Published:Updated:

`இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடுவாள்!' - தென்னாப்பிரிக்காவில் ஒரு ரியல் கஜினி

தென்னாப்பிரிக்காவில் ஒரு ரியல் கஜினி

Memory Loss
Memory Loss

ஜூன் 11, தென்னாப்ரிக்கா. மாநில அளவிலான அந்த நடன நிகழ்ச்சி, கோலகலமாக நடந்துகொண்டிருந்துள்ளது. இப்படியான நிகழ்ச்சிகளில் இடையிடையே, குறிப்பிட்ட ஒரு மாணவரை மட்டும் மேலெழுப்பி, கைகளின் வழியாக ஒருவர் மாற்றி ஒருவர் ஏந்திக்கொண்டு குதூகலிப்பதுண்டு. இங்கும் அது நடந்துள்ளது!

Memory Loss
Memory Loss

ஆனால், விளையாட்டு இங்கே விபரீதமாகிவிட்டது. மகிழ்ச்சிக்கு இடையில் ஒரு மாணவி, தன் அருகிலிருந்த ரிலே ஹார்னர் என்ற இன்னொரு மாணவியின் தலையில் விளையாட்டாக அடித்துள்ளார். அப்படி அவர் அடித்ததில், மாணவி ரிலேவுக்கு தனது பழைய நினைவுகளெல்லாம் மறக்கத் தொடங்கிவிட்டன. மறதி என்றால், நமக்கு ஏற்படுவதுபோல பைக்-கீ வைத்த இடத்தை மறப்பது, பேனா வைத்த இடத்தை மறப்பதுபோல அல்ல. கஜினி படத்தில் சூர்யாவுக்கு வருவதுபோல, தான் யாரென்றே மறந்துவிடுகிற ஒரு மறதி! இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, தன் சுயத்தை மறந்துவிடுகிறார் ரிலே.

பள்ளி செல்லும் நேரம் தொடங்கி, விளையாடச் செல்லும் நேரம் உட்பட எல்லாவற்றையும் சுயக்குறிப்புகளாகவோ, புகைப்படங்களாகவோ பதிந்துவைத்துள்ளாள் ரிலே.
ரிலேவின் தாய் சாரா

மறதிக்கான காரணத்தையே கண்டறிய முடியவில்லை. பின் எங்கிருந்து பிரச்னையைச் சரிசெய்வது?' எனக் கேட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். ரிலே யார், எங்கிருந்து வருகிறாள், அவளுக்கு என்ன பிரச்னை, அன்றாடம் என்ன விஷயங்களை அவள் எதிர்கொள்கிறாள், அவளுக்கு என்ன தேவை என்பதையெல்லாம் நோட் புக் ஒன்றில் எழுதிக் கொடுத்துள்ளனர் அவள் பெற்றோர். அவ்வப்போது அவளும் அவற்றைப் புதுப்பித்துக்கொள்வாளாம். பள்ளி செல்லும் நேரம் தொடங்கி, விளையாடச் செல்லும் நேரம் உட்பட எல்லாவற்றையும் சுயக்குறிப்புகளாகவோ, புகைப்படங்களாகவோ பதிந்துவைத்துள்ளாள் ரிலே. மறக்கும்போது எடுத்துப்பார்க்க வசதியாக இருக்கவேண்டுமென, அவை அனைத்தையும் எல்லா நேரமும் தன் கூடவே வைத்தும் இருக்கிறாள் அவள்.

Vikatan
எனக்கு, நினைவுகளைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென ஆசையாக உள்ளது. ஆனால், வேடிக்கையைப் பாருங்கள்... இன்னும் சில மணி நேரத்தில் நான் உங்களைக்கூட மறந்துவிடுவேன்
ரிலே

பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிலேவின் தாய் சாரா, ``அவள் ஒவ்வொரு நாள் காலை எழும்போதும், இன்றைக்கு ஜூன் 11 என்ற நினைப்பிலேயே எழுவாள். அன்றைய தினத்தின், குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி மட்டுமே அவள் நினைவில் அழியாது உள்ளது" எனக்கூறியுள்ளார்.

ரிலே பேசும்போது,``எனக்கு , நினைவுகளைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டுமென இப்போது ஆசையாக உள்ளது. ஆனால், வேடிக்கையைப் பாருங்கள்... இன்னும் சில மணி நேரத்தில் நான் உங்களைக்கூட மறந்துவிடுவேன். இப்போது இந்த நிமிடம், உலகத்தைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் யோசித்துப்பார்த்தால், மிகவும் பயமாக உள்ளது" எனக்கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Memory Loss
Memory Loss

தாய் சாரா கூறுகையில், ``இதைக் குறுகிய கால நினைவிழப்பு என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைச் சரிசெய்ய மருத்துவத்தில் வழி இல்லை என்கின்றனர் அவர்கள். இப்போது, நிர்கதியாக நிற்கிறோம் நாங்கள். ஒருவேளை, என் குழந்தையைப்போல வேறு யாரேனும் இந்த உலகத்தில் இருப்பீர்களாயின், கவலை கொள்ளாதீர்கள். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு" என்கிறார்.