Published:Updated:

தாலிபன்களை எதிர்க்க இந்தியாவின் உதவியை நாடும் ஆப்கானிஸ்தான் அரசு!

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபன்களுக்கும் இடையே போர் உச்சத்தை அடைத்திருக்கும் நிலையில், இந்திய அரசின் உதவியை ஆப்கானிஸ்தான் கோரியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு அரசுக்கும் தாலிபன்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறிவருகிறது. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தாலிபன்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளனர். ஆப்கன் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றுவருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்
Hamed Sarfarazi

நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு மாகாணங்களின் தலைநகரைக் கைப்பற்றியுள்ளனர் தாலிபன்கள். தலைநகர் காபூல் போன்ற முக்கிய நகரங்களையும் தாலிபன்கள் நெருங்கிவருகிறார்கள். இனிமேல் தங்களால் ஆப்கனுக்கு உதவ முடியாது என்று அமெரிக்கா மறுத்த நிலையில், இந்தியாவிடம் அஷ்ரஃப் கனி தலைமையிலான ஆப்கன் அரசு உதவி கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான், பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொள்ளும் ஆப்கனின் முக்கிய எல்லைப் பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளை தாலிபன்கள் கைப்பற்றிவரும் நிலையில், ஆப்கனிலுள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி இந்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. ஆப்கனிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்தும் அதிகாரிகள் வெளியேறியிருக்கிறார்கள். ஆப்கனில் இருக்கும் 1,500-க்கும் அதிகமான இந்தியர்களை விமானச் சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன்பாக நாடு திரும்ப வலியுறுத்தியுள்ளது இந்தியா.

ஆப்கானிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தாக்குதல்

இந்தியா, ஆப்கன் அரசுக்கு உதவி செய்யக்கூடாது என்று தாலிபனின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் (Suhail Shaheen) கூறியிருக்கிறார். கத்தார் தலைநகர் தோஹாவில், ஆப்கானிஸ்தான் அரசுத் தரப்புக்கும் தாலிபன்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே உலக மக்களின் எண்ணமாக இருக்கிறது!

தாலிபன்- ஆப்கன் மோதல்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு