Published:Updated:

பெண் வேடமிட்டு வீல்சேரில் வந்து மோனலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயன்ற நபர்... நோக்கம் என்ன?

மோனலிசா ஓவியம்

மிகவும் தனித்துவம் மிக்க ஓவியமான மோனலிசா ஓவியத்தின் மீது மாறுவேடத்தில் வந்த நபர் கேக் பூசியுள்ளார்.

பெண் வேடமிட்டு வீல்சேரில் வந்து மோனலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயன்ற நபர்... நோக்கம் என்ன?

மிகவும் தனித்துவம் மிக்க ஓவியமான மோனலிசா ஓவியத்தின் மீது மாறுவேடத்தில் வந்த நபர் கேக் பூசியுள்ளார்.

Published:Updated:
மோனலிசா ஓவியம்

பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி வரைந்த பிரபல மோனலிசா ஓவியம் உள்ளது. இந்த ஓவியத்தைப் பார்வையிட உலகின் பல இடங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஓவியத்தைச் சேதப்படுத்தும் வகையில் ஒருவர் நடந்துகொண்டுள்ளார்.

அதாவது, வயதான பெண் போல தலையில் விக் வைத்துக்கொண்டு சக்கர நாற்காலியில் வந்த ஓர் ஆண், மோனலிசா ஓவியத்தின் அருகில் வந்ததும், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து ஓவியத்தைச் சேதப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், ஓவியத்துக்கு புல்லட் ப்ரூஃப் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் அவரால் ஓவியத்தைச் சேதப்படுத்த முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து ஓவியத்தின்மீது கேக்கை வீசி, அதைச் சேதப்படுத்த முயன்றுள்ளார்.

அதையடுத்து அங்குள்ள காவலர்கள் அவரை அழைத்துச் சென்றனர். போகும்போது, `சில மனிதர்கள் பூமியைச் சேதப்படுத்த நினைக்கிறார்கள், பூமியைப் பற்றி நினையுங்கள்' எனக் கூறிக்கொண்டே சென்றார். அந்த மனிதரின் நோக்கம் என்ன என்பது புரியாமல் அங்குள்ள மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மோனலிசா ஓவியத்தைச் சேதப்படுத்தும் இந்த முயற்சி முதல்முறை நடந்ததல்ல. 1956-ம் ஆண்டு நடந்த இப்படிப்பட்ட முயற்சியில், யாரோ ஒருவர் ஆசிட் வீசியதன் விளைவாக மோனலிசா ஓவியத்தின் கீழ்ப்பகுதி சேதமடைந்தது. அதையடுத்துதான் ஓவியத்துக்கு புல்லட் ப்ரூஃப் பாதுகாப்பு போடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism