Published:Updated:

ஏழைகளுக்காகச் சிந்தியுங்கள்!

Abhijit Banerjee, Narendra Modi
பிரீமியம் ஸ்டோரி
Abhijit Banerjee, Narendra Modi

ஏழைகளின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் `ஏழைப் பொருளாதாரம்’ என்னும் புத்தகத்தில் மிக அழகாகச் சொல்லியிருப்பார் அபிஜித் பானர்ஜி.

ஏழைகளுக்காகச் சிந்தியுங்கள்!

ஏழைகளின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் `ஏழைப் பொருளாதாரம்’ என்னும் புத்தகத்தில் மிக அழகாகச் சொல்லியிருப்பார் அபிஜித் பானர்ஜி.

Published:Updated:
Abhijit Banerjee, Narendra Modi
பிரீமியம் ஸ்டோரி
Abhijit Banerjee, Narendra Modi

மர்த்தியா சென்னுக்குப் பிறகு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் 2-வது இந்தியர் என்ற பெருமை அபிஜித் பானர்ஜிக்கு உண்டு. அது இந்தியாவின் பெருமையும்கூட. கடந்த 20 ஆண்டுகளாக ஏழைகளின் வறுமை ஒழிப்பில் புதிய அணுமுறைகளைக் கையாண்டதற்காக இன்று அவருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றியதற்காக எஸ்தர் டஃபலோவுக்கும் நோபல் கௌரவம் கிடைத்துள்ளது. ‘பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் 2-வது பெண்’ என்ற பெருமை எஸ்தர் டஃபலோவுக்கும் கிடைத்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Abhijit Banerjee
Abhijit Banerjee

அபிஜித்தின் பெற்றோர்களான நிர்மலா பானர்ஜி மற்றும் தீபக் பானர்ஜி இருவருமே கொல்கத்தாவில் இருக்கும் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியர்கள். தாய் தந்தையர் இருவருமே கல்வித் துறையில் இருந்ததால், அபிஜித்திற்குச் சிறுவயது முதலே கல்வியில் ஆர்வம் அதிகம். குறிப்பாகப் பொருளாதாரத்தில் அளவுகடந்த ஈடுபாடு. 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் பி.எஸ்ஸி பொருளாதாரம் படித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றார். 1988-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அபிஜித், பின்னர் அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டுக் குடியுரிமையைப் பெற்றார். 58 வயதில் நோபல் பரிசைச் சொந்தமாக்கி யிருக்கும் இவருக்கு இந்த விருது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்! காரணம், நோபல் பரிசு இவருக்கும் இவரது மனைவி எஸ்தருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதுதான்.

எஸ்தர் அபிஜித்தின் இரண்டாவது மனைவி. முதலில் அபிஜித், தனது சிறு வயது தோழியான அருந்ததி துலி பானர்ஜி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கபிர் பானர்ஜி என்ற மகனும் பிறந்தார். பின்னர் கருத்துவேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர். அதன்பிறகு தன்னுடன் சேர்ந்து ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட எஸ்தர் - அபிஜித் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.

ஏழைகளுக்காகச் சிந்தியுங்கள்!

எஸ்தர் 1972ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிறந்தவர். அங்கு வரலாறு மற்றும் பொருளாதாரப் பாடங்களில் பட்டம் பெற்றார். எம்.ஐ.டி-யில் 1999ஆம் ஆண்டு பிஎச்.டி பட்டம் பெற்றார். இவரும் ஏராளமான புத்தகங்கள் எழுதியதுடன், விருதுகளும் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளாமலேயே அபிஜித்தும், எஸ்தரும் ‘லிவிங் டு கெதர்’ உறவு முறையில் வாழ்ந்தனர். 2012ஆம் ஆண்டு குழந்தையும் பிறந்தது. அதன் பிறகே 2015ஆம் ஆண்டு இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். குறைந்த வயதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் எஸ்தர்.

கொல்கத்தாவில் பிறந்த அபிஜித் பானர்ஜியும், பாரிஸில் பிறந்த எஸ்தர் டஃபலோவும் முற்றிலும் வித்தியாசமான இடங்களில் வளர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களுடைய எண்ணமும் செயலும் ஒன்றாகவே இருந்தது. ஏழைகள் என்ன நுகர்கிறார்கள், அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் எப்படி இருக்கவேண்டும், அவர்கள் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், அவர்களின் வறுமை எப்படிப்பட்டதாக இருக்கிறது, அவர்களுடைய சம்பாத்தியம் என அவர்களைச் சார்ந்தே இருவரும் யோசித்தார்கள். பல்வேறு நாடுகளில் 80 ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது இந்தப் பொருளாதார ஜோடி!

ஏழைகளுக்காகச் சிந்தியுங்கள்!

“நீண்ட நாள்களாக வறுமை இருந்து வரும் நிலையில் அதன் பிடிகளைக் குறைக்க வேண்டும் என்கிற ஆவல் எங்களுக்குள் இருந்துவந்தது. ஏழைகள் சோம்பேறிகளாக அல்லது ஆர்வ மிக்கவர்களாக, நல்லவர்களாக அல்லது திருடர்களாக, கோபப்படு வோராக அல்லது செயலற்றவர்களாக, உதவி அளிக்கப்படாதவராக அல்லது தன்னிறைவு அடைந்தோராகச் சமூக விதிகளிலும் இலக்கியத்திலும் விவரிக்கப்படுகின்றனர்” என்று ஏழைகளைப் பற்றி அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டஃபலோ அவர்களுடைய புத்தகங்களில் குறிப்பிடுகிறார்கள்.

மோடி அரசு பணமதிப்பிழப்பு கொண்டுவந்தபோது அதனைக் கடுமையாகச் சாடியவர் அபிஜித். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு பேசிய அபிஜித், `இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை தள்ளாட்டத்தில் உள்ளது, நிலையான வளர்ச்சி என்பதற்கான உறுதி தற்போது முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது’ எனவும் தெரிவித்திருந்தார். தான் ரகுராம் ராஜனின் நண்பர் என்பதால் மட்டுமல்ல, நரேந்திர மோடியின் திட்டங்களை எப்போதுமே கடுமையாக விமர்சிக்கக் கூடிய பொருளாதார நிபுணர்களில் அபிஜித்தும் ஒருவர்.

இதனாலேயே பா.ஜ.க தலைவர்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார் அபிஜித். மோடி-அபிஜித் சந்திப்பைத் தொடர்ந்து இந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால், அரசியலையெல்லாம் தாண்டி இந்தியா கொண்டாட வேண்டிய பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜி.