Published:Updated:

ஆண் வேடமிட்டு மேட்ச் பார்க்க வந்ததால் வழக்கு - தீக்குளித்த இரான் பெண் மரணம்!

ஜெனிஃபர்.ம.ஆ

இரானில் பெண்கள் மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்குக் கடந்த 1981-ஆம் ஆண்டு முதலே தடை இருக்கிறது.

இரான்
இரான் ( thenational.ae )

இன்று தற்கொலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறவேளையில், இரானில் பெண் ஒருவரின் தற்கொலை, உலகையே உலுக்கியிருக்கிறது.

`ஒரு வருடத்துக்கு 8 லட்சம் பேர்;  ஆண்களே அதிகம்!'-தற்கொலை அறிக்கையை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்
இரான்
இரான்
bbc

ஸஹர் என்று அழைக்கப்படும் அந்தப் பெண், ஒரு தீவிர கால்பந்தாட்ட ரசிகை, கால்பந்து விளையாட்டைப் பார்ப்பதற்கு ஆண்போல வேடமணிந்து மைதானத்தில் நுழைய முயன்றார். அவரை, அந்நாட்டுக் காவலர்கள் தடுத்து நிறுத்தி, அதற்காக அவர்மீது வழக்கும் தொடுத்தனர். ஏனெனில், இரானில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்குக் கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. எழுதப்படாத இந்தச் சட்டம் மிகத் தீவிரமாக அந்நாட்டு அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்கின்றன, அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள். கடந்த ஆண்டு தெஹ்ரானில் உள்ள மைதானத்தில், உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது சில பெண்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுவாகப் பெண்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறது, அந்நாட்டு அரசு.

சேற்றில் சிக்கிய எஸ்.யூ.வி ரக கார் - நொடியில் அப்புறப்படுத்திய நாகா பெண்கள் படை #ViralVideo

உலக அளவில், இதற்கான எதிர்ப்புகள் இருந்தபோதும், கலாசாரத்தைக் கடந்து இதை அனுமதிக்க நாங்கள் முயற்சியில் இருக்கிறோம் என்று மழுப்பலாகவே அந்நாட்டு அரசு பதிலளித்து வந்தது. உலக கால்பந்து சம்மேளனம், இரான் பெண்கள் மீதான இந்தத் தடையை ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தும், இரான் அதற்குச் செவிசாய்க்கவில்லை.

இரான்
இரான்
arabnews

இதைத் தெடர்ந்து, பெண்கள் ஆண்கள்போல வேடமிட்டு தங்களின் விருப்பமான அணி விளையாடும் போட்டிகளைக் காணவருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது, `தாடி வைத்த பெண்கள்' மற்றும் `அசாதி பெண்கள்' என்று இவர்களைக் குறிப்பிட்டனர். சுதந்திரத்தை விரும்பும் இந்தப் பெண்களுக்கு எதிரான மனநிலையும் அந்நாட்டு அரசுக்கு உண்டு. இந்த நிலையில்தான் ஸஹர், கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்கு நுழைய முயன்றபோது கைதுசெய்யப்பட்டு மூன்று நாள்கள் சிறையில் கழித்திருக்கிறார். பின்னர், பிணையில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்காக 6 மாதங்கள் காத்திருந்தார்.

Vikatan

இந்த நிலையில், ஆறு மாதங்கள் கழித்து, கடந்த வாரம் விசாரணைக்கு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி வராத காரணத்தினால் வழக்கு நடைபெறவில்லை. அங்கிருந்தவர்கள் அவருக்கு நிச்சயம் ஒரு வருடம்வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று பேசியதை அவர் கேட்க நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது, அவருக்கு அச்சத்தைக் கொடுக்க, நீதிமன்ற வாயிலிலேயே தீக்குளித்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இரான்
இரான்
foxnews

உலகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது, பெண்கள் விண்வெளியை அடைந்துவிட்டனர், என நாமெல்லாம் மார்தட்டிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், இன்னும் தாம் விரும்பிய விளையாட்டை நேரில்கண்டு ரசிக்கக்கூட வாய்ப்பு வழங்கப்படாத நிலையும் சில நாடுகளில் தொடர்வது வேதனையளிக்கிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான இரானிய மக்கள், ``இரானை உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கிவையுங்கள்" என்று மற்ற உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தியப் பெண்களுக்கும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்வரை ஏறத்தாழ இதே நிலைதான் இருந்தது. இன்றைய நம் விடுதலைக்காக அன்றே பல இந்திய ஸஹர்கள் உயிர் துறந்திருக்கிறார்கள்.

கால்பந்து வீராங்கனையும் குட்டி ரசிகரும்! - ரசிகர்களின் மனதை வென்ற புகைப்படம்

இரானில் ஸஹர் விரும்பிய கால்பந்து அணியின் நிறம் நீலம், அதைவைத்து, `இரானின் நீலப் பெண்' என்று அவர் அழைக்கப்படுகிறார். அவர் மரணமாவது, இரானியப் பெண்களுக்கு விடுதலைக் கதவுகள் திறக்க உதவட்டும். நீல வணக்கம் ஸஹர்!