பவத்தையே என் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

இந்த நிறுவனத்தில் நிறம் காரணமாக நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டதை நானே பார்த்திருக்கிறேன்' என்று தன்னுடைய ராஜினாமா மெயிலில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஜா குப்தா.

தமிழ்நாட்டில் பிறந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு சாதிப் பாகுபாடு பற்றியெல்லாம் எதுவும் தெரியாதா?

இந்த நிலையில், தலித் செயற்பாட்டாளார் தேன்மொழி, ``சாதி, சமத்துவம் குறித்த என்னுடைய உரையை ரத்து செய்திருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்தச் செயல் சட்ட விரோதம். என் உரையை ரத்து செய்ய முயன்ற ஊழியர்களின் சாதிவெறியை கூகுள் ஆதரிக்கிறதா?

தேன்மொழி செளந்தரராஜன்
தேன்மொழி செளந்தரராஜன்
wikimedia.org

தமிழ்நாட்டில் பிறந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு சாதிப் பாகுபாடு பற்றியெல்லாம் எதுவும் தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேன்மொழி மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அடோப் ஆகிய நிறுவனங்களில் சாதி சமத்துவம் பற்றிய தன்னுடைய உரைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism