Published:Updated:

`இனி வங்கதேசத்துக்கு கோவிட் தடுப்பூசி அனுப்ப மாட்டோம்!' - லிதுவேனியா முடிவு; என்ன காரணம்?

Covid -19 Vaccine ( AP Photo )

4.44 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை வங்க தேசத்துக்கு அனுப்புவதாக ஒப்புக்கொண்டது லிதுவேனியா. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்களிக்காததால், வங்க தேசத்துக்கு தடுப்பூசிகளை அனுப்புவதிலிருந்து பின் வாங்கியுள்ளது.

ஐ.நா பொதுச் சபையானது உக்ரைன் - ரஷ்ய போர் தொடர்பான வாக்கெடுப்பை நடத்தியது. அதில் எத்தியோப்பியா, ரஷ்யா, சிரியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தன.

உக்ரைன்
உக்ரைன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்களிக்கவில்லை. வாக்களிக்கத் தவறிய நாடுகளில் வங்க தேசமும் அடங்கும். உக்ரைன் மீதான போரைக் கண்டிக்காததற்காக, வங்க தேசத்துக்கு அனுப்புவதாக ஒப்புக்கொண்ட கோவிட் தடுப்பூசிகளை வழங்க மறுத்துள்ளது, ஐரோப்பிய நாடான லிதுவேனியா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுவரை வங்க தேசத்தில் 19.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 29,089 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. வங்க தேச மக்கள்தொகையில் சுமார் 50 சதவிகிதம் பேர் கோவிட் தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Rafiq Maqbool

இந்நிலையில் கடந்த வாரம், 4.44 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை வங்க தேசத்துக்கு அனுப்புவதாக ஒப்புக்கொண்டது லிதுவேனியா. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்களிக்காததால், வங்க தேசத்துக்கு தடுப்பூசிகளை அனுப்புவதிலிருந்து பின் வாங்கியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism