Published:Updated:

Corona:`ஊழியர்களின் அவசரகால மருத்துவச் செலவுகளுக்கு போனஸ்!’ - ஃபேஸ்புக் நிறுவனம்

மார்க் சக்கர்பெர்க் | Mark Zuckerberg
மார்க் சக்கர்பெர்க் | Mark Zuckerberg

ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஏற்கெனவே வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கியுள்ளோம்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த இந்த நோய்த்தொற்றுக்கு இந்தியா உட்பட பல நாடுகளும் பாதிப்புள்ளாகி உள்ளன. இதனால் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியது.

கொரோனா
கொரோனா

கொரோனோ வைரஸ் வேகமாகப் பரவியதை அடுத்து கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிசெய்யும் வாய்ப்பினை வழங்கியுள்ளன.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் 45,000 நிரந்தரப் பணியாளர்களுக்கு, நபருக்கு 75,000 ரூபாய் வீதம் போனஸாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் "சமூகத்தின் நலன் காக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. கூடுமானவரை வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஏற்கெனவே வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கியுள்ளோம்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

அவசரகால சூழலைச் சமாளிக்கும் விதமாக, வீட்டிலிருந்து பணிபுரிய தேவையான சூழல் மற்றும் அவசரகால மருத்துவச் செலவுகளுக்கு என ஒவ்வொரு நபருக்கும் 75,000 ரூபாயை போனஸாக அறிவித்துள்ளோம். கொரோனா பரவும் தன்மை குறையும் பொறுத்து அடுத்த அறிவுப்புகள் வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனாவை ஒரு தொற்று நோய் என்பதைத்தாண்டி பொருளாதராத்தைச் சீர்குலைக்கும் நிகழ்வாகவும் கருதவேண்டும். கொரோனா வைரஸ் இன்னும் தீவிரமடையும் பட்சத்தில், பொருளாதார வீழ்ச்சி இன்னும் தீவிரமடையும். மேலும் வேலைவாய்ப்பு இழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

முடங்கிய ஃபேஸ்புக்... ட்விட்டரில் செய்தி தட்டிய மார்க்!
முடங்கிய ஃபேஸ்புக்... ட்விட்டரில் செய்தி தட்டிய மார்க்!

இது தனி மனிதரின் வாழ்வை பெருமளவு பாதிக்கும். இதைத் தடுக்க உலககெங்கும் ஃபேஸ்புக் பணியாளர்கள் உள்ள பல்வேறு நாடுகளில் 3,000 சிறு தொழில்களின் மீது 100 மில்லியன் டாலரையும் முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு