Election bannerElection banner
Published:Updated:

Ma'Khia Bryant: ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நீதி கிடைத்த நாளில் பறிபோன மற்றொரு உயிர்... என்ன நடந்தது?

Ma'Khia Bryant
Ma'Khia Bryant ( Body Cam Footage | AP )

டேசர் உள்ளிட்ட மற்ற உபகரணங்களால் மகியாவைத் தடுத்திருக்க முடியாதா? அந்தக் காவலருக்கு அங்கே என்ன நிகழ்கிறது என தெரியுமா? அவர் சுடவில்லை எனில் என்ன நிகழ்ந்திருக்கும்?

ஒட்டுமொத்த உலகமும் ஒரு பெருந்தொற்றோடு போராடி கொண்டிருந்த போதும், ஒரு மரணம் வேறொரு போராட்டத்திற்கு வழிவகுத்தது. இயற்கை கொல்வது போதும், மனிதனை மனிதன் இன துவேஷத்தின் காரணமாகக் கொல்வது நிற்க வேண்டும் என அந்தப் போராட்டங்கள் தொடங்கின.

அமெரிக்காவின், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவல்துறை அதிகாரி டெரேக் சாவின் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வெளியான அதே நாள், அமெரிக்காவின் மற்றோர் மாகானத்தில் 16 வயது ஆப்பிரிக்க அமெரிக்க பெண் போலீஸ் துப்பாக்கிக்குப் பலியாகியிருக்கிறார்.

Ma'Khia Bryant
Ma'Khia Bryant

"என்னால் மூச்சு விட முடியவில்லை" என்ற இறுதி வார்த்தைகளோடு பலியானர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவர் மரணம் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின. இன வெறிக்கு எதிராக கிளர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், 'I cant breathe' என ஃப்ளாய்ட்டின் இறுதி வார்த்தைகளை பதாகைகளாக ஏந்தி போராடினார். இந்நிலையில், அவரின் மரணத்திற்குப் பதிலளிக்கும் தீர்ப்பில் மகிழ்ந்து, இது ஒரு புதிய தொடக்கம் என 'I can breathe' எனச் செய்தி பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், அதே அமெரிக்காவில் சில மைல் தூரத்தில், 'Say her name: Ma'Khia Bryant' என மீண்டும் ஒரு போராட்டம் தொடங்கியிருக்கிறது.

ஓஹாயோ மாகானத்தில் 911 எனும் எமர்ஜென்சி நம்பருக்கு ஒரு அழைப்பு வருகிறது. "இங்கே சண்டையிட்டுக் கொள்கிறார்கள், என் பாட்டியை தாக்கப் போகிறார்கள், கத்தியை கொண்டு என்னை தாக்க முயல்கிறார்கள்" என்கிறது ஒரு குரல். அங்கு போலீசார் விரைந்து செல்கிறார்கள். நிக்கோலஸ் ரியார்டன் எனும் அதிகாரியும் அங்கு செல்கிறார். அவரது உடையில் அணிந்திருந்த பாடி கேமரா மூலம் இந்தக் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.

நிக்கோலஸ் சம்பவ இடத்திற்கு செல்கிறார். அங்கே பல பெண்கள் சண்டையிடுகிறார்கள். அப்போது ஒரு பெண் இன்னொருவரால் தள்ளி விடப்படுகிறார். கீழே விழும் பெண்ணை பார்த்து என்ன நடக்கிறது எனக் கத்துக்கிறார் நிக்கோலஸ். அதற்குள் வேறு இரு பெண்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். அவர்களை நோக்கி சுடுகிறார் நிக்கோலஸ்.

'Say her name: Ma'Khia Bryant' போராட்டம்
'Say her name: Ma'Khia Bryant' போராட்டம்
Joshua A. Bickel | AP
துப்பாக்கியோடு நீண்டிருக்கும் கைகளும், சுருண்டு விழும் ஒரு பெண்ணும் வீடியோவில் பதிவாகிறார்கள். இப்போது உலகம் முழுக்க வைரலாக பரவும் வீடியோ இதுதான். நிக்கோலஸ்-ன் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான சிறுமி 16 வயதான மகியா பிரையன்ட்.

நிக்கோலஸ் அவருடைய பணியிலிருந்து தற்காலிகமாக விளக்கப்பட்டிருக்கிறார். நடந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. "மகியா கையில் கத்தி வைத்திருந்தார், அவர் மற்றோர் பெண்ணை தாக்கச் சென்றார். அதை தடுக்கவே நான் சுட்டேன்" என்கிறார் நிக்கோலஸ். போலீஸ் தரப்பில் இதுக்குறித்து வெளியிட்ட அறிக்கையிலும் இதையேதான் சொல்கிறார்கள். நேர்மையான வெளிப்படையான முறையில் விசாரணை நடக்கும் எனவும் உறுதி அளித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை: கழுத்தில் கால்வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி! - நீதிமன்றம் அதிரடி

மகியாவின் உறவினர்களோ, "எங்கள் மகியா அன்பானவள், அவள்தான் அவசர உதவி எண்ணுக்கு அழைத்ததே. அவள் போலீஸின் உதவியை எதிர்பார்த்தாள். அவர்களின் குண்டுகளை அல்ல!" என கண்ணீர் வடிக்கிறார்கள்.

'Say her name: Ma'Khia Bryant' போராட்டம்
'Say her name: Ma'Khia Bryant' போராட்டம்
Joshua A. Bickel | AP
டேசர் உள்ளிட்ட மற்ற உபகரணங்களால் மகியாவைத் தடுத்திருக்க முடியாதா? அந்தக் காவலருக்கு அங்கே என்ன நிகழ்கிறது என தெரியுமா? அவர் சுடவில்லை எனில் என்ன நிகழ்ந்திருக்கும்?

இப்படி பல கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டியிருக்கிறது. எது எப்படியாயினும் ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தவர்களை குற்ற பின்னணியுடனே இணைத்து பார்க்கும் முன்முடிவுகள்தான் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டுகளுக்கான மூல காரணம் என்பதே போராட்டக்காரர்களின் கருத்து.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு